Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

லிவிங் டுகெதர்.. ஃபிரிட்ஜில் கிடந்த டெல்லி பெண்.. படுக்கையில் மும்பை பெண்.. நடுங்க வைத்த காதலன்கள்

திருமணம் செய்யாமல் சேர்ந்த வாழ்ந்த இரண்டு பெண்கள் அடுத்தடுத்து டெல்லி மற்றும் மும்பையில் கொல்லப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தன்னுடன் சேர்ந்து வாழ்ந்த காதலியை கொன்று தாபாவில் உள்ள ஃப்ரீசரில் வைத்திருந்த தாபா உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார், இந்த சம்பவம் டெல்லியில் நடந்திருக்கிறது. இதனிடையே தன்னுடன் சேர்ந்து வாழ்ந்த செவிலியரை கொன்று படுக்கைக்கு அடியில் மறைத்து வந்த காதலன் கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்த சம்பவம் மும்பையில் நடந்துள்ளது. திருமணம் செய்யாமல் சேர்ந்த வாழ்ந்த இரண்டு பெண்கள் அடுத்தடுத்து பெரு நகரங்களில் கொல்லப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இன்றைய காலக்கட்டத்தில் சென்னை, மும்பை, டெல்லி, பெங்களூரு, ஹைதராபாத் போன்ற பெருநகரங்களில் லிவிங் டுகெதர் என்ற ரிலேசன்ஷிப் அதிகமாக உள்ளது. அதாவது திருமணம் செய்யாமல் கணவன் மனைவி போல் சேர்ந்து வாழ்கிறார்கள். அப்படி சேர்ந்து வாழும் அவர்களுக்குள் ஏதேனும் பிரச்சனை என்றால் பிரிந்து சென்றுவிடுவார்கள். சில நேரங்களில் சண்டைகளால் கொலையும் நடக்கிறது. பாலியல் துன்புறுத்தல்கள், தாக்குதல்கள் போன்றவற்றை எதிர்கொள்ளும் பெண்கள், வாழ்க்கையில் பின்னாளில் பெரும் சிக்கலையும் சந்திக்கிறார்கள்.

சரி விஷயத்திற்கு வருவோம். டெல்லி மற்றும் மும்பையில் கடந்த சில நாளில் மட்டும் லிவ்-இன் ரிலேசன்ஷிப்பில் இருந்த பெண்கள், தங்கள் காதலனால் கொடூரமாக கொல்லப்பட்டிருக்கிறார்கள். டெல்லியைச் சேர்ந்த பெண் தாபா ஓட்டல் உரிமையாளரால் கொல்லப்பட்டு ப்ரீசரில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கிறார். மும்பையிலோ, செவிலியர், அவரது காதலனால் கொல்லப்பட்டு படுக்கைக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டுள்ளார். இரண்டிலுமே குற்றவாளிகள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். முதலில் மும்பை சம்பவத்தை பார்ப்போம்.

வேலை இல்லை

வேலை இல்லை

மும்பை அருகே பால்கர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஹர்திக், இவர் மேகா என்ற செவிலியருடன் (வயது 37) திருமணம் செய்யாமல் சேர்ந்த வாழ்ந்து வந்துள்ளார். இவர்கள் மும்பை அருகே வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார்கள். வீட்டு செலவுகளை மேகா தான் பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார். ஹர்திக் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்ததால் அவர்களுக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டிருக்கிறது. இதனை அக்கம் பக்கத்தினர் உறுதி செய்துள்ளனர்.

உடல் மறைப்பு

உடல் மறைப்பு

இந்நிலையில் சம்பவத்தன்று ஹர்திக் மற்றும் மேகா இடையே வாய் தகராறு முற்றி உள்ளது. ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த ஹர்திக், மேகாவை தாக்கி கொலை செய்துள்ளார். அவரது உடலை என்ன செய்வது என்று யோசித்தவர், யாருக்கும் தெரியாமல் இருக்கும் என்று நினைத்து, படுக்கைக்கு அடியில் மறைத்து வைத்துள்ளார். பின்னர் எப்படியும் நம்மை போலீஸ் பிடித்துவிடும் என்று பயந்த ஹர்திக் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.

கைது செய்தனர்

கைது செய்தனர்

ஹர்திக் ஷா மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் இருந்து தப்பிச் செல்ல முயன்றுள்ளார். ஆனால் அதற்கு போலீசார் தகவல் அறிந்து ஹர்திக்கை கைது செய்ய வேண்டும் என அனைத்து காவல் நிலையத்திற்கும் தகவல் கொடுத்தனர். இதையடுத்து தப்பி செல்ல முயன்ற ஹர்திக்கை ரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர். விரைவில் விசாரணை அதிகாரிகளிடம் ஒப்படைக்க உள்ளார்கள்.
செவிலியர் மேகாவைக் கொன்ற பிறகு, ஹர்திக் சில வீட்டுப் பொருட்களை விற்றுவிட்டு பணத்துடன் தப்பி இருக்கிறார். அவர் ரயிலில் தப்பிச் செல்வதாக கிடைத்த தகவலின் பேரில், போலீசார் அவரது இருப்பிடத்தை கண்காணித்து, ரயில்வே போலீசார் உதவியுடன் கைது செய்திருக்கிறார்கள். குற்றம்சாட்டப்பட்ட ஹர்திக்கை கைது செய்ய குற்றப்பிரிவுக் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

காதலித்தனர்

காதலித்தனர்

இந்த கொலை பற்றி அக்கம் பக்கத்தில் உள்ள வீட்டினர் போலீசாரிடம் கூறுகையில், மூன்று வருடங்களாக காதலித்து வந்த ஹர்திக்கும், மேகாவும் கடந்த 6 மாதங்களாக திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தான் இந்த வாடகை வீட்டில் குடியேறினர்.

ஹர்திக்கிற்கு வேலை இல்லை. மேகாவிற்கு ஹர்திக்கிற்கும் அடிக்கடி தகராறு நடந்து வந்தது. இந்த சூழலில் கொலை நடந்திருக்கிறது என தெரிவித்தனர்.

டெல்லி சம்பவம்

டெல்லி சம்பவம்

இப்போது டெல்லியில் என்ன நடந்தது என்பதை பார்ப்போம். காதலித்து உல்லாசம் அனுபவித்துவிட்டு வேறு பெண்ணை திருமணம் செய்ய முயன்றதை தட்டி கேட்டதால் ஆத்திரப்பட்டு அந்த பெண்ணை கொன்றுள்ளார் தாபா உரிமையாளர். தெற்கு டெல்லியில் உள்ள நசாப் கார்க்கை சேர்ந்தவர் ஷாகில் கெலாட், இவர் டெல்லி உத்தம் நகரைச் சேர்ந்த நிக்கி யாதவ் என்ற 25 வயது இளம் பெண்ணை காதலித்து வந்துள்ளார். இருவரும் திருமணம் செய்யாமல் டேட்டிங்கில் இருந்து வந்துள்ளனர்.

வற்புறுத்தல்

வற்புறுத்தல்

ஒரு கட்டத்தில் ஷாகில் கெலாட், நிக்கி யாதவை திருமணம் செய்யாமல் அலைகழித்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பெண், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் சச்சின் கெலாட் வேறு பெண்ணை திருமணம் செய்ய திட்டமிட்டிருந்தார். அதனால் தான் அந்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்துள்ளார். ஆனால் சச்சின் கெலாட்டின் காதலி தன்னை திருமணம் செய்தே ஆக வேண்டும் என்று வற்புறுத்தி இருக்கிறார்.

சிக்கிய காதலன்

சிக்கிய காதலன்

இதனால் ஆத்திரம் அடைந்த ஷாகில் கெலாட் சில நாட்களுக்கு முன்பு டேட்டா கேபிளால் நிக்கி யாதவை கழுத்தை நெரித்து கொன்றுள்ளார். அத்துடன் உடலை தங்களுக்கு சொந்தமான தாபா ஓட்டலில் உள்ள பிரீசரில் வைத்துள்ளார். உடல் பிரீசரில் 3 நாட்களாக இருந்த நிலையில், இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் ஷாகில் கெலாட்டின் காதலி உடலை கைப்பற்றினர். உடலை மீட்டு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். ஷாகில் கெலாட்டையும் கைது செய்து விசாரித்து வருகிறார்கள். பெண்ணை கொன்று ஃபிரீசரில் காதலன் வைத்த சம்பவம் டெல்லியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருமணம் செய்யாமல் காதனோடு சேர்ந்து வாழ்ந்த இரண்டு பெண்கள் அடுத்தடுத்து கொல்லப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+