ஹெலிகாப்டர் விபத்தில் உயிர் தப்பிய கேப்டன் வருண் சிங்கிற்கு பெங்களூர் மருத்துவமனையில் சிகிச்சை
டெல்லி: குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிருடன் மீட்கப்பட்ட க்ரூப் கேப்டன் வருண் சிங், தற்போது 45% தீ காயங்களுடன் வெலிங்டன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், தற்போது அவர் பெங்களூருவில் உள்ள விமானப்படை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்
சூலூர் ஏர்ஃபோர்ஸில் இருந்து வெலிங்டன் பயிற்சி மையத்திற்கு முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 14 பேருடன் சென்ற எம்ஐ ரக ஹெலிகாப்டர் நேற்று விபத்தில் சிக்கியது.
குன்னூர் அருகே நடந்த இந்த கோர விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உள்ளிட்ட 13 பேரும் உயிரிழந்தனர்.

கோர விபத்து
இந்த விபத்திற்கான காரணம் எதுவும் தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும், மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இன்று காலை தான் ஹெலிகாப்டரின் கருப்பு பெட்டி மீட்கப்பட்டுள்ளது. இதை ஆய்வு செய்யும் போது விபத்து குறித்துப் பல முக்கிய தகவல்கள் தெரிய வரும். கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர் தள்ளாடியபடி மரத்தில் மோதி விழுந்து எரிந்ததாகச் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

45% தீக்காயம்
இந்த மோசமான விபத்தில் ஹெலிகாப்டரில் பயணித்த 14 பேரில் க்ரூப் கேப்டன் வருண் சிங் தவிர மற்ற 13 பேரும் உயிரிழந்தனர். முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உள்ளிட்டோரும் இந்த விபத்தில் உயிரிழந்தனர். குரூப் கேப்டன் வருண் சிங், 45 சதவீத தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என்றாலும்கூட அவரது உடல்நிலை சீராகவே உள்ளதாகக் கூறப்படுகிறது.

தீவிர சிகிச்சை
தற்போது அவர் வெலிங்டனில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், மேல் சிகிச்சைக்காக அவரை பெங்களூருவில் உள்ள விமானப்படை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ராணுவம் முடிவெடுத்துள்ளது. விமான ஆம்புலன்ஸ் மூலம் பெங்களூருவில் விமானப்படை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார். இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறுகையில், "குரூப் கேப்டன் வருண் சிங் வெலிங்டனில் உள்ள ராணுவ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார். அவரது உயிரைக் காப்பாற்ற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன" என்றார்.

யார் இந்த வருண் சிங்
இந்த ஆண்டு சுதந்திர தினத்தன்று தான், லைட் காம்பாட் ஏர்கிராஃப்ட் (LCA) படைப்பிரிவில் பைலட்டாக இருந்த விங் கமாண்டர் வருண் சிங்கிற்கு அவரது துணிச்சலான சாதனைகளுக்காக இந்தியாவின் மூன்றாவது மிக உயர்ந்த விருதான சவுர்ய சக்ரா விருது வழங்கப்பட்டது.

பாதுகாப்புத் துறை அமைச்சகம்
இந்த விபத்து தொடர்பாகப் பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "விங் கமாண்டர் வருண் சிங் கடந்த ஆண்டு முதல் விமானக் கட்டுப்பாட்டு அமைப்பு மற்றும் பிரஷரைசேஷன் சிஸ்டத்தை கண்காணிக்கும் பணியில் இருந்தார். கடந்த காலத்தில் ஒரு முறை, அவர் இயக்கிய விமானத்தின் காக்பிட் பிரஷரைசேஷன் குறைய தொடங்கியது. அப்போது விமானம் கட்டுப்பாட்டை இழப்பதை அவர் சரியாகக் கண்டுகொண்டார்.
Recommended Video

அசாதாரண வீரர்
அப்போது திடீரென விமானம் மளமளவெனச் சரியத் தொடங்கியது. காக்பிட் அழுத்தம் குறைந்ததால் அப்போது அனைவருக்கும் மயக்கம் ஏற்படும் சூழல் கூட ஏற்பட்டது. இருப்பினும், விமானத்தை மீண்டும் வருண் சிங் கட்டுக்குள் கொண்டு வந்தார். விமானம் 10 ஆயிரம் அடி உயரத்தில் பறந்த போது, அந்த விமானம் மீண்டும் கட்டுப்பாட்டை இழந்தது. இதுபோன்ற சமயத்தில் விமானியின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் என்பதால் விமானத்தை விட்டு அவர்கள் வெளியேறிவிடலாம். இருப்பினும், வருண் சிங் அதைச் செய்யாமல், அந்த இக்கட்டான சூழலிலும் கூட விமானத்தைக் கட்டுக்கோப்பாக இயக்கி தரையிறக்கினார். அப்படிப்பட்ட சிறந்த வீரர் தான் வருண் சிங்" என்றார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications