இங்கெல்லாம் போறதுக்கு எனக்கு தைரியம் இல்லப்பா.. ஆனந்த் மகிந்திரா அச்சப்படும் சாலைகளை பாருங்க!
டெல்லி: ''இந்த சாலைகளுக்கு எல்லாம் நான் போவதற்கு வாய்ப்பே கிடையாது. எனக்கு இந்த அளவுக்கு தைரியம் கிடையாது என்று நான் ஒப்புக்கொள்கிறேன்" என பிரபல தொழிலதிபர் ஆனந்த மகிந்திரா, சோஜிலா மலை சாலை அடங்கிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
இந்தியாவின் பிரபலமான தொழில் அதிபர்களில் ஒருவர் ஆனந்த் மகிந்திரா. மகிந்திரா குழுமங்களின் தலைவரான ஆனந்த் மகிந்த்ரா ட்விட்டரில் படு ஆக்டிவாக இருக்கக் கூடியவர்.
இவரது ட்விட்களுக்கே தனி ரசிகர் பட்டாளம் இணையத்தில் இருக்கிறதென்றே சொல்லலாம். அந்த அளவுக்கு ஆனந்த் மகிந்திராவின் ட்விகள் இணையத்தில் பிரபலம்.

ஆனந்த் மகிந்திரா
10 மில்லியனுக்கும் மேற்பட்ட பாலோயர்களை கொண்டுள்ள ஆனந்த் மகிந்திரா, தனது ட்விட் பக்கத்தில் தனக்கு கிடைக்கும் சுவாரசியமான தகவல்கள், துணுக்குகள், தன்னம்பிக்கையூட்டும் நபர்களின் கதைகள், வீடியோக்களை அடிக்கடி வெளியிடுவார். சில அசாத்திய திறமைகளுடன் செய்யப்படும் வேலைப்பாடுகளை பார்த்து பாராட்டும் ஆனந்த் மகிந்திரா, சில சமயம் அத்தகைய நபர்களுக்கு உதவுவதாகவும் உறுதி அளித்து அதன்படி உதவிகளையும் செய்து வருகிறார்.

அழகான ஆபத்தான சாலைகள்
இப்படி இவருடைய பல பதிவுகள் சமூக வலைத்தளங்களில் அதிக அளவில் டிரெண்ட் ஆகி வருகிறது. அந்த வகையில் வகையில் தான் இன்று அவர் வெளியிட்டுள்ள ஒரு வீடியோ நெட்டிசன்கள் மத்தியில் டிரெண்டாகி வேகமாக பரவி வருகிறது. Traveling Bharat என்ற ட்விட்டர் பக்கத்தில், இந்தியாவின் அழகான ஆபத்தான சாலைகள் என்று 10 சாலைகளையும் அது இருக்கும் இடங்களும் பகிரப்பட்டு இருந்தது.

நான் போவதற்கு வாய்ப்பே கிடையாது
மலைப்பாங்கான பகுதிகள், பள்ளத்தாக்குகள் என பார்ப்பதற்கே மிரட்சியை தரும் வகையில் இந்த சாலைகள் இருந்தன. இந்த பதிவை தனது ட்விட்டர் பக்கத்தில் இருந்து ஆனந்த் மகிந்திரா, "அற்புதமான இந்த பதிவை பகிர்ந்த @TravelingBharat -க்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இதில் உள்ள பல ட்விட்களை நான் ரிடுவிட் செய்து எனது சமூக வலைத்தள பக்கத்தில் வைத்துக்கொண்டேன். ஆனால், இந்த சாலைகளுக்கு எல்லாம் நான் போவதற்கு வாய்ப்பே கிடையாது. எனக்கு இந்த அளவுக்கு தைரியம் கிடையாது என்று நான் ஒப்புக்கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

மகிந்திரா தார் வாகனம் தான் இந்த சாலைக்கு ஏற்றது
கார்கில் பகுதியில் உள்ள சோஜிலா மலை சாலையை குறிப்பிட்டு ஆனந்த் மகிந்திரா இவ்வாறு பதிவிட்டு இருக்கிறார். ஆனந்த் மகிந்திராவின் இந்த ட்விட் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. பலரும் ஆனந்த் மகிந்திராவின் ட்விட் பதிவுக்கு கீழே தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். நெட்டிசன் ஒருவர் கூறுகையில், "மகிந்திரா தார் வாகனம் தான் இந்த சாலைக்கு ஏற்றது. உங்களின் கார் மீது நீங்கள் நம்பிக்கை வைக்கலாம்" என்று பதிவிட்டு இருக்கிறார்.

மற்றொரு நெட்டிசன் கருத்து
அதேபோல் மற்றொரு நெட்டிசன் கூறுகையில், "சோஜிலா மலைப்பாதையில் ஆபத்து எதுவும் இல்லை. இந்த சாலை சற்று குறுகலானது. அனைத்து நிலப்பரப்புகளும் சேதம் அடைந்து இருக்கும். கார்களிலும் இரு சக்கர வாகனங்களிலும் எளிதாக இதில் செல்லலாம்" என்று பதிவிட்டு இருக்கிறார்.

இந்த பயணம் அருமையான அனுபவமாக இருந்தது
மற்றொரு நெட்டிசன் கூறுகையில், "இதில் பயணிப்பவர்களுக்கு தைரியம் என்று இல்லை. வாழ வேண்டிய கட்டாயம் வேறு வழியில்லை" என்று பதிவிட்டு இருக்கிறார். நெட்டிசன்கள் பலரும் தாங்கள் இந்த சாலையில் பயணித்து இருப்பதாகவும் இந்த பயணம் அருமையான அனுபவமாக இருந்தது என்றும் தங்கள் பயண அனுபவம் குறித்தும் ஆனந்த் மகிந்திராவின் பதிவுகளுக்கு கீழே பதிவிட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications