Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உஷார்.. ஏப்ரலில் 16 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகளுக்கு தடை! காரணத்தை தெரிஞ்சுகிட்டு பாதுகாப்பாக இருங்க!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவில் ஏப்ரல் மாதத்தில் மட்டும் 16.66 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரியில் இருந்து ஏப்ரல் வரை மொத்தம் 67 லட்சத்துக்கும் அதிகமான வாட்ஸ்அப் கணக்குகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள சம்பவம் நடந்துள்ளது.

இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் செல்போனில் தகவல்கள் பரிமாறும் தளமாக வாட்ஸ்அப் மாறியுள்ளது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசமின்றி அனைத்து தரப்பினரும் இதனை பயன்படுத்தி வருகின்றனர்.

சொல்லப்போனால் கொரோனா காலத்தை தொடர்ந்து பல்வேறு பள்ளி, கல்லூரிகளில் பாடங்கள் குறித்த விபரங்கள் அனைத்தும் வாட்ஸ்அப் குழுக்கள் மூலமாக பகிரப்பட்டு வருகிறது.

வாட்ஸ்அப் நிறுவனம் நடவடிக்கை

வாட்ஸ்அப் நிறுவனம் நடவடிக்கை

இந்த வாட்ஸ்அப் தளத்தை தவறாக பயன்படுத்தாமல் இருக்கவும், பயனாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் அந்த நிறுவனம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தீங்கு விளைவிக்கும் செயல்பாட்டை வாட்ஸ்அப் மூலம் செய்யும் நபர்களின் கணக்கை அந்த நிறுவனம் தடை செய்து வருகிறது.

16.66 லட்சம் கணக்குகள் தடை

16.66 லட்சம் கணக்குகள் தடை

அந்த வகையில் ஏப்ரல் மாதத்தில் இந்தியாவில் 16.66 லட்சம் கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து வாட்ஸ்அப் நிறுவனம் சார்பில் மாதாந்திர அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், ‛‛பயனர்கள் அளித்த புகார்களின் அடிப்படையில் மொத்தம் 122 வாட்ஸ்அப் கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளது. அதோடு வாட்ஸ் அப்பில் தீங்கு விளைவிக்கும் செயல்பாட்டை தடுக்கும் முனைப்பில் நிறுவனம் சார்பில் 16.66 லட்சம் கணக்குகளைத் தடை செய்துள்ளது.

தடை ஏன்?

தடை ஏன்?

நாங்கள் குற்றம் நடைபெறுவதை தடுப்பதில் அதிக கவனம் செலுத்துகிறோம். ஒரு தவறு நடந்த பிறகு அதற்கு தீர்வு காண்பதை விட முன்கூட்டியே அதனை தடுப்பது சிறந்தது. இதை சிறப்பாக கையாள நாங்கள் விரும்புகிறோம். இதனால் வாட்ஸ்அப் விதிமுறைப்படி ஒரு பயனாளரின் கணக்கு மதிப்பிடப்படும். அதில் அவர் வாட்ஸ்அப் செயலியை தவறாக பயன்படுத்துகிறார் என்று தெரிய வரும்போது அவரது கணக்கை தடை செய்கிறோம்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது பாலியல் துன்புறுத்தல், சட்டவிரோத செயல், வாட்ஸ்அப் விதிமுறைகள் மீறல் உள்ளிட்டவை தொடர்பான புகார்களால் கணக்குகள் தடை செய்யப்பட்டு வருகின்றன.

 இதற்கு முன்பு எவ்வளவு?

இதற்கு முன்பு எவ்வளவு?

முன்னதாக கடந்த மார்ச் மாதம் 18 லட்சம் கணக்குகளும், பிப்ரவரியில் 14.26 லட்சம் கணக்குகளும் ஜனவரியில் 18.58 லட்சம் கணக்குகளும் தடை செய்யப்பட்டு இருந்தது. இதையடுத்து ஏப்ரல் மாதம் மட்டும் 16.66 லட்சம் கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளன. அதன்படி கடந்த 4 மாதத்தில் மட்டும் இந்தியாவில் 67 லட்சத்துக்கும் அதிகமான வாட்ஸ்அப் கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+