டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நவராத்திரி விரதம் இருப்பவர்களுக்கு நற்செய்தி.. ரயிலிலும் விரத உணவு.. ஐஆர்சிடிசி ஏற்பாடு.. மெனு இதோ!

Google Oneindia Tamil News

டெல்லி: புதிய அம்சங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் இந்திய ரயில்வேதுறை தனது சேவையை தொடர்ந்து புதுப்பித்துக்கொண்டு வருகிறது. அந்த வகையில், தற்போது நவராத்திரி பண்டிகையையொட்டி மற்றொரு புதிய அறிவிப்பை ரயில்வேதுறை வெளியிட்டுள்ளது.

நவராத்திரி பண்டிகை இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையை கொண்டாடுபவர்கள் விரதம் இருப்பது வழக்கம்.

இவ்வாறு விரதம் இருப்பவர்கள் ரயில் பயணம் செய்யும்போது அவர்களுக்கு விரத உணவு வழங்கும் புதிய அம்சத்தை ரயில்வே அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் உதயசூரியனில் இனி “சந்திரன்” - திமுகவில் அதிரடி மாற்றங்கள்.. 7 மாவட்டங்களில் டுவிஸ்ட்? திருவள்ளூர் உதயசூரியனில் இனி “சந்திரன்” - திமுகவில் அதிரடி மாற்றங்கள்.. 7 மாவட்டங்களில் டுவிஸ்ட்?

 99 ரூபாய்க்கு

99 ரூபாய்க்கு

நடப்பாண்டு ஆண்டு நவராத்திரி இம்மாதம் 26ம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 5ம் தேதி வரை 9 நாட்கள் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்நாட்களில் ரயிலில் பயணம் செய்பவர்களுக்கு புதிய மெனுவை ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அதாவது, இந்த 9 நாட்களும் ரயிலில் 'விரத உணவு' வழங்கப்படும். வேண்டும் என்பவர்கள் 'Food on Track' செயலி மூலமாக உணவை ஆர்டர் செய்துகொள்ளலாம். இந்த உணவின் ஆரம்ப விலை ரூ.99. இதில், ஆலு சாப், சபுதானா டிக்கி, சபுதானா கிச்சடி மற்றும் அனீர் மக்மாலிம் ஆகியவை வழங்கப்படும்.

 எப்படி ஆர்டர் செய்வது?

எப்படி ஆர்டர் செய்வது?

இத்துடன் பரோட்டா, கோஃப்தா கறி மற்றும் சபுதானா கிச்ரியும் வழங்கப்படும். இதே ரூ.199க்கு நான்கு பரோட்டாக்களுடன் இந்த விரத உணவு விநியோகிக்கப்படுகிறது. இந்த உணவை http://ecatering.irctc.co.in எனும் இணையதளம் வழியாகவும், 1323 எனும் தொடர்பு எண் மூலமாகவும் நம்மால் ஆர்டர் செய்ய முடியும். உணவை ஆன்லைன் மூலம் பணம் செலுத்தியும் பெறலாம் அல்லது பெற்றுக்கொண்ட பின்னர் பணம் செலுத்திக்கொள்ளவும் செய்யலாம்.

 ஐதீகம்

ஐதீகம்

நவராத்திரி பண்டிகையில் 9 நாட்களும் தேவியை நினைத்து வழிப்படுவது வழக்கம். இந்த நாட்களில் நாம் தேவையை எப்படி நினைத்து வழிபடுகிறோமோ அப்படியே தேவி நமக்கு காட்சி தருகிறார் என்பது ஐதீகம். மற்ற பண்டிகைகள் எல்லாம் ஒன்றிரண்டு நாட்களில் முடிந்துவிட நவராத்திரி மட்டுமே 9 நாட்கள் கொண்டாடப்படுகிறது. பல்வேறு மாநிலங்களில் இந்த திருவிழா பல்வேறு பெயர்களில் கொண்டாடப்படுகிறது. மகா சங்கார (பேரழிவுக்) காலத்தின் முடிவில், இறைவன் உலகத்தைச் உண்டாக்க விரும்பினபோது இச்சை என்ற சக்தியும், அது எவ்வாறு தோன்றியது என்று அறிந்தபோது ஞானசக்தியும் தோன்றின.

 நம்பிக்கை

நம்பிக்கை

பின் கிரியா சக்தியினால் இறைவன் உலகைப் படைத்தான் என்ற கருத்தே நவராத்திரி விழாவால் விளக்கப்படுகின்றது. (இச்சை = விருப்பம், ஞானம் =அறிவு, கிரியா = செய்தல், ஆக்கல்) இந்த விழாவில் முதல் மூன்று நாட்கள் இச்சா சக்தியின் ஆட்சிக்காலமாகும். இந்த நாட்களில் துர்கை அம்மணை பக்தர்கள் நோன்பு இருந்து வழிபடுகின்றனர். அடுத்த மூன்று நாட்கள் ஞானசக்தியின் தோற்றமான லட்சுமியின் ஆட்சிக்காலம். அடுத்து உள்ள மூன்று நாட்கள் கிரியா சக்தியின் தோற்றமான சரஸ்வதியின் ஆட்சிக்காலமாகும்.

English summary
Indian Railways is constantly innovating its services by introducing new features. In this regard, Railway Department has issued another new notification on the occasion of Navratri festival. Navratri festival is celebrated with great enthusiasm all over India. People who celebrate this festival usually fast. Thus, the Ministry of Railways has introduced a new feature of providing Vrat thali to fasting people while traveling by train.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X