டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்தியாவில் கொரோனாவில் இருந்து 2.67 கோடி பேர் குணமடைந்தனர் - 3.44 லட்சம் பேர் மரணம்

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 58 நாட்களில் 1,20,529 பேராக குறைந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையை விட குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவது நம்பிக்கையை தருகிறது.

Google Oneindia Tamil News

டெல்லி : நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையை விட குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரித்து வருவது நம்பிக்கையை அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் 1,20,529 பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில்
1,97,894 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கத்தினால் தினசரி பாதிப்பு 4 லட்சத்திற்கும் மேல் பதிவானது. மகாராஷ்டிரா, டெல்லி, கர்நாடகா மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. உயிரிழப்பும் அதிகரிக்கவே அந்த மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

தமிழகத்திலும் தினசரி பாதிப்பு அதிகரிக்கவே கடந்த சில வாரங்களாக ஊரடங்கு கடுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இந்தியாவில் நோய் தொற்று பாதிப்பு குணமடைந்தோர் எண்ணிக்கை குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

வரும் ஜூன் 14 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. கொரோனா அதிகம் உள்ள 11 மாவட்டங்களில் கூடுதல் கட்டுப்பாடுகள்வரும் ஜூன் 14 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. கொரோனா அதிகம் உள்ள 11 மாவட்டங்களில் கூடுதல் கட்டுப்பாடுகள்

2.86 கோடி பேர் பாதிப்பு

2.86 கோடி பேர் பாதிப்பு

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 1,20,529 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 2,86,94,879 பேராக அதிகரித்துள்ளது.

2.67 கோடி பேர் மீண்டனர்

2.67 கோடி பேர் மீண்டனர்

கொரோனாவால் பாதிக்கப்படுவோரை விட குணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 1,97,894 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,67,95,549 பேராக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் சதவிகிதம் 93.38%ஆக அதிகரித்துள்ளது.

மருத்துவமனைகளில் சிகிச்சை

மருத்துவமனைகளில் சிகிச்சை

நாடு முழுவதும் மருத்துவமனைகளில் 15,55,248 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணிநேரத்தில் மருத்துவமனைகளில் 80,745 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

3,44,082 மரணமடைந்தனர்

3,44,082 மரணமடைந்தனர்

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 3,380 பேர் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,44,082 பேராக அதிகரித்துள்ளது. 22,78,60,317 பேருக்கு ஒரே நாளில் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

English summary
On a sustained downward slope, India's active caseload further decreases to 15,55,248; less than 2 Lakh since 9 successive days. Active cases decrease by 80,745 in last 24 hours.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X