இந்தியாவில் கொரோனா 2-வது அலைக்கு.. மதக் கூட்டங்களே காரணம்.. ஐ.சி.எம்.ஆர் ஆய்வில் தகவல்!
டெல்லி: மதக் கூட்டங்கள் நடத்தியதே இந்தியாவில் கொரோனா வைரஸ் 2-வது அலைக்கு காரணம் என்று ஐ.சி.எம்.ஆர் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலையின் தாக்கம் அதிகமாக உள்ளது. முதல் அலையில் கருணை காட்டிய கொரோனா 2-வது அலையில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
இந்தியாவில் தினமும் 3,00,000-க்கும் அதிகமான பாதிப்புகள் ஏற்படுகின்றன. தினமும் 4,000-க்கும் மேற்பட்ட மரணங்கள் நிகழந்து வருகின்றன.

மதக் கூட்டங்கள்தான் காரணம்
இந்த நிலையில் கட்டுப்பாடற்ற மதக் கூட்டங்களே இந்தியாவில் கொரோனா 2-வது அலை பரவ காரணம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்(ஐ.சி.எம்.ஆர்) நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக ஐ.சி.எம்.ஆர் ஆய்வு கூறியதாவது:- இரண்டாவது அலைக்கு காரணம் என்று நம்பப்படும் மரபணு மாற்றமடைந்த கொரோனா வைரஸ் வெளிநாட்டு பயணிகளால் அறிமுகப்படுத்தப்பட்டு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் மதக் கூட்டங்களில் கலந்துகொள்பவர்களால் நாட்டிற்குள் பரப்பப்பட்டது.

பரிமாண வளர்ச்சி
ஆரம்பகால வைரஸ் பரிமாற்றங்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நடமாட்டங்கள் மற்றும் மதக் கூட்டங்களை நடத்துதல் ஆகியவற்றின் மூலம் ஏற்பட்டதை நாம் காணலாம். ஆரம்ப கட்ட மாதிரி வகைகளில் காணப்பட்ட அமினோ அமில பிறழ்வுகளின் சுயாதீனமான அடையாளம் தற்போதைய புழக்கத்தில் உள்ள பரிணாம வளர்ச்சியைக் குறிக்கிறது என்று ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.

நோயெதிர்ப்பு சக்தியில் இருந்து தப்பித்தல்
இந்தியாவில் மரபணு மரணமடைந்த B.1.1.7 என்ற வைரஸ், B.1.351 என்ற மரபணு வைரஸ், தற்போது புதியதாக கண்டறியப்பட்ட B.1.617 என்று வகைப்படுத்தப்படும் மரபணு மாற்றமடைந்த வைரஸ் தொற்றை அதிகப்படுத்துதல், நோயெதிர்ப்பு சக்தியில் இருந்து தப்பித்தல் ஆகியவற்றை செய்வது மிகவும் கவலைக்குரியது என்று ஐ.சி.எம்.ஆர் கூறுகிறது. சமீபத்தில் அடையாளம் காணப்பட்ட (B.1.617) வைரஸ் ஸ்பைக் புரதத்தில் E484Q மற்றும் L452R பிறழ்வு ஏற்பட்டு (பொதுவாக இரட்டை விகாரி என
அழைக்கப்படுகிறது) அதிக பரிமாற்ற வீதத்தைக் கொண்டதாகக் கருதப்படுகிறது.

மகாராஷ்டிராவில் காணப்பட்டன
2020-ம் ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் இருந்த வைரஸ் பகுப்பாய்வுகள் ஸ்பைக் புரதத்தில் E484Q பிறழ்வு இருப்பதை வெளிப்படுத்தின. இவை மகாராஷ்டிரா மாநிலத்தில் மார்ச் மற்றும் ஜூலை 2020-ல் காணப்பட்டன. மற்றொரு பிறழ்வான ஸ்பைக் புரதத்தில் உள்ள N440K அமினோ அமிலம்( நோயெதிர்ப்பு சக்தியில் இருந்து தப்பிக்கும் திறன் கொண்டது) தெலுங்கானா, ஆந்திரா மற்றும் அசாமில் மாநிலங்களில் மே முதல் காணப்பட்டது என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹரித்வார் கும்பமேளா
ஹரித்வாரில் நடந்த கும்பமேளாவில் லட்சக்கணக்க்கானோர் கலந்து கொண்டனர். இதில் பலருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இதுவே நாட்டில் கொரோனா பரவ முதற்காரணம் என்று பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்து அமைப்பினர், மத குருக்கள் இந்த குற்றச்சாட்டை மறுத்து வருகின்றனர்.
-
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா?












Click it and Unblock the Notifications