Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"ரத்தம் சிந்துவதால் ஒரு பிரச்சினையும் தீராது".. ரஷ்யாவுக்கு எதிரான வாக்கெடுப்பை புறக்கணித்த இந்தியா

Subscribe to Oneindia Tamil

டெல்லி: உக்ரைன் மீது போரிட்டு வரும் ரஷ்யாவை ஐநா மனித உரிமை கவுன்சிலில் இருந்து இடைநீக்கம் செய்வதற்கான வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தது.

Recommended Video

    எதற்கும் அஞ்சாத India | UN suspends Russia from Human Rights Council | Oneindia Tamil

    உக்ரைன் மீது ரஷ்யா கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக போரிட்டு வருகிறது. உலக நாடுகள் எத்தனையோ முறை அறிவுறுத்தியும் ரஷ்யா தனது முடிவிலிருந்து பின் வாங்கிக் கொள்ளவில்லை.

    உக்ரைனில் ரஷ்யா நடத்தி வரும் சேதத்தை சீரமைக்க இன்னொரு தலைமுறையாகும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உருக்கமாக தெரிவித்திருந்தார். இந்த நேரத்தில் உக்ரைன் மீது ரஷ்யா நடத்தும் தாக்குதல்களை போர் குற்றமாக அமெரிக்கா அறிவித்தது.

    ரஷ்யா நீக்கம்

    ரஷ்யா நீக்கம்

    ஐநா மனித உரிமை கவுன்சிலில் இருந்து ரஷ்யாவை நீக்குவதற்கான தீர்மானத்தை அமெரிக்கா கொண்டு வந்தது. இந்த தீர்மானத்தின் மீது ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த தீர்மானத்தை ஆதரித்து 93 நாடுகள் வாக்களித்தன. இதற்கு எதிராக 24 நாடுகள் வாக்களித்தன.

    58 நாடுகள்

    58 நாடுகள்

    இந்தியா உள்பட 58 நாடுகள் இந்த வாக்கெடுப்பை புறக்கணித்துள்ளன. இந்த நிலையில் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்து வாக்களித்ததால் இந்த தீர்மானம் வெற்றி பெற்றது. இதையடுத்து ரஷ்யாவை ஐநா மனித உரிமை கவுன்சிலில் இருந்து தற்காலிகமாக நீக்குவதாக அறிவிக்கப்பட்டது.

    ஐநா பாதுகாப்பு கவுன்சில்

    ஐநா பாதுகாப்பு கவுன்சில்

    கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை ஐநா பாதுகாப்பு கவுன்சில், ஐநா பொது சவை , ஐநா மனித உரிமைகள் கவுன்சில் ஆகியவற்றில் ரஷ்யாவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட 8 தீர்மானங்களையும் இந்தியா நடுநிலை வகித்து வாக்கெடுப்பை புறக்கணித்துள்ளது. ஐநா மனித உரிமை கவுன்சிலில் நடந்த வாக்கெடுப்பில் ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தர தூதர் டிஎஸ் திருமூர்த்தி கலந்து கொண்டார்.

    உயிர்களை காவு வாங்குதல்

    உயிர்களை காவு வாங்குதல்

    அவர் கூறுகையில் அப்பாவி மக்களின் உயிர்களை காவு வாங்குவதாலோ அல்லது ரத்தம் சிந்துவதாலோ எந்த பிரச்சினைக்கும் ஒரு தீர்வு கிடைக்காது. இந்தியா எப்போதுமே அமைதி நிலவுவதையே விரும்புகிறது. வன்முறைக்கு உடனடி முடிவு கொண்டு வர வேண்டும். பேச்சுவார்த்தை மூலமே அனைத்துக்கும் தீர்வு காண முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.

    மோசமான சூழல்

    மோசமான சூழல்

    அண்மைக்காலமாக நடந்து வரும் மோசமான சூழல்கள் கவலையளிக்கின்றன. அனைத்து பிரச்சினைகளும் முடிவுக்கு வர வேண்டும். மனித உயிர்கள் ஆபத்தான கட்டத்தில் இருக்கும் போது ராஜாங்க ரீதியிலான தீர்வை மட்டுமே கையில் எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.

    புச்சா சம்பவம்

    புச்சா சம்பவம்

    அண்மையில் புச்சாவில் நடந்த தாக்குதலில் 400 க்கும் மேற்பட்ட அப்பாவிகளை ரஷ்ய ராணுவம் கொன்றது. இந்த சம்பவத்திற்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்த போது இந்தியா, புச்சாவில் நடந்துள்ள சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறோம். சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் முன்பு ரஷ்யாவை நிறுத்த வேண்டும் என இந்தியா தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+