டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஒன்றல்ல.. மூன்று வருது.. அஸ்ட்ராஜெனாகா தடுப்பூசிக்கு இந்தியா ஒப்புதல் எப்போது? வெளியான நல்ல செய்தி

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனா தடுப்பூசியை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவருவதற்காக புதிய தரவு ஆய்வுகளுடன் சீரம் இன்ஸ்ட்டியூட் ஆப் இந்தியா நிறுவனம் சமர்பித்த ஆய்வை பரிசீலித்து வரும் இந்தியா, அடுத்த வாரம் அஸ்ட்ராஜெனாகாவின் தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்கு பயன்படுத்த ஒப்புதல் அளிக்கலாம் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

பிரிட்டன் மருந்து தயாரிப்பு நிறுவனமாஅஸ்ட்ராஜெனெகா ஆக்ஸ்போர்டு நிறுவனத்துடன் இணைந்து கொரோனாவுக்கு தடுப்பூசியை உருவாக்கி வருகிறது. இந்த தடுப்பூசி இந்தியாவில் இறுதிகட்ட சோதனையில் இருக்கிறது. இதுவரை நடத்தப்பட்ட ஆய்வுகளில் நல்ல பலனை தருவதாக கூறப்படுகிறது.

இதையடுத்து இந்தியாவில் அஸ்ட்ராஜெனாகாவின் தடுப்பூசியை தயாரித்து வரும் சீரம் இன்ஸ்ட்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனம் மத்திய அரசின் ஒழுங்குமுறை ஆணையத்திடம் ஆய்வுகள் குறித்த் புதிய தரவுகளுடன் விண்ணப்பித்துள்ளது.

மூன்று தடுப்பூசி

மூன்று தடுப்பூசி

இதை பரிசீலித்து வரும் மத்திய அரசு, அடுத்த வாரம் அஸ்ட்ராஜெனாகாவின் தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டிற்கு பயன்படுத்த ஒப்புதல் அளிக்கும் என மததிய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏனெனில் உலகில் மிகப்பெரிய தடுப்பூசி தயாரிக்கும் நாடான இந்தியா, அடுத்த மாதம் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடுவதைத் தொடங்க விரும்புகிறது. அஸ்ட்ராஜெனாகா மட்டுமல்லாமல், ஃபைசர் இன்க் மற்றும் இந்தியாவில் தயாராகும் பாரத் பயோடெக் தயாரித்த தடுப்பூசிகள் அளித்த அவசரகால பயன்பாட்டு அங்கீகார விண்ணப்பங்களையும் பரிசீலித்து வருகிறது. எனவே விரைவில் ஒரு நல்ல முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம்.

இந்தியாவுக்கு நல்லது

இந்தியாவுக்கு நல்லது

கொரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான போரில் உலகின் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடான இந்தியா, அவசர காலபயன்பாட்டிற்கு ஒப்புதல் அளிப்பது என்பது தடுப்பூசிகளைப் பெறுவதற்கு மிகப்பெரிய படிநிலையாக கருதப்படுகிறது. தற்போதைய நிலையில் அஸ்ட்ராஜெனெகா-ஆக்ஸ்போர்டு ஷாட் குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்கும், வெப்பமான காலநிலை உள்ள நாடுகளுக்கும் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது, ஏனெனில் இது மலிவானது, போக்குவரத்துக்கு எளிதானது மற்றும் சாதாரண குளிர்சாதன பெட்டியில் அதிக நேரம் சேமிக்க முடியும்.

கூடுதல் தகவல்கள்

கூடுதல் தகவல்கள்

இந்தியாவின் மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (சி.டி.எஸ்.கோ) டிசம்பர் 9 ம் தேதி அஸ்ட்ராஜெனாகா, ஃபைசர் இன்க் மற்றும் இந்தியாவில் தயராககும் பாரத் பயோடெக் உள்பட மூன்று நிறுவனங்களின் விண்ணப்பங்களை மறுஆய்வு செய்ததுடன், அஸ்ட்ர மருந்துகளை உருவாக்கும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (எஸ்ஐஐ) உட்பட அனைத்து நிறுவனங்களிடமிருந்தும் கூடுதல் தகவல்களை கேட்டது.

சைபர் தர வேண்டும்

சைபர் தர வேண்டும்

இதன்படி உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தியாளரான சீரம் இப்போது அனைத்து தரவையும் வழங்கியுள்ளது என்று தகவல்கள் தெரிவித்தன. ஃபைசரிடமிருந்து வரவேண்டிய கூடுதல் விவரங்களுக்கு அதிகாரிகள் இன்னும் காத்திருக்கிறார்கள். இதேபோல் பரத் பயோடெக்கிலிருந்து கூடுதல் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

நேரடி தொடர்பு

நேரடி தொடர்பு

இதனிடையே அஸ்ட்ராஜெனாகா தடுப்பூசி தொடர்பாக இந்திய சுகாதார அதிகாரிகள், பிரிட்டிஷ் விஞ்ஞானிகளுடன் நேரடியாக தொடர்பு கொண்டுள்ளதாகவும், அடுத்த வாரத்திற்குள் ஒப்புதல் வருவதற்கான "வலுவான அறிகுறிகள்" இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன

English summary
India is likely to approve Oxford/AstraZeneca's coronavirus vaccine for emergency use by next week after Serum Institute of India (SII) submitted additional data sought by authorities.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X