டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மாவோயிஸ்டுகள் வன்முறை, காஷ்மீரில் தீவிரவாத செயல்கள் பெருமளவு குறைந்தது.. மத்திய அரசு நிம்மதி!

Google Oneindia Tamil News

டெல்லி: நாட்டில் மாவோயிஸ்டுகளின் வன்முறை, காஷ்மீரில் தீவிரவாத செயல்கள் கணிசமாக குறைந்துள்ளதாக ராஜ்யசபாவில் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ராஜ்யசபாவில் உள்துறை இணை அமைச்சர்கள் ஜி கிஷன் ரெட்டி, நித்யானந்த் ராய் தெரிவித்த தகவல்கள் குறித்து மத்திய அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: கேரளா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், ராஜஸ்தான், பீகார், உத்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய இடங்களில் ஐஎஸ் அமைப்பின் செயல்பாடுகள் மிகத் தீவிரமாக இருப்பதாக தேசிய புலனாய்வு முகமையின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தனது கொள்கையைப் பரப்ப சமூக ஊடக தளங்களை ஐஎஸ் பயன்படுத்தி வருகிறது. சம்பந்தப்பட்ட முகமைகள் இணைய வெளியை தொடர்ந்து கண்காணித்து சட்டப்பூர்வ நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. நாட்டின் அரசியலமைப்பின் படி காவல் துறையும் பொது அமைதியும் மாநிலப் பட்டியலில் இருந்தாலும், தடவியல் ஆய்வகங்கள் உள்ளிட்ட வசதிகளின் அதிகரித்தல் மற்றும் மேம்பாட்டுக்காக மத்திய உள்துறை விவகாரங்கள் அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

ஜம்மு காஷ்மீரில் குறைவு

ஜம்மு காஷ்மீரில் குறைவு

சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதை தொடர்ந்து, ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத நடவடிக்கைகள் குறைந்துள்ளன. 2018 ஜூன் 29 முதல் 2019 ஆகஸ்ட் 4 வரையிலான 402 நாட்களில் 455 தீவிரவாத சம்பவங்கள் நடைபெற்ற நிலையில், 2019 ஆகஸ்ட் 5 முதல் 2020 செப்டம்பர் 9 வரையிலான 402 நாட்களில் 211 தீவிரவாத சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. 2019 ஆகஸ்ட் 5 முதல் 2020 செப்டம்பர் 9 வரை எந்த பெரிய தீவிரவாத சம்பவமும் நாட்டில் நடைபெறவில்லை.

மாவோ வன்முறைகளும் குறைந்தது

மாவோ வன்முறைகளும் குறைந்தது

இடதுசாரி தீவிரவாதம் (மாவோயிஸ்டுகள்) தொடர்பான வன்முறைகள் தொடர்ந்து குறைந்து உள்ளன. 2010-இல் இடதுசாரி தீவிரவாதம் தொடர்பான வன்முறைகளால் 1005 நபர்கள் உயிரிழந்த நிலையில், இந்த எண்ணிக்கை 2019-இல் 202 ஆகக் குறைந்துள்ளது. இடதுசாரி தீவிரவாதம் தொடர்பான வன்முறையைக் கட்டுப்படுத்துவதற்காக பல்முனை அணுகுதலைக் கொண்ட தேசிய கொள்கை மற்றும் செயல் திட்டத்தை 2015-இல் இந்திய அரசு செயல்படுத்தியது.

தீவிரவாத சட்டத்தின் கீழ் கைது

தீவிரவாத சட்டத்தின் கீழ் கைது

தேசிய குற்ற ஆவண காப்பகம் சேகரித்த தகவல்களின் படி, தீவிரவாத எதிர்ப்பு சட்டத்தின் கீழ் 2016, 2017 மற்றும் 2018-இல் முறையே 922, 901 மற்றும் 1182 வழக்குகள் பதியப்பட்டு, 999, 1554 மற்றும் 1421 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வெளிநாட்டுப் பண ஒழுங்குமுறை சட்டம், 2010-இன் கீழ் சுமார் 22400 சங்கங்கள்/அரசு சாரா நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு சங்கம்/அரசு சாரா நிறுவனமும் குறைந்தபட்சம் ஒரு வெளிநாட்டுப் பண ஒழுங்குமுறை சட்ட வங்கி கணக்கையாவது திறந்துள்ளன. அவற்றுக்கு விருப்பமான வங்கிகளில் ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகளையும் இந்த நிறுவனங்கள் திறக்கலாம். இது தொடர்பான மாநிலவாரியான தகவல்களை www.fcraonline.nic.in என்னும் இணைய தளத்தில் காணலாம்.

காஷ்மீரில் உயிரிழப்புகள் எவ்வளவு?

காஷ்மீரில் உயிரிழப்புகள் எவ்வளவு?

2019 ஆகஸ்ட் 5 முதல் 2020 செப்டம்பர் 10 வரை, ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதம் தொடர்பான சம்பவங்களில் 45 பொதுமக்களும், போர்நிறுத்த மீறல் சம்பவங்களில் 26 பொதுமக்களும் உயிரிழந்துள்ளனர். 2019 ஆகஸ்ட் 5 முதல் 2020 செப்டம்பர் 10 வரை, ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதம் தொடர்பான சம்பவங்களில் 49 பாதுகாப்புப் படை வீரர்களும், போர்நிறுத்த மீறல் சம்பவங்களில் 25 பாதுகாப்புப் படை வீரர்களும் உயிரிழந்துள்ளனர். தீவிரவாதத்தை ஒடுக்குவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. 2018-இல் தோராயமாக 328 ஊடுருவல்களும், 2019-இல் தோராயமாக 219 ஊடுருவல்களும், 2020 ஜூலை வரை 47 ஊடுருவல்களும் நடந்துள்ளன. 2018-இல் 257 தீவிரவாதிகளும், 2019-இல் 157 தீவிரவாதிகளும், 2020-இல் 168 பேரும் கொல்லப்பட்டுள்ளனர். 2018-இல் 17 தீவிரவாதிகளும், 2019-இல் 20 தீவிரவாதிகளும், 2020-இல் 9 தீவிரவாதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். 2018-இல் 37 ராணுவ வீரர்களும், 2019-இல் 21 ராணுவ வீரர்களும், 2020 செப்டம்பர் 9 வரை 18 ராணுவ வீரர்களும் உயிர் தியாகம் செய்துள்ளனர். இவ்வாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது.

English summary
MHA in Rajya Sabha told No. of civilians and security force personnel death by Left Wing Extremism related violence has reduced consistently from 1005 in 2010 to 202 in 2019.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X