குட் நியூஸ்.. டெல்டா வைரசுக்கு எதிராக ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசி செயல்திறன் மிக்கது.. ஆய்வில் உறுதி
டெல்லி: அமெரிக்காவின் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசி டெல்டா வகை கொரோனா வைரசுக்கு எதிராக வீரியத்துடன் செயல்படும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டின் இறுதியில் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் இன்னும் இந்த பூமியை விட்டு செல்ல மறுத்து வருகிறது. கொரோனா வைரசின் உருவம் தொடர்ந்து உருமாறி வருவதே இதற்கு காரணமாகும்.
இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலைக்கு டெல்டா வைரஸ் மாறுபாடே காரணம் என்று புள்ளி விவரங்கள் தெளிவாக காட்டுகின்றன.

டெல்டா வைரஸின் ஆபத்து
டெல்டா வைரஸ் வரும் வாரங்களில் அமெரிக்காவில் ஆபத்தை உண்டாக்க கூடும் என்றும் 2019 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் சீனாவின் வுஹானில் முதன்முதலில் தோன்றிய அசல் வைரஸை விட டெல்டா வைரஸ் கணிசமாக அதிக அளவில் பரவக்கூடியவை என்பதை ஆய்வுகள் நிரூபித்துள்ளன என்று மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி
எனவே கொரோனா தடுப்பூசி நிறுவனங்கள் தங்களது தடுப்பு மருந்துகள் டெல்டா வைரசுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறதா? என தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் அமெரிக்காவின் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசி டெல்டா வகை கொரோனா வைரசுக்கு எதிராக அதிக வீரியத்துடன் செயல்பட்டு வருவதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது.

நீடித்த பாதுகாப்பு
டெல்டா வைரஸ் மாதிரிகளை கொண்டு சோதனை செய்ததில் டெல்டா வைரசுக்கு எதிரான ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசியின் நோய் எதிர்ப்பு திறன் 8 மாதங்கள் வரை நீடிப்பதாக தெரியவந்துள்ளது. ஜான்சன் அன்ட் ஜான்சனின் ஒற்றை டோஸ் தடுப்பூசி வேகமாக பரவும் டெல்டா மாறுபாட்டை நடுநிலையாக்குகிறது மற்றும் தொற்றுநோய்க்கு எதிராக நீடித்த பாதுகாப்பை மிக அதிக அளவில் வழங்குகிறது என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
Recommended Video

இந்தியாவுக்கு வருமா?
அமெரிக்காவின் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அனுமதி அளித்துள்ளன. இது டோஸ் மட்டுமே போடக்கூடிய வகையிலான தடுப்பூசியாகும். இந்தியாவில் டெல்டா வைரஸ் அச்சுறுத்தல் அதிகம் உள்ள நிலையில் இங்கு ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசியை கொண்டு வருவதற்கான முயற்சியில் அந்த நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications