நாட்டிலேயே தடுப்பூசி செலுத்துவதில் டாப் 5 மாநிலங்கள்... மோசமான 5 மாநிலங்கள்.. பட்டியல்
டெல்லி : நாட்டிலேயே கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை மிககுறைவாக உள்ள மாநிலங்கள் என்றால் கேரளா மற்றும் டெல்லி தான். அதேநேரம் நாட்டிலேயே கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை அதிகம் உள்ள மாநிலங்களில் பட்டியலில் பீகார், ராஜஸ்தான் மற்றும் மேற்கு வங்கம் ஆகியவை டாப் 3 இடங்களில் உள்ளன.
Recommended Video
கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடுவது அதிகரித்துள்ளது. நாட்டின் மொத்தம் 36 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்திருந்தது. அரசின் அறிவிப்பில் 18-44 வயதுக்குட்பட்டவர்களுக்கு 11 கோடிக்கும் அதிகமான மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன என்று கூறப்பட்டுள்ளது.
அதிக அளவில் தடுப்பூசி பற்றாக்குறையைக் கொண்டுள்ள மாநிலங்கள் பட்டியல்கள் வெளியாகி உள்து . மாநிலத்தின் தடுப்பூசி பற்றாக்குறை என்பது மக்கள்தொகையின் சதவீத அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

டெல்லி
கேரளா மற்றும் டெல்லியில் தடுப்பூசி பற்றாக்குறை 22 சதவீதம் என்கிற நிலையில் நாட்டிலேயே குறைவாக உள்ளது. ஆனால் பீகார் 71 சதவீதம், ராஜஸ்தான் மற்றும் வங்காளம் 66 சதவீதம் என்கிற அளவில் தடுப்பூசி பற்றாக்குறை அதிகமாக உள்ளது.

59 கோடி மக்கள்
நாட்டின் ஒட்டுமொத்த தடுப்பூசி பற்றாக்குறை 54 சதவீதமாக உள்ளது, 59 கோடிக்கும் அதிகமான மக்கள்தொகையை குறிப்பிட்ட சில மாநிலங்களிலேயே உள்ளன. ஆனால் அங்கு தினசரி தடுப்பூசி செலுத்தும் விகிதம் மிக மோசமாக உள்ளன

தடுப்பூசி இலக்கு
கேரளாவும் டெல்லியும் சிறப்பாக தடுப்பூசி பெற்ற மாநிலங்களாக விளங்கினாலும், டிசம்பர் மாதத்திற்குள் 60 சதவீத மக்களுக்கு தடுப்பூசி போடும் இலக்கு விகிதத்தை எட்டுவம் இலக்கில் அவை வெகு தொலைவில் உள்ளன.

கர்நாடகா
பஞ்சாபில் தடுப்பூசி பற்றாக்குறை 26 சதவீதமும், கர்நாடகாவில் 30 சதவீதமும், குஜராத் 37 சதவீதமாகவும் உள்ளன. உத்தரபிரதேசத்தில் தடுப்பூசி பற்றாக்குறை 64 சதவீதமும், ஜார்க்கண்ட் 62 சதவீதம் ஆகவும் உள்ளன.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications