டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஆபரேஷன் ரக் ஷா க்ரீன்.. கடல் எல்லையில் குவிக்கப்படும் இந்திய போர் கப்பல்கள்.. என்ன நடக்கிறது?

இந்திய கடல் எல்லையை பாதுகாக்கும் விதமாக தற்போது இந்திய கடற்படை ஆபரேஷன் ரக் ஷா க்ரீனை நடத்தி வருகிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    Indian Navy : தயார் நிலையில் கடற்படை..இந்திய எல்லையில் பதற்றம்- வீடியோ

    டெல்லி: இந்திய கடல் எல்லையை பாதுகாக்கும் விதமாக தற்போது இந்திய கடற்படை ஆபரேஷன் ரக் ஷா க்ரீனை நடத்தி வருகிறது.

    ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதில் இருந்து இந்தியா பாகிஸ்தான் எல்லை மற்றும் இந்தியா சீனா எல்லையில் கடுமையான பதற்றம் நீடித்து வருகிறது. அதிலும் முக்கியமாக லடாக் எல்லையில் இரண்டு நாட்களாக பதற்றம் நீடிக்கிறது.

    நேற்று முதல்நாள்தான் லடாக் எல்லையில் பாகிஸ்தான் விமானங்கள் வட்டமிட்டபடி இருந்தது. இதனால் அங்கு ராணுவ வீரர்கள் அப்போதே குவிக்கப்பட்டனர்.

    செம.. பூமி வட்டப்பாதையிலிருந்து வெளியேற்றப்பட்ட சந்திரயான் 2... நிலவை நோக்கி பயணம் தொடங்கியது!செம.. பூமி வட்டப்பாதையிலிருந்து வெளியேற்றப்பட்ட சந்திரயான் 2... நிலவை நோக்கி பயணம் தொடங்கியது!

    இப்போது என்ன

    இப்போது என்ன

    இந்த நிலையில் தற்போது இந்திய கடல் எல்லையை பாதுகாக்கும் விதமாக தற்போது இந்திய கடற்படை ஆபரேஷன் ரக் ஷா க்ரீனை நடத்தி வருகிறது. அதன்படி இந்திய போர் விமானங்கள், நீர் மூழ்கி கப்பல்கள் முழு வீச்சில் தற்போது கடல் எல்லையில் சோதனை நடத்தி வருகிறது. மேலும் சிறு சிறு போர் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

    ஊடுருவல் தடுப்பு

    ஊடுருவல் தடுப்பு

    கடல் எல்லை வழியாக தீவிரவாதிகள் நாட்டிற்குள் வருவதை தடுக்கும் பொருட்டு இந்த ரக் ஷா க்ரீன் ஆபரேஷன் கையில் எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே டெல்லியில் தீவிரவாத தாக்குதல் அச்சுறுத்தல் இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளது. இதனால் உளவுத்துறை கொடுத்த எச்சரிக்கையின் படி தற்போது கடல் எல்லையில் ராணுவ படை குவிக்கப்பட்டு வருகிறது.

    தமிழகம் எப்படி

    தமிழகம் எப்படி

    வடஇந்தியாவில் மட்டுமில்லாமல், இந்திய பெருங்கடலிலும் இந்த ரக் ஷா க்ரீன் ஆபரேஷன் நடந்து வருகிறது. இதனால் கன்னியாகுமரி கடல் எல்லையில் இந்திய கடற்படை கப்பல்கள், போர் கப்பலால் ரோந்து பணிகளை மேற்கொண்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

    என்ன

    என்ன

    நாளை சுதந்திர தினம் நாடு முழுக்க கொண்டாடப்பட உள்ளது. இதனால் அனைத்து பகுதிகளிலும் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. அதன் ஒரு பகுதியாக தற்போது கடல் எல்லையிலும் ஊடுருவலை தடுக்கும் பொருட்டு ரக் ஷா க்ரீன் சோதனை நடந்து வருகிறது.

    English summary
    Indian Navy starts the Operation Rakh Sha Green to control the sea territory.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X