டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நாட்டில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும்? நிதி ஆயோக் உறுப்பினர் வி கே பால் அதிமுக்கிய தகவல்

Google Oneindia Tamil News

டெல்லி: நாட்டில் ஆசிரியர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்ட பிறகு, பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு எடுக்கப்படும் என நிதி ஆயோக் சுகாதாரத் துறை உறுப்பினர் வி கே பால் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் 2ஆம் அலையின் தாக்கம் தற்போது தான் மெல்லக் குறைந்து வருகிறது. கடந்த சில வாரங்களாகவே தினசரி கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்திற்கும் கீழாகக் குறைந்துள்ளது.

சிவசங்கர் பாபாவின் வலதுக்கரமாக இருந்த சுஷ்மிதா.6 மாதக் கை குழந்தையுடன் நள்ளிரவில் நீதிபதி முன் ஆஜர்!சிவசங்கர் பாபாவின் வலதுக்கரமாக இருந்த சுஷ்மிதா.6 மாதக் கை குழந்தையுடன் நள்ளிரவில் நீதிபதி முன் ஆஜர்!

இதையடுத்து ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்த பல்வேறு மாநிலங்களிலும் தற்போது புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.

பள்ளிகள் மூடல்

பள்ளிகள் மூடல்

கொரோனா 2ஆம் அலை காரணமாக முதலில் சிபிஎஸ்இ +2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாகப் பிரதமர் மோடி அறிவித்தார். அதைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களிலும் +2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டன. சிபிஎஸ்இ +2 மாணவர்களுக்கு 10, 11ஆம் வகுப்பு முழு ஆண்டு தேர்வு, +2 பொதுத்தேர்வின் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் பள்ளிகள் பல மாதங்களாகவே மூடப்பட்டுள்ளன.

மத்திய அரசு

மத்திய அரசு

இருப்பினும், நாட்டில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வரை வெளியாகவில்லை. ஆசியர்களுக்கு முதலில் தடுப்பூசி அளிக்கப்பட்ட பின்னரே, பள்ளிகள் திறப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில், இது பற்றி நிதி ஆயோக் சுகாதாரத் துறை உறுப்பினர் வி கே பால் கூறுகையில், பள்ளிகளை மீண்டும் திறக்க முடிவு செய்யும் போது நிறைய விஷயங்களை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்,

கொரோனா 3ஆம் அலை

கொரோனா 3ஆம் அலை

இது அரசு எடுக்க வேண்டிய முக்கியமான முடிவு. பள்ளிகளில் ஆசிரியர்களும் இதர பணியாளர்களும் இருப்பார்கள். எனவே அதையெல்லாம் கருத்தில் கொண்டே பள்ளிகளைத் திறப்பது குறித்து முடிவு எடுக்க வேண்டும்" என்றார். மேலும், கொரோனா 3ஆம் அலை நாட்டில் ஏற்பட்டால், அதில் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்பில்லை எனக் கூறியுள்ள உலக சுகாதார அமைப்பின் ஆய்வு முடிவுகளைக் சுட்டிக்காட்டிய அவர், அரசு இதில் சரியான முடிவை எடுக்கும் என்றார்.

முடிவு எடுக்கப்படும்

முடிவு எடுக்கப்படும்

மேலும், அவர் கூறுகையில், "கொரோனா பரவல் மீண்டும் அதிகரிப்பதால் பல்வேறு நாடுகளும் பள்ளிகளை மூட தொடங்கியுள்ளன. கொரோனா பாதிப்பு எந்த தீங்கு விளைவிக்காது என்ற அதீத நம்பிக்கையில் குழந்தைகளை, ஆசிரியர்களை ஆபத்தில் தள்ள நாங்கள் விரும்பவில்லை. ஆசிரியர்களுக்குத் தடுப்பூசி போட்ட பிறகு, பள்ளிகள் திறக்கப்படலாம். ஆனால், இது மிக முக்கிய விஷயம் என்பதால் தீவிர ஆலோசனைக்குப் பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும்" என்றார்.

English summary
Niti Aayog (health) member says Dr VK Paul, A lot of things need to be considered while deciding on reopening schools. For past many months schools are closed because of Corona.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X