Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

#well_done_Pragya .. இதுதான் இந்தியாவின் டாப் டிரெண்டிங்.. கொதிக்கும் மக்கள்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    சொந்த கட்சி எம்.பி மீது அதிரடி காட்டிய பாஜக

    டெல்லி: #well_done_Pragya இது தான் இந்தியாவின் டாப் டுவிட்டர் டிரெண்டிங் ஆக உள்ளது. இந்த டுவிட்டர் டிரெண்டிங்கை மிக வேகமாக செய்து வருகிறார்கள். இதை பார்த்து எப்படி டுவிட்டர் இந்தியா இதை அனுமதிக்கிறது என்று இந்தியா முழுவதும் மக்களும் கொதித்து போய் குரல் கொடுத்து வருகிறார்கள்.

    இந்த மோசமான டிரெண்டிங் எதற்கு என்றால் இந்தியாவின் தேசதந்தை மகாத்மா காந்தியை கொன்ற கோட்சேவை சிறந்த தேச பக்தர் என்று பிரக்யா சிங் தாகூர் நாடாளுமன்றத்தில் சொன்னதற்கு தான். இதை கேட்டு நேற்றே இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    பிரக்யாவின் இந்த கருத்துக்கு பாஜகவே கடும் எதிர்ப்பு தெரிவித்து கண்டனம் தெரிவித்துள்ளது. பிரக்யாவை பாதுகாப்பு குழு உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியுள்ளது. பாஜக தலைவர் ஜேபி நட்டா, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் என பாஜக தலைவர்கள் பலரும் கண்டித்துள்ளனர்.

    ராகுல் காந்தி தாக்கு

    ராகுல் காந்தி தாக்கு

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பிரக்யாவை பயங்கரவாதி பிரக்யா என்றும் அதனால் தான் பிரக்யா பயங்கராவதி கோட்சேவை தேசபக்தியாளர் என்ற புகழ்கிறார் என்று கடுமையாக தெரிவித்து இருந்தார்.

    இப்படி டிரெண்ட்

    இப்படி டிரெண்ட்

    ஆனால் துரதிருஷ்டவசமாக இந்தியாவுக்காக கடைசி மூச்சு வரை பாடுபட்ட மகாத்மா காந்தியை கொன்றவர்களை கொண்டாடுபவர்களை பாராட்டி டுவிட்டரில் டிரெண்டிங் ஆகி வருகிறது. அதுவும் #well_done_Pragya . என்ற பெயரில் டிரெண்டிங் ஆகி வருகிறது.

    குற்றவாளி

    ஒருவர் நாதுராம் கோட்சே இந்தியா (பாகிஸ்தான்) பிரிவினையை விரும்பாதவராக இருந்தார். அதற்காக அவர் கடுமையாக செயல்பட்டார். இது ஒரு தேசபக்தரின் செயல் இல்லையா என்றும், தேசபக்தியுள்ள ஒரு குற்றவாளி தான் நாதுராம் கேட்சே என்று தெரிவித்துள்ளார்.

    கொண்டாடுகிறார்கள்

    #well_done_Pragya என்று டுவிட்டரில் டிரெண்ட் ஆகுவது பார்த்து கொதித்து போய் பலரும் அதற்கு எதிராக கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். #well_done_Pragya போட்டு கொண்டாடுபவர்கள் மகாத்மாவை கொன்றவர்களை கொண்டாடுபவர்கள் என்று அனைவருக்கும் தெரியப்படுத்த விரும்புகிறேன். எல்லாம் காந்திக்கே வெளிச்சம் என ஒருவர் கூறியுள்ளார்.

    எப்படி அனுமதிக்கிறது

    #well_done_Pragya என்று டுவிட்டரில் டிரெண்ட் ஆகுவதன் மூலம் இந்தியாவில் இது எல்லாம் என்ன தவறு என்பதையே காட்டுகிறது. டுவிட்டர் இந்தியா எப்படி இதை அனுமதிக்கிறது என்று ஒருவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+