Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உறையவைக்கும் குளிர்.. டெல்லி உள்பட 4 மாநிலங்களுக்கு ரெட் அலர்ட்.. தமிழ்நாடு நிலவரம் இதுதாங்க.. ஆஹா

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவில் பல மாநிலங்களில் தற்போது குளிர், மூடுபனி அதிகம் நிலவி வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் குளிர் அலை வீசி வருவதால் இந்தியாவில் 4 மாநிலங்களுக்கு ரெட் அலர்ட்டும், 2 மாநிலங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்டும் விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது ஒருபுறம் இருக்க தமிழ்நாட்டில் குளிர் எப்படி இருக்கும்? என்ற தகவலும் தற்போது வெளியாகி உள்ளது.

இந்தியாவில் டிசம்பர் இறுதி மற்றும் ஜனவரி மாதத்தில் குளிர்வாட்டி வதைப்பது வாடிக்கையான ஒன்றாகும். மேலும் பனிமூட்டமும் அதிகமாக இருக்கும். இதனால் ஆண்டுதோறும் பல மாநில மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த ஆண்டும் குளிர்வாட்டி வதைத்து வருகிறது. குறிப்பாக வடக்கு மற்றும் வடமேற்கு பகுதிகளில் உள்ள மாநிலங்களில் கடும் குளிர், மற்றும் பனிமூட்டம் நிலவி வருகிறது.

 கடும் குளிர்

கடும் குளிர்

தலைநகர் டெல்லி, ஹரியானா, உத்தர பிரதேசம், பஞ்சாப், பீகார், ராஜஸ்தான், இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட், மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்கள் தற்போது கடும் குளிர் உள்ளது. உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் மட்டும் கடும் குளிரால் மாரடைப்பு, பக்கவாதம் ஏற்பட்டு ஒரேநாளில் 25 பேர் வரை இறந்துள்ளனர் என்றால் அங்கு நிலவும் குளிரை நீங்கள் சிந்தித்து பார்த்து கொள்ளுங்கள். டெல்லியை பொறுத்தவரை குறைந்தபட்ச வெப்பநிலை 1.8 டிகிரி செல்சியஸ் வரை குறைந்துள்ளது. ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா, மத்திய பிரதேச மாநிலங்களில் வெப்பநிலை மிகவும் குறைந்து உள்ளது. மேலும் மூடுபனி நிலவி வருகிறது.

மக்கள் பாதிப்பு

மக்கள் பாதிப்பு

காலை 11 மணி என்றாலும் கூட எதிரே வரும் நபர்கள் தெரியாத வகையில் டெல்லி உள்பட பல மாநிலங்களில் எதிரே வரும் நபர்கள் தெரியாத வகையில் பனிமூட்டம் நீடித்து வருகிறது. வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி செல்கின்றன. மேலும் விமானம், ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஏராளமான விமானங்கள் தரையிறங்க முடியாமல் பிற இடங்களுக்கு திருப்பி விடப்பட்டன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது.

4 மாநிலங்களுக்கு ரெட் அலர்ட்

4 மாநிலங்களுக்கு ரெட் அலர்ட்

இந்நிலையில் தான் தற்போது இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று புதிய தகவலை வெளியிட்டுள்ளது. அதன்படி குளிர் அலை வீசி வருவதால் பஞ்சாப், ஹரியானா, டெல்லி, உத்தர பிரதேசம் ஆகிய 4 மாநிலங்களுக்கு குளிருக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் ராஜஸ்தான், பீகார் ஆகிய 2 மாநிலங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நாளை வரை இந்நிலை தொடரும். இந்த மாநிலங்களில் நாளை மூடுபனி இருக்கும். அதன்பிறகு வடமாநிலங்களில் ஜனவரி 10ம் தேதி முதல் குளிர் என்பது படிப்படியாக குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தப்பிய தமிழ்நாடு

தப்பிய தமிழ்நாடு

இந்திய வானிலை ஆய்வு மையம் குளிர் தொடர்பாக எச்சரிக்கை விடுத்த மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு இடம்பெறவில்லை. இருப்பினும் தமிழ்நாட்டில் குளிர் அலை வீச்சால் ஏற்படும் குளிரை விட வழக்கம்போல் நிலவும் பனி பொழிவு இருக்கலாம் என கூறப்படுகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதி உள்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் இரவிலும், அதிகாலையிலும் கடும் குளிர் நிலவி வருகிறது. சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகைக்கு பிறகு படிப்படியாக குளிர் குறைய தொடங்கும் என வானிலை ஆய்வு மைய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+