டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா மரணங்கள் குறைந்தது .. தமிழகம் உள்பட 14 மாநிலங்களில் செம்ம மாற்றம்.. மத்திய அரசு

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவின் கொரோனா தொற்றால் ஏற்படும் இறப்பு விகிதம் "படிப்படியாக வீழ்ச்சியடைந்து வருகிறது", இது தற்போது 2.49 சதவீதமாக உள்ளது, இது உலகின் மிகக் குறைவான ஒன்றாகும் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியா ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி 38,902 கொரோனா கேஸ்கள் அதிகரித்து மொத்த கொரோனா கேஸ்கள் எண்ணிக்கை 10,77,618 ஆக உயர்ந்துள்ளது, அதே நேரத்தில் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 6,77,422 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 23, 672 நோயாளிகள் குணமடைந்துள்ளனர், இது ஒரு நாளில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமானது என்று இன்ற காலை 8 மணிக்கு புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஒரு நாளில் 543 பேர் இறந்த நிலையில், இந்தியாவில் கொரோனா நோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை 26,816 ஆக உயர்ந்துள்ளது என்றும் சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுவரை இல்லாத உச்சம்.. தமிழகத்தில் இன்று 4979 பேருக்கு கொரோனா.. 1.70 லட்சம் பேர் பாதிப்பு.. ஷாக்!இதுவரை இல்லாத உச்சம்.. தமிழகத்தில் இன்று 4979 பேருக்கு கொரோனா.. 1.70 லட்சம் பேர் பாதிப்பு.. ஷாக்!

கொரோனா இறப்பு

கொரோனா இறப்பு

எனினும் இந்தியாவில் கொரோனாவால் உயிரிழப்பு விகிதம் படிப்படியாக வீழ்ச்சி அடைந்து வருகிறது என்றும், தற்போது 2.49 சதவீதமாக உள்ளது என்றும இது உலகின் மிகக் குறைவான ஒன்றாகும் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஐந்து மாநிலங்களில் பூஜியம்

ஐந்து மாநிலங்களில் பூஜியம்

இந்தியாவின் சராசரியை விட 29 மாநிலங்கன் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இறப்பு விகிதம் (சி.எஃப்.ஆர்) குறைவாக உள்ளது. அவற்றில் ஐந்து மாநிலங்களில் இறப்பு விகிதம் (சி.எஃப்.ஆர்) பூஜ்ஜியமாகவும், 14 மாநிலங்களில் இறப்பு விகிதம் 1 சதவீதத்திற்கும் குறைவாகவும் உள்ளது என்றும் சுகாதாரத்துறை அமைச்சம் கூறியுள்ளது..

தமிழத்தில் இறப்பு விகிதம்

தமிழத்தில் இறப்பு விகிதம்

மணிப்பூர், நாகாலாந்து, சிக்கிம், மிசோரம், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆகிய ஐந்து மாநிலங்களில் இறப்பு விகிதம் பூஜியமாக உள்ளது. திரிபுரா (0.19), அசாம் (0.23 ), கேரளா (0.34 ), ஒடிசா (0.51 சதவீதம்), கோவா (0.60 சதவீதம்), இமாச்சல பிரதேசம் (0.75 சதவீதம்), பீகார் ( 0.83 சதவீதம்), தெலுங்கானா (0.93 சதவீதம்), ஆந்திரா (1.31 சதவீதம்), தமிழ்நாடு (1.45 சதவீதம்), சண்டிகர் (1.71 சதவீதம்), ராஜஸ்தான் (1.94 சதவீதம்), கர்நாடகா (2.08 சதவீதம்) மற்றும் உத்தரபிரதேசம் (2.36 சதவீதம்) என்று உள்ளது.

கொரோனா இறப்பு

கொரோனா இறப்பு

மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நோயாளிகளை திறமையான மருத்துவ சிகிச்சை முறை மூலம் இந்தியாவின் இறப்பு விகிதம் 2.5 சதவீதத்திற்கும் குறைவாக குறைந்துள்ளது. பயனுள்ள கட்டுப்பாட்டு உத்தி, கவனிப்பு அணுகுமுறையின் முழுமையான தரத்தை அடிப்படையாகக் கொண்ட தீவிர சோதனை மற்றும் தரப்படுத்தப்பட்ட மருத்துவ மேலாண்மை நெறிமுறைகள் போன்றவை காரணமாக இறப்பு விதிகம் கணிசமாகக் குறைந்துவிட்டது. ஒரு மாதத்திற்கு முன்பாக 2.82 சதவீதமாக இருந்த இறப்பு விகிதம், ஜூலை 10ம் தேதி வாக்கில் 2.72 சதவீதமாகக் குறைந்தது. தற்போது மேலும் குறைந்து 2.49 சதவீதமாகி உள்ளது.

 கணக்கெடுப்பு

கணக்கெடுப்பு

மத்திய அரசின் வழிகாட்டுதலின் கீழ், மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசாங்கங்கள் பொது மற்றும் தனியார் துறைக இணைப்பதன் மூலம் சோதனை மற்றும் மருத்துவமனை உள்கட்டமைப்பை அதிகரித்துள்ளன. வயதானவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் சக நோயுள்ளவர்கள் போன்ற பாதிக்கப்படக்கூடிய மக்களின் இருப்பிடம் மற்றும் அடையாளம் காண பல மாநிலங்கள் மக்கள் தொகை கணக்கெடுப்புகளை நடத்தியுள்ளன.

Recommended Video

    Corona இந்தியாவில் Stage-3 நிலையை எட்டிவிட்டது - IMA பரபரப்பு தகவல்
    சுகாதார பணியாளர்கள்

    சுகாதார பணியாளர்கள்

    மொபைல் பயன்பாடுகள் போன்ற தொழில்நுட்ப தீர்வுகளின் உதவியுடன், அதிக ஆபத்துள்ள மக்களை தொடர்ச்சியான கண்காணிப்பில் வைத்திருப்பதை அரசுகள் உறுதிசெய்துள்ளன. இதனால் ஆரம்பகால அறிகுறி உள்ளவர்கள், சரியான நேரத்தில் மருத்துவ சிகிச்சை பெற்றார்கள். இதனால் இறப்புகள் குறைந்தது. அடிமட்டத்தில் சுகாதார பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் உள்பட சுகாதார பணியாளர்கள் அனைவரும் சமூகத்தில் விழிம்பு நிலை மக்களிடம் விழிப்புணர்வை அதிகரிப்பதற்காக மிகப்பெரிய பணிகளை செய்துள்ளனர். அவர்களின் பணி பாராட்டத்தக்கது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    English summary
    India’s Covid-19 case fatality rate is “progressively falling” and is currently at 2.49 per cent, which is one of the lowest in the world: the Union Health Ministry said on Sunday
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X