ரிஷி சுனக்கை “கடத்துங்க”.. நெஹ்ராவை அனுப்புங்க! கோஹினூர் வைரத்தை “ஈசியா” மீட்க தொழிலதிபர் “ஐடியா”
டெல்லி: கோஹினூர் வைரத்தை மீட்க ரிஷி சுனக்கை கடத்தி வைத்துவிட்டு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆசிஷ் நெஹ்ராவை அனுப்பி கோஹினூர் வைரத்தை மீட்க வேண்டும் என்று பிரபல தொழிலதிபர் ஹர்ஷ் கோயங்கா தெரிவித்து உள்ளார்.
போரிஸ் ஜான்சன் ராஜினாமாவை தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பாக பிரிட்டன் பிரதமராக பதவியேற்ற லிஸ் டிரஸ் பொருளாதார சிக்கலை சமாளிக்க முடியவில்லை என்று கூறி பிரதமர் பதவியில் இருந்து விலகினார்.
இதனை அடுத்து பிரிட்டன் பிரதமருக்கான போட்டியில் இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் முதலிடத்தில் இருந்தார். முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன், நாடாளுமன்ற முன்னவர் பென்னி மார்டாண்டும் போட்டியிட இருந்தனர்.

போரிஸ், பென்னி விலகல்
நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு 100க்கும் அதிகமாக இருந்தால் மட்டுமே பிரதமர் தேர்தலில் போட்டியிட முடியும் என்ற விதி இருப்பதால் இருவரும் அதில் போட்டியிடுவதில் சிக்கல் ஏற்பட்டது. எம்பிக்கள் ஆதரவு குறைவாக இருந்த காரணத்தால் நேற்று போரிஸ் ஜான்சனும் அவரை தொடர்ந்து பென்னி மார்டாண்டும் அடுத்தடுத்து போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தனர்.

பிரதமரானார் ரிஷி சுனக்
இதனால் ரிஷி சுனக் பிரதமராகும் வாய்ப்பு பிரகாசமானது. இந்த நிலையில் நேற்று அவர் பிரதமராக அறிவிக்கப்பட்டார் பிரிட்டன் சட்டத்தின்படி நாட்டின் மூன்றாம் மன்னர் சார்லஸ் ரிஷி சுனக்கை பிரதமராக பதவியேற்குமாறு அழைப்பு விடுத்தார். இதனை தொடர்ந்து சார்லஸை சந்தித்து பிரதமராக பதவியேற்ற சுனக், நாட்டின் பொருளாதார நெருக்கடியை சீரமைப்பேன் என்று உறுதியளித்தார்.

ஆஷிஷ் நெஹ்ரா
பிரிட்டன் பிரதமராக பதவியேற்ற ரிஷி சுனக் இந்திய வம்சாவளி என்பதை வைத்து பலரும் சமூக வலைதளங்களில் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி ரிஷி சுனக் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ராவின் சாயலில் இருப்பதாக பலரும் ட்விட்டரில் மீம்களை வெளியிட்டு வருகிறார்கள்.

தொழிலதிபர் ட்வீட்
இந்த நிலையில் தொழிலதிபர் ஹர்ஷ் கோயங்கா ட்விட்டரில் ஒருபதிவை வெளியிட்டுள்ளார். "கோஹினூர் வைரத்தை மீட்க என் நண்பர் கொடுத்த யோசனை. 1. ரிஷி சுனக்கை இந்தியா அழைக்க வேண்டும். 2. தன்னுடைய மாமனார், மாமியாரை சந்திக்க செல்லும் சுனக் பெங்களூரு டிராபிக்கில் சிக்கும்போது அவரை கடத்த வேண்டும். 3. அவருக்கு பதிலாக பிரிட்டன் பிரதமராக ஆஷிஷ் நெஹ்ராவை அனுப்பினால் யாராலும் கண்டுபிடிக்க முடியாது. 4. நெஹ்ரா கோஹினூர் வைரத்தை மீட்பது தொடர்பாக சட்டம் கொண்டு வருவார்." என்று பதிவிட்டுள்ளார்.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications