இந்தியாவில் கொரோனாவில் இருந்து 2,75,04,126 பேர் மீண்டனர் - தடுப்பூசி செலுத்திய 24 கோடி பேர்
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இரண்டாவது நாளாக ஒரு லட்சத்திற்கும் கீழே குறைந்தது. தினசரி கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையை விட குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மருத்துவமனைகளில் சிகிச்சை ப
டெல்லி : நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் 92,596 பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டாவது நாளாக கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 1 லட்சத்திற்கும் கீழே குறைந்துள்ளது. ஒரே நாளில் 1,62,664 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். நாடு முழுவதும் 2,75,04,126 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளது நம்பிக்கை தரும் வகையில் உள்ளது.
நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையை விட குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன் மூலம் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 12,31,415 பேராக குறைந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கத்தினால் தினசரி பாதிப்பு 4 லட்சத்திற்கும் மேல் பதிவானது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல மாநிலங்களில் கட்டுப்பாடுகளுடன் கூடிய லாக்டவுன் அமல்படுத்தப்பட்டதன் காரணமாக தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. மத்திய சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள தகவலைப் பார்க்கலாம்.

92,596 பேர் பாதிப்பு
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 92,596 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 2,90,89,069 பேராக அதிகரித்துள்ளது. கொரோனோ தொற்று 3 கோடி பேரை எட்டப்போகிறது.

குணமடைந்தவர்கள் அதிகம்
கொரோனாவால் பாதிக்கப்படுவோரை விட குணமடைந்தவர்கள் எண்ணிக்கை இன்றும் அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,62,664 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தனர். இதன் மூலம் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 2,75,04,126 பேராக உயர்ந்துள்ளது.

12,31,415 பேர் சிகிச்சை
குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் நாடு முழுவதும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 12,31,415 பேராக குறைந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 2219 பேர் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,53,528 பேராக அதிகரித்துள்ளது.

பேருக்கு தடுப்பூசி
நாடு முழுவதும் கடந்த ஜனவரி முதல் ஜூன் 7 வரை 23,90,58,360 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
புலிப் பாய்ச்சல்.. உலக அரங்கில் தலைநிமிரும் இந்தியா! எதிர்பார்ப்புகளை கடந்த பிரம்மாண்ட GDP வளர்ச்சி! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
2047ல் இந்தியா வல்லரசு.. வாய்ப்பில்லை ராஜா! இன்னும் 34 வருஷமாகும்.. உண்மையை உடைத்த ஆய்வறிக்கை! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி!












Click it and Unblock the Notifications