சீனா விஷயத்தில்.. பாசிட்டிவ் மோட்! மத்திய அரசு எடுக்கும் முக்கிய ஸ்டெப்! கோட்டை விட்ட டிரம்ப்
டெல்லி: கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா-சீனா ராணுவ வீரர்கள் மோதிக்கொண்டதை தொடர்ந்து, இரு நாட்டு உறவில் விரிசல் பலமாக விழுந்தது. இந்நிலையில், அமெரிக்க நெருக்கடி காரணமாக இந்த விரிசலை சரி செய்யும் பணியில், இந்திய அரசு தீவிரம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது டிரம்புக்கு ஏற்பட்ட மற்றொரு தோல்வியாக பார்க்கப்படுகிறது.
அதாவது இந்தியாவுக்கு அமெரிக்கா சகட்டு மேனிக்கு வரியை போட்டு தள்ளியிருக்கிறது. சீனாவுக்கு கூட அவ்வளவு வரி கிடையாது. நட்பு நாடு என்று சொல்லிக்கொண்டு நம்முடைய முதுகில் குத்தி விட்டது அமெரிக்கா. இதனால் நம் நாட்டில் ஜவுளி மற்றும் தோல் பொருட்கள் உற்பத்தி துறை கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது.

சீனாவுடன் உறவு
நிலைமை இப்படி இருக்கையில், இந்தியப் பொருளாதாரத்தை சீனாவுக்குப் படிப்படியாகத் திறந்துவிடுவது குறித்து அரசு மட்டத்தில் தீவிர பரிசீலனை நடைபெற்று வருகிறது. இந்தத் தளர்வுகள் சீனாவின் இருநாடுகளின் ஒத்துழைப்பைப் பொறுத்தே அமையும் என 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்க வரிகள் குறித்த அச்சுறுத்தல்கள், உலக வர்த்தகச் சூழலில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக, நம்மூர் சந்தையை சீனாவுக்கு திறந்து விடுவது பற்றி விவாதம் எழுந்திருக்கிறது. திறந்துவிடுவது என்று முடிவு எடுக்கப்பட்டாலும், அதை ஒரேயடியாக செய்யாமல், கொஞ்சம் கொஞ்சமாக மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. சீனத் தொழிலாளர்களுக்கான வணிக விசா நடைமுறை ஏற்கனவே தளர்த்தப்பட்டுள்ள நிலையில், முதலீட்டுக் கட்டுப்பாடுகளையும் தளர்த்துவது குறித்து அரசு ஆராய்ந்து வருகிறது.
அதிகாரிகள் சொல்வது என்ன?
இது குறித்த அதிகாரிகள் கூறுகையில், "சீனாவுக்கு வாய்ப்பு கொடுப்பதற்கு நமக்கு போதிய அவகாசம் வேண்டும். இதற்கு இரு நாடுகளின் ஒத்துழைப்பு முக்கியம். இந்தியாவில் பல உற்பத்தி ஆலைகள் சீனாவின் இயந்திரங்களை நம்பியுள்ளன. ஆனால், சீன தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு விசா வழங்குவதில் நம்முடைய தரப்பில் தாமதம் இருந்தது. தற்போது சீன தொழில்நுட்ப வல்லுநர்களை அனுமதிக்க விமான, e-B-4 விசா, நுழைவு நடைமுறைகள் எளிதாக்கப்பட்டன. இப்படி படிப்படியாக மாற்றங்கள் ஏற்படும்" என கூறுகின்றனர்.
நிதி ஆயோக்
முன்னதாக, நிதி ஆயோக் உறுப்பினர் ராஜீவ் கூபா தலைமையிலான உயர்மட்டக் குழு, சீன முதலீடுகள் மீதான கட்டுப்பாடுகளை நீக்கப் பரிந்துரைத்தது. மேலும், 2023-24 ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை, இந்தியாவின் ஏற்றுமதி போட்டித்திறனை மேம்படுத்தச் சீன நிறுவனங்களிடமிருந்து முதலீடுகளை ஈர்க்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியது.
இந்தியாவின் தடை
கடந்த 2020 முதல், சீன நிறுவனங்கள் இந்திய அரசின் ஒப்பந்தங்களில் பங்கேற்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் சர்வதேச நெருக்கடி காரணமாக தற்போது இந்த தடையை நீக்க மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. தடை நீக்கப்பட்டால், சுமார் 750 பில்லியன் டாலர் அளவுக்கான திட்டங்களில் சீனா பங்கேற்கும். மட்டுமல்லாது இரு நாடுகளுக்கும் இடையில் நேரடி விமான சேவை தொடங்கப்பட்டிருக்கிறது. இதெல்லாம் இரு நாட்டு உறவில் பாசிட்டிவ் சைன்.
உஷார் முக்கியம்
என்னதான் சீனாவுடன் நாம் மீண்டும் உறவை ஏற்படுத்தினாலும், கொடுக்கல் வாங்கல் என்கிற ரீதியில்தான் இந்த உறவு இருக்க வேண்டும் என்பதில் மத்திய அரசு தெளிவாக இருப்பதாக சொல்லப்படுகிறது. இல்லையெனில் அந்நாட்டிலிருந்து இறக்குமதி அதிகமாகி, நம்முடைய ஏற்றுமதி குறைந்துவிடும். இது நம்முடைய அந்நிய செலவானியை பாதிக்கும்.
டிரம்பின் தோல்வி
இந்தியாவின் இந்த நகர்வு அமெரிக்காவுக்குதான் பின்னடைவை ஏற்படுத்தும். ஜி20 நாடுகளில் இந்தியாவின் இருப்பை தக்க வைத்து.. தென்மேற்கு ஆசியாவில் தன்னுடைய ஆதிக்கத்தை நிலை நிறுத்துவதுதான் அமெரிக்காவின் செயல்திட்டம். ஆனால் டிரம்ப் போட்ட வரி காரணமாக, ஜி20 அமைப்பில் ஆர்வம் காட்டுவதை விட, பிரிக்ஸ் அமைப்பில்தான் இந்தியா ஆர்வம் காட்டும். பிரிக்ஸ் என்பது அமெரிக்காவுக்கு ஆப்பு வைக்க காத்திருக்கும் ஓர் அமைப்பாகும். ஆக டிரம்ப் இந்த விஷயத்தில் தோல்வியை தழுவியுள்ளார்.
-
90% பேருக்கு தெரியாது.. கலர் கலராக இருக்கும் ரயில்கள்.. ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம் தெரியுமா! -
பெட்ரோல் விலை பிச்சுகிட்டு போக போகுது..வேலையைக் காட்டிய ரஷ்யா! இந்தியாவுக்கு காத்திருக்கும் சிக்கல்! -
ரஷ்யா எடுத்த அதிரடி முடிவு.. உச்சத்துக்கு போகும் பெட்ரோல், டீசல் விலை! இந்தியாவுக்கு நெருக்கடி! -
அதிகாலையில் வந்த அறிவிப்பு! மோடியே சொன்னாலும்.. குறையாத பெட்ரோல், டீசல் விலை! -
தடுமாறுதே தங்க சந்தை.. மாறி மாறி சரிந்து எகிறும் தங்கத்தின் விலை! இப்போ வாங்கலாமா? வேண்டாமா? -
பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு என வட மாநிலங்களில் பரவும் வதந்தி..பங்குகளை நோக்கி படையெடுத்த மக்கள்! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம்












Click it and Unblock the Notifications