மிக்சர் சாப்பிட்டது போதும்..மத்திய அமைச்சரவையில் மெகா மாற்றம்! சீட்டுகளை கலைத்துப் போடும் மோடி & கோ!
டெல்லி: தனது மத்திய இணை அமைச்சர் பதவியையும் மாநிலங்களவை எம்பி பதவியையும் ராஜினாமா செய்வதாக பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி இருக்கிறார் பாஜகவின் எல்.முருகன். இந்த நிலையில் மத்திய அமைச்சரவையில் விரைவில் மாற்றம் இருக்கும் எனவும், அதற்கு முன்னோட்டமாக தான் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார் எல்.முருகன் என்கின்றனர் பாஜகவினர். ஏற்கனவே பல மத்திய அமைச்சர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்திருக்கும் நிலையில் தற்போது எல்.முருகன் ராஜினாமா பட்டியில் பட்டியலில் இணைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

தேசிய அளவில் பாஜகவுக்கு அடுத்தடுத்து நெருக்கடிகள் உருவாகி வருகிறது. கரப்பான் பூச்சி போராட்டத்தால் மத்திய அமைச்சரவையில் வலுவாக இருந்த தர்மேந்திர பிரதான பதவி விலக நேரிட்டது. இந்த நிலையில் தமிழக அரசியலில் திடீர் பேசு பொருளாக மாறி இருக்கிறது மத்திய இணை அமைச்சர் எல்.முருகனின் ராஜினமா.
கட்சியை வளர்ப்பதற்காகவும் தமிழ்நாடு முழுவதும் சென்று கட்சியை விரிவுபடுத்தவும் வசதியாக தனது பதவியை ராஜினாமா செய்ய அனுமதிக்க வேண்டுமென பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி இருக்கிறார் எல்.முருகன்.
எல்.முருகன்
அது மட்டும் இல்லாமல் வளர்ச்சி அடைந்த இந்தியாவை நோக்கிய பயணத்தில் ஒவ்வொரு குடும்பமும் தங்கள் பங்கை உணர்ந்து பயன்பெற உதவ வேண்டும் என்ற அடிப்படையிலும், 2019 மக்களவைத் தேர்தலுக்கு கட்சியை தயார்படுத்தும் பணியில் தனது முழு நேரத்தையும் அர்ப்பணிக்க விரும்புவதாகவும் எல்.முருகன் கூறி இருக்கிறார். மத்திய பிரதேசத்திலிருந்து எல்.முருகன் ராஜ்யசபா எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் நிலையில் 2030 ஆம் ஆண்டு வரை அவருக்கு பதவி காலம் இருக்கிறது.
ராஜினாமா
ஆனால் கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்கு முன்பதாகவே அவர் பதவியை ராஜினாமா செய்திருக்கும் நிலையில் பின்னணியில் பல காரணங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. கட்சிக்காக உழைத்தவர்களுக்கு பதவி வழங்க வேண்டும், அமைச்சரவையிலும் பொறுப்பு வழங்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர்கள் பிரதமர் நரேந்திர மோடி இடம் ஆலோசனை சொன்னதாக சொல்லப்படுகிறது. இதை அடுத்து கட்சிக்கு ஆட்சிக்கு ஒழுங்காக பங்களிக்காதவர்களை களையெடுக்கும் பணியில் முதல் விக்கெட் தான் எல்.முருகன் என்கின்றனர்.
அமைச்சரவை மாற்றம்
விரைவில் அமைச்சரவை மாற்றம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் தாங்களாகவே பதவி விலகிக் கொள்ளுங்கள் என எல்.முருகனிடம் பாஜக தலைமை வலியுறுத்தியதாகவும் அதன் காரணமாகவே அவர் ராஜினாமா செய்ததாக சொல்கின்றனர். அது மட்டும் அல்லாமல் ஏற்கனவே நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக கரப்பான் பூச்சி நடத்திய போராட்டம் காரணமாக மத்திய அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்திருக்கிறார்.
புதிய பொறுப்பு
தற்போது அவர் எந்த பதவியிலும் இல்லாமல் இருக்கும் நிலையில் அமைச்சரவை மாற்றத்தில் அவருக்கு புதிய பொறுப்பு வழங்கப்படலாம் என சொல்லப்படுகிறது. இது மட்டும் அல்லாமல் இந்த ஆண்டு ஜூன் மாதம் கேரளாவை சேர்ந்த ஜார்ஜ் குரியனும் ராஜினாமா செய்தார். அதுமட்டுமல்லாமல் ரௌனித் சிங் பிட்டு கடந்த ஜூலை மாதம் தனது மத்திய அமைச்சர் பதவி ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.
மத்திய அமைச்சரவை
இது மட்டுமல்லாமல் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, பிஎல் வர்மா ஆகியோரின் ராஜ்யசபா எம்பி பதவிக்காலம் நிறைவடையும் நிலையில் அவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு தரப்படவில்லை. இதை அடுத்து மத்திய அமைச்சரவையில் பல புது முகங்கள் இடம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தான் அடுத்தடுத்து மத்திய அமைச்சர்கள் ராஜினாமா செய்து வரும் நிலையில் சமீபத்திய வரவாக அந்த பட்டியலில் எல். முருகனும் இணைந்து இருக்கிறார் என்கின்றனர். இன்னும் ஒரு மாதத்துக்குள் மத்திய அமைச்சர் அதில் பல மாற்றங்கள் இருக்கலாம் என்றும் சொல்கின்றனர்.




Click it and Unblock the Notifications
