சூப்பர்.. விண்வெளித்துறையில் ஆர்வமா? இஸ்ரோவில் 526 காலிப்பணியிடங்கள்! உடனே விண்ணப்பியுங்கள்
டெல்லி: இந்திய விண்வெளித்துறையான இஸ்ரோவில் காலியாக உள்ள 526 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளன. உதவியாளர், இளநிலை தனிப்பட்ட உதவியாளர், எழுத்தாளர் மற்றும் சுருக்கெழுத்தர் ஆகிய வேலைகளுக்கு காலிப்பணியிடங்கள் இருப்பதாக இஸ்ரோ அறிவித்திருக்கிறது.
இந்திய விண்வெளி ஆய்வு மையமானது 1945ம் ஆண்டு தொடங்கி தற்போது வரை வெற்றிகரமாக இயங்கி வருகிறது. சர்வதேச அளவில் விண்வெளி துறையில் போட்டியிட்டு வரும் இஸ்ரோ தற்போது வேகமாக வளர்ந்து வருகிறது. இந்நிறுவனத்தில் மொத்தம் 16 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பணியாற்றி வருகின்றனர். ஆண்டுக்கு சுமார் ரூ.13,700 கோடி இந்நிறுவனத்திற்காக செலவிடப்படுகிறது.
மனிதர்களை விண்வெளிக்கு அனுப்புவது மற்றும் செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய கூடுதல் ரோவர்களை அனுப்புவது போன்ற எதிர்கால திட்டங்களில் இஸ்ரோ தீவிரமாக பணியாற்றி வருகிறது. இந்நிலையில் தற்போது இந்நிறுவனத்தில் 526 காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது உதவியாளர்கள், இளநிலை தனிப்பட்ட உதவியாளர்கள், மேல் பிரிவு எழுத்தர் மற்றும் ஸ்டெனோகிராபர் ஆகிய பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணிகளுக்கு தேர்ச்சியடைபவர்கள் டெல்லி, ஹைதராபாத் மற்றும் பெங்களூருவில் உள்ள அலுவலகங்களில் பணியமர்த்தப்படுவார்கள். இதற்கு இந்தியா முழுவதும் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதில் பெங்களூவில் 61 காலிப்பணியிடங்களும், ஹைதராபாத்தில் 16, டெல்லியில் ஒரு காலிப்பணியிடமும் இருக்கிறது. இதில் ஸ்டெனோகிராபர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் வணிக அல்லது செயலகப் பயிற்சியில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
இதில் இவர்கள் குறைந்தபட்சம் 60 சதவிகித மதிப்பெண்களை பெற்றிருக்க வேண்டும். பட்டப்படிப்பு இல்லையெனில் அதற்கு இணையான டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும். இது தவிர ஸ்டெனோ-டைப்பிஸ்ட் அல்லது ஸ்டெனோகிராஃபராக ஓராண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அதாவது ஆங்கில ஸ்டெனோகிராஃபியில் நிமிடத்திற்கு 60 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் வேகத்தை விண்ணப்பதாரர்கள் கொண்டிருக்க வேண்டும். மட்டுமல்லாது, கம்ப்யூடரை பயன்படுத்துவதில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இவ்வாறு தகுதியும், ஆர்வமும் இருப்பவர்கள் வரும் 16ம் தேதிக்கு முன்னர் விண்ணப்பிக்க வேண்டும்.

வயது வரம்பை பொறுத்த அளவில், இந்த ஆண்டு ஜனவரி 9ம் தேதியின்படி 28 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அதேபோல விண்ணப்பிப்பவர்களுக்கு ரூ.100 கட்டணம் செலுத்த வேண்டும். அதேபோல விண்ணப்பதாரர்கள் தேர்வின் போது ஆன்லைனில் சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து ஆவணங்களின் அசலை நேரில் சமர்பிக்க வேண்டும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது. இந்த தேர்வுகள் ஆங்கிலத்திலும், இந்தியிலும் நடத்தப்படும். மேலும் கூடுதல் தகவல்களுக்கு @https://www.isro.gov.in எனும் இணையதளத்தை பார்க்கவும்.












Click it and Unblock the Notifications