Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்தியாவில்.. முதன்முறையாக.. 132 நாட்களுக்கு பிறகு 30 ஆயிரத்துக்கும் கீழ் சரிந்த தொற்று பாதிப்பு

இந்தியாவில் தொற்று பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4.21 லட்சத்தை தாண்டியுள்ளது. அதே போல், இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3.14 கோடியாக உயர்ந்துள்ளது... இந்தியாவிலேயே கடந்த 132 நாட்களில் இல்லாத அளவாக ஒருநாள் கொரோனா பாதிப்பு சரிவில் வந்துள்ளதாக மத்திய சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா 2-ம் அலை இன்னும் முடிவுக்கு வரவில்லை.. இதனால், தினசரி தொற்று பாதிப்பானது ஏறுவதும், இறங்குவதுமாக இருக்கிறது..

உலகிலேயே தொற்று அதிகம் உள்ள நாடாக இந்தியா 2வது இடத்தை தொடர்ந்து தக்க வைத்து கொண்டு வருகிறது.. எனினும், தற்போது 2-வது அலை தாக்கம் கட்டுக்குள் வந்துள்ளது...

பாதிப்பு

பாதிப்பு

கடந்த சில வாரங்களாகவே தினசரி கொரோனா பாதிப்பு இறங்கு முகத்திலேயே இருந்தது... எனினும், கேரளாவில் தொற்று பாதிப்பு விகிதம் அதிகரித்து காணப்பட்டதால், இந்த தினசரி பாதிப்பில் கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கங்கள் இருக்கத்தான் செய்தன.. இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கையாக வெளியிட்டுள்ளது. அதில் உள்ளதாவது:

சிகிச்சை

சிகிச்சை

"கடந்த 24 மணி நேரத்தில் 29,689- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 3,98,100 ஆக குறைந்திருக்கிறது.. இப்போதைக்கு சிகிச்சையில் பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 124 நாட்களுக்குப் பிறகு 4 லட்சத்திற்கு கீழ் வந்துள்ளது... கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 3,98,100 பேர் சிகிச்சையில் உள்ளனர்.. அதேபோல், தினசரி தொற்று பாதிப்பு விகிதம் 132 நாட்களில் இல்லாத அளவுக்கு அதாவது 30, ஆயிரத்தைவிட குறைந்துள்ளது...

டிஸ்சார்ஜ்

டிஸ்சார்ஜ்

கடந்த ஒரே நாளில் 29,689 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 415 பேர் உயிரிழந்துள்ளனர்... தொற்று பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4,21,382 ஆக உயர்ந்துள்ளது. தொற்றில் இருந்து ஒரே நாளில் 42,363 பேர் டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர்.. இந்தியாவில் இதுவரை 44,19,12,395 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.. கடந்த 24 மணி நேரத்தில் 66,03,112 டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டுள்ளது. இதற்கிடையே நேற்று நாடு முழுவதும் 17,20,110 மாதிரிகள் டெஸ்ட் செய்யப்பட்டுள்ளது.. இதுவரை 45.91 கோடி மாதிரிகள் டெஸ்ட்கள் செய்யப்பட்டுள்ளன.

மகாராஷ்டிரா

மகாராஷ்டிரா

மகாராஷ்டிராவில் இதுவரை 62,64,922 பேருக்குப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று கொரோனா பாதிப்புக்கு 123 பேர் மரணம் அடைந்தனர்... நேற்று 5,213 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டநிலையில், இதுவரை 60,35,029 பேர் குணமாகி உள்ளனர். இப்போதைக்கு 94,985 பேர் சிகிச்சையில் உள்ளனர். அசாமில் புதிதாக ஒரே நாளில் 1528 பேருக்கு தொற்று உறுதியாக உள்ளது.. மணிப்பூரில் 989, மேகாலயா 569, அருணாசல பிரதேசத்தில் 490, திரிபுராவில் 458 கேஸ்களும் பதிவாகி உள்ளன. கேரளாவில் 11,586 பேருக்கு புதிதாக தொற்று உறுதியாகி உள்ளது.. இதில் 135 பேர் உயிரிழந்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+