டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சிறப்பாக செயல்பட்ட திருப்தியுடன் விடைபெறுகிறேன் - சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பாப்டே உருக்கம்

இந்திய தலைமை நீதிபதி (CJI) பதவியிலிருந்து விடைபெறும் எஸ்.ஏ.போப்டே இன்று உச்சநீதிமன்றத்தில் இருந்து, தனது சிறந்ததைச் செய்த திருப்தியுடன் மகிழ்ச்சி, மனதிற்கு பிடித்த நினைவுகளுடன் வெளியேறுவதாகக் கூறினார்.

Google Oneindia Tamil News

டெல்லி: நான் என்னால் முடிந்ததைச் செய்தேன் என்ற திருப்தியுடன் நான் புறப்படுகிறேன் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ பாப்டே கூறியுள்ளார். 48வது தலைமை நீதிபதி என்.வி.ரமணாவிடம் நான் செங்கோலை ஒப்படைக்கிறேன். அவர் நீதிமன்றத்தை மிகவும் சிறப்பாக வழிநடத்துவார் என்று நான் நம்புகிறேன் என்றும் பாப்டே உருக்கமாக தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ரஞ்சன் கோகாய் ஓய்வு பெற்றதையடுத்து உச்ச நீதிமன்றத்தின் 47ஆவது தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டே கடந்த 2019ஆம் ஆண்டு பதவியேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இரண்டு ஆண்டு காலம் தலைமை நீதிபதியாக பதவி வகித்த எஸ். ஏ பாப்டே இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார்.

I did my best: Chief Justice of India SA Bobde bids farewell to Supreme Court

வரலாற்று சிறப்புமிக்க அயோத்தி தீர்ப்பு உட்பட பல முக்கிய வழக்குகளின் வாதங்களை கேட்டு தீர்ப்பு வழங்கிய தலைமை நீதிபதி போப்டே, 2019 நவம்பரில் 47 வது தலைமை நீதிபதியாக பதவியேற்றார். கொரோனா தொற்றுநோய்களின் போது வீடியோ கான்பரன்சிங் மூலம் உச்ச நீதிமன்றம் கொரோனா காலத்திலும் தொடர்ந்து செயல்படுவதை அவர் உறுதி செய்தார்.

இன்று பணி ஓய்வு பெறும் எஸ் ஏ. பாப்டேவிற்கு பிரிவு உபசார விழா நடைபெற்றது. விழாவில் அவர், உணர்ச்சி பெருக்குடன் பேசினார். கடைசி நாளில் கலவையான உணர்வுகள் என்னுள் ஏற்படுத்தியுள்ளது. அதை என்னால் விவரிக்க முடியாத அளவிற்கு கடினமாக உள்ளது. இதுவரை நான் இதுபோல உணர்ந்ததில்லை.

இந்த நீதிமன்றத்தில் இதுவரை நான் சிறப்பாக மன நிறைவுடன் செயல்பட்டேன். பார் கவுன்சிலில் மட்டுமல்லாது வழக்கறிஞர்களுடன் சிறப்பாக செயல்பட்டேன். அருமையான வாதங்கள், சிறந்த தீர்ப்புகள் என அனைவரிடமும் நல்லெண்ணத்துடன் நடந்து கொண்டேன் என்ற நம்பிக்கையுடன் விடை பெறுகிறேன்.

இத்துனூண்டு மாஸ்க்.... அபராதமா? நானும் ரவுடிதான்- தஞ்சை போலீசாருடன் மோதிய இளம் பெண்- வைரலான வீடியோ இத்துனூண்டு மாஸ்க்.... அபராதமா? நானும் ரவுடிதான்- தஞ்சை போலீசாருடன் மோதிய இளம் பெண்- வைரலான வீடியோ

நீதிபதியாக 21 ஆண்டுகளுக்குப் பிறகு தான் பதவியில் இருந்து விலகுவதாகவும், இது உச்ச நீதிமன்றத்தில் தனது மிகச்சிறந்த அனுபவமாகவும், சகோதர நீதிபதிகளுடனான நட்புறவு அருமையாகவும் இருந்தது என்றும் தெரிவித்தார்.

நான் என்னால் முடிந்ததைச் செய்தேன் என்ற திருப்தியுடன் நான் புறப்படுகிறேன். 48வது தலைமை நீதிபதி என்.வி.ரமணாவிடம் நான் செங்கோலை ஒப்படைக்கிறேன். அவர் நீதிமன்றத்தை மிகவும் சிறப்பாக வழிநடத்துவார் என்று நான் நம்புகிறேன் என்று பாப்டே உருக்கமாக தெரிவித்துள்ளார்.

English summary
Chief Justice of India, SA Bobde said on Friday that he is retiring from office with the satisfaction of having done his best to lead the institution.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X