நிலாவிலும் செவ்வாயிலும் வீடு..பரமசிவன் கோவில்..குரு பூர்ணிமா நாளில் நித்யானந்தா லைவ்

நிலாவிலும் செவ்வாய் கிரகத்திலும் வீடு கட்ட கைலாசா நிர்வாகம் ஏற்பாடுகளை செய்து வருகின்றன என்று கூறியுள்ளார் நித்யானந்தா.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நான் என் குரு பரம்பராவுக்கு ஆஃபர் செய்து 42வது சதுர்மஸ்யத்தை இந்த குரு பூர்ணிமா நாளில் தொடங்குகிறேன் என்று நித்யானந்தா கூறியுள்ளார். நித்தியானந்தா. நிலாவிலும், செவ்வாய் கிரகத்திலும் பரமசிவன் கோவில் கட்டப்போகிறேன் என்கிறார். கைலாசா நிர்வாகம் இந்த ஏற்பாடுகளை செய்து வருகின்றன என்றும் அவர் கூறியுள்ளார்.

திருவண்ணாமலையில் ஆசிரமம் அமைத்து அருளுரை கூறி வந்தார் நித்யானந்தா. பெங்களூருவில் பிடதியில் ஆசிரமம் அமைத்து குடியேறினார். அவர் மீது கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பல புகார்கள் வந்து கொண்டே உள்ளன.

நித்யானந்தா எத்தனையோ சர்ச்சையில் சிக்கினாலும் அவரது சீடர்களின் எண்ணிக்கை குறையவே இல்லை.
வழக்குகளில் இருந்து தப்பிக்க தலைமறைவானார். தனி நாடு வாங்கி கைலாசாவில் குடியேறினார். தங்க நாணயங்களை வெளியிட்டார். நித்தியானந்த மரணம் அடைந்துவிட்டார் என்றே செய்திகள் பரவின. அப்புறம்தான் அது வதந்தி அவரே கைப்பட கடிதம் எழுதி இருந்தார்.

சமாதி நிலை

சமாதி நிலை


கைலாசா, தனி நாடு என்று நித்தம் நித்தம் எதையாவது சொல்லிக்கொண்டிருந்த நித்தியானந்தா திடீரென்று அமைதியானதால் தான் அப்படி வதந்தி பரவியது. ஆனால், தனது உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அதற்காக தனது பக்தர்கள் பிராத்தனைகள் செய்ய வேண்டும் என்றும் சொல்லிக்கொண்டிருந்தார். தற்போது மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி இருக்கிறார்.

கோவில் கட்ட ஏற்பாடு

கோவில் கட்ட ஏற்பாடு

கைலாசா என்கிற தனி நாட்டினை உருவாக்கியிருப்பதாக சொல்லும் நித்தியானந்தா நிலவிலும் செவ்வாய் கிரகத்திலும் மனிதர்கள் குடியேறிய பின்னர் அங்கு பரமசிவன் கோவில் கட்ட ஏற்பாடுகள் நடந்து வருகின்றன என்கிறார். கைலாசா நிர்வாகம் இந்த ஏற்பாடுகளை செய்து வருகின்றன என்றும் அவர் சொல்கிறார்.

நேரலையில் நித்யானந்தா

நேரலையில் நித்யானந்தா

நித்தியானந்தா இது குறித்து ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். ஜூலை 13ஆம் தேதி ஆகிய நாளைய தினம் இந்திய நேரப்படி இரவு எட்டு முப்பது மணிக்கு நடைபெற இருக்கும் குரு பூர்ணிமா கொண்டாட்டத்திற்கு நேரடி சத்சங்கம் ஆற்றவும் பக்தர்களுக்கு தரிசனம் அளிக்கவும் இருக்கிறேன் என்று என்று தெரிவித்திருக்கிறார்.

கைலாசாவில் இருந்து பரமசிவன்

கைலாசாவில் இருந்து பரமசிவன்

அவர், சீடர்களின் பக்தர்களின் வாழ்வில் மட்டுமல்ல மானுட குலத்திற்கு மங்களம் வழங்க போகும் இந்த குருபூர்ணிமா தருணத்தில் நேரடியாக கைலாசத்தில் இருந்து பரமசிவன் அருளும் செய்தி இது என்கிறார்.
பரமசிவன் சக்திகளை வெளிப்படுத்துவது என்பது உயிரினங்களுக்கு புதிய இயல்பாக இருக்கும்.

சமாதி நிலை

சமாதி நிலை

இந்த மூன்று மாத இடைநிறுத்த சமாதியானது அதாவது ஏப்ரல் 13ஆம் தேதி முதல் ஜூலை 13ஆம் தேதி வரை பிரபஞ்சத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கும் மிகப்பெரிய சிறந்த ஒரு நிகழ்வாகும் . உங்கள் உயிர் இருப்பில் பரமசிவத்துவம் முழுமையாக வெளிப்படுகிறது என்கிறார்.

சந்திரன், செவ்வாயில் குடியிருப்புகள்

சந்திரன், செவ்வாயில் குடியிருப்புகள்

சந்திரன், செவ்வாய் கிரகத்தில் மனித குடியிருப்புகள் ஏற்படுத்தப்படும் போது அங்கு பரமசிவன் கோவிலையும் நிர்மாணிக்க கைலாச நிர்வாகம் முடிவெடுத்து இருக்கிறது . இதை அடுத்து கைலாச நிர்வாகம் சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகத்தில் மனித குடியேற்றத்திற்காக பணிபுரிந்து வரும் நிறுவனங்கள், நாடுகளுடன் இணைந்து வேலை செய்து கொண்டிருக்கிறது என்கிறார் நித்யானந்தா.

பக்தர்கள் மகிழ்ச்சி

பக்தர்கள் மகிழ்ச்சி


நித்யானந்தா தான் சமாதி நிலையில் இருப்பதாக மட்டுமே தொடர்ந்து கூறி வந்தார். தற்போது அவர் மீண்டும் நேரலையில் தோன்றுவதாக கூறப்படுவதால் அவரது சமாதி நிலை முடிவுக்கு வரும் என தெரிகிறது. நீண்ட இடைவேளைக்கு பிறகு நாளைய தினம் குரு பூர்ணிமா நாளில் மீண்டும் நேரலையில் தோன்ற இருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக அவரது சீடர்களும் பக்தர்களும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+