Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கடைசி நாளில் எதிர்பாராத ‘ட்விஸ்ட்’.. ஆம் ஆத்மிக்கு அதிர்ச்சி கொடுத்த பாஜக.. ஆஹா.. ஆபரேஷன் லோட்டஸ்?

Subscribe to Oneindia Tamil

டெல்லி : டெல்லி மேயர், துணை மேயர் தேர்தல் வரும் ஜனவரி 6ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், பெரும்பான்மை பெற்றுள்ள ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர்களுக்கு எதிராக பாஜக தனது வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாளில் பாஜக கொடுத்த இந்த ட்விஸ்ட்டால், என்ன நடக்கப்போகிறதோ என ஆம் ஆத்மி கட்சியினர் மத்தியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

பெரும்பான்மை பலத்தைக் கொண்டிருக்கும் ஆம் ஆத்மி கட்சி மேயர், துணை மேயர் தேர்தலில் வெல்வது எளிது என்ற சூழலில், பாஜக தனது வேட்பாளர்களை நிறுத்தி இருப்பதால், மாநிலங்களில் எம்.எல்.ஏக்களை இழுத்து ஆட்சி அமைப்பது போல ஏதேனும் தந்திரங்களை பாஜக கையாளப் போகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஏற்கனவே பாஜக ஐடி விங் நிர்வாகி அமித் மால்வியாவின் பேச்சும் இதை ஒட்டியே இருந்த நிலையில், வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாளில் கொடுத்த ட்விஸ்ட்டால் ஆம் ஆத்மி கட்சியினர் அதிர்ந்து போயுள்ளனர்.

டெல்லி மேயர் தேர்தல்

டெல்லி மேயர் தேர்தல்

தலைநகர் டெல்லியில் மாநகராட்சி தேர்தல் கடந்த டிசம்பர் 4ஆம் தேதி நடைபெற்றது. டெல்லி மாநகராட்சியில் மொத்தமுள்ள 250 வார்டுகளில் 134 இடங்களை பிடித்து புதிய சாதனை படைத்தது ஆம் ஆத்மி கட்சி. கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக பாஜகவின் சாம்ராஜ்ஜியமாக இருந்த டெல்லி மாநகராட்சியை ஆம் ஆத்மி கட்சி கைப்பற்றியது. பாஜக 104 இடங்களில் வென்று இரண்டாம் இடம் பிடித்தது. இதையடுத்து வரும் ஜனவரி 6ஆம் தேதி மாநகராட்சி மேயர், துணை மேயர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் செய்ய நேற்று கடைசி தேதி என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆம் ஆத்மி

ஆம் ஆத்மி

வார்டு கவுன்சிலர்கள் வாக்களித்து மேயர், துணை மேயரை தேர்வு செய்வார்கள். வழக்கமாக எந்த கட்சிக்கு பெரும்பான்மை இருக்கிறதோ, அந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களே இந்தப் பதவிகளுக்கு தேர்வு செய்யப்படுவார்கள். அந்த வகையில் ஆம் ஆத்மி கட்சிக்குத் தான் அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. இதையொட்டி கிழக்கு படேல் நகர் கவுன்சிலர் ஷெல்லி ஓபராயை மேயர் பதவிக்கும், சந்தனி மகால் கவுன்சிலர் ஆலே முகமது இக்பாலை துணை மேயர் பதவிக்கும் ஆம் ஆத்மி கட்சி நிறுத்தியுள்ளது. இவர்கள் இருவரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இவர்களின் வெற்றி உறுதி என்றே பேசப்பட்டது.

குதிரை பேரம்

குதிரை பேரம்

இதற்கிடையே, டெல்லி மேயர் ரேஸில் வெல்ல, ஆம் ஆத்மி கவுன்சிலர்களிடம் பாஜக சார்பில் குதிரை பேரம் நடத்தப்பட்டதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியது. ஆம் ஆத்மி கட்சியின் 10 கவுன்சிலர்களை பேரம் பேசி விலைக்கு வாங்க 100 கோடி ரூபாய் பாஜக சார்பில் ஒதுக்கப்பட்டுள்ளதாக ஆம் ஆத்மி குற்றம்சாட்டியது. சில நாட்களுக்கு முன்பு மேயர், துணை மேயர் பதவிக்கான போட்டி ஓபன் ரேஸாக இருக்கிறது என்று பாஜக ஐடி விங் தலைவர் அமித் மால்வியா தெரிவித்ததும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

குண்டு போட்ட பாஜக நிர்வாகி

குண்டு போட்ட பாஜக நிர்வாகி

இதுதொடர்பாக தனது ட்விட்டரில் பாஜக நிர்வாகி அமித் மால்வியா, அடுத்து டெல்லி மேயர் தேர்தலை நோக்கி நகர்வோம். வாக்கு எண்ணிக்கையில் யார் அதிகபட்ச எண்ணிக்கையை நோக்கி நெருங்கி வருகிறார்களோ? அவர்களுக்கே வெற்றி வாய்ப்பு இருக்கிறது எனத் தெரிவித்திருந்தார். இதனால், பாஜக, கடைசி நேரத்தில் ஏதேனும் பெரிய சம்பவத்தை அரங்கேற்றக் கூடுமோ என்ற சந்தேகங்கள் எழுந்தன. எனினும், ஆம் ஆத்மி கட்சி கவுன்சிலர்கள் பாஜக பக்கம் செல்வது போன்ற சூழல் காணப்படவில்லை.

நாட்டை ஆளும் கட்சிக்கு

நாட்டை ஆளும் கட்சிக்கு

டெல்லி மேயர் மற்றும் துணை மேயர் தேர்தலில் பாஜக சுயேட்சை வேட்பாளரை தேர்தலில் நிறுத்த உள்ளது என்ற பேச்சுகள் தீவிரமாக எழுந்தன. இந்த தகவலை குறிப்பிட்டு, பாஜக தேர்தலில் போட்டியிட வேண்டுமென்றால் ஆம் ஆத்மி கட்சியை நேருக்கு நேர் எதிர்கொண்டு போராட வேண்டும். சுயேட்சை வேட்பாளரின் தோளில் துப்பாக்கியை வைப்பது ஒரு நாட்டையே ஆளும் இவ்வளவு பெரிய கட்சிக்கு பொருத்தமற்றது என ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியிருந்தது.

திடீர் ட்விஸ்ட்

திடீர் ட்விஸ்ட்

இந்தச் சூழலில் தான் திடீர் திருப்பமாக டெல்லி மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயர் தேர்தலுக்கான வேட்பாளர்களை நேற்று பாஜக. அறிவித்தது. ஷாலிமர் பாக் வார்டு கவுன்சிலர் ரேகா குப்தாவை மேயர் பதவிக்கும், ராம் நகர் வார்டு கவுன்சிலர் கமால் பாக்ரியை துணை மேயர் பதவிக்கும் பாஜக நிறுத்தியுள்ளது. ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் பெரும்பான்மை பெற்றுள்ள சூழலில் பாஜக வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது டெல்லி களத்தை அனலாக்கியுள்ளது. மாநில சட்டமன்றங்களில் செய்வது போல தனது அரசியல் ஆபரேஷனை டெல்லி மாநகராட்சி தேர்தலிலும் பாஜக செய்யப்போகிறதா என்ற கேள்விகள் எழுந்து வருகின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+