டெல்லி: தேசிய ஜனநாயக கூட்டணி தலைவராக பிரதமர் மோடி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். பிரதமர் மோடியை மீண்டும் பிரதமராக்க தேசிய ஜனநாயக ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கிடையே 3வது முறையாகப் பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள மோடிக்குச் சர்வதேச தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
18-வது லோக்சபா தேர்தல் நாடு முழுவதும் 543 தொகுதிகளில் பல்வேறு கட்டங்களாக ஏப்ரல் 19-ந் தேதி முதல் ஜூன் 1-ந் தேதி வரை நடைபெற்றது. இதனையடுத்து அனைத்து தொகுதிகளின் வாக்குகளும் எண்ணப்பட்டு வருகின்றன.
லோக்சபா தேர்தல் ரிசல்ட் லைவ் அப்டேட்டுகளை இந்தப் பக்கத்தில் காணலாம்
11:38 AM, 6 Jun
பிரதமர் மோடி ஜூன் 8ஆம் தேதி பதவியேற்க உள்ள நிலையில், அதில் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, நேபாள பிரதமர் பிரசந்தா ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
10:13 AM, 6 Jun
லோக்சபா தேர்தலில் பாஜகவுக்குத் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில் பாஜக தலைவர் ஜேபி நட்டா தலைமையில் அக்கட்சித் தலைவர்கள் ஆலோசனை நடத்துகிறார்கள். பிரதமர் மோடி, அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத்சிங் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
9:45 AM, 6 Jun
கர்நாடக முன்னாள் முதல்வர் எச்டி குமாரசாமியை அவரது இல்லத்தில் சென்று சந்தித்து பெங்களூர் பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா வாழ்த்து பெற்றார்.
#WATCH | Bengaluru: BJP MP Tejasvi Surya meets former Karnataka CM HD Kumaraswamy and his son and JD(S) Youth Wing President Nikhil Kumaraswamy, at their residence
ஆந்திராவில் முதல்வராக சந்திரபாபு நாயுடு வரும் ஜூன் 9ஆம் தேதி பதவியேற்க உள்ளதாகத் தகவல் வெளியான நிலையில், அது இப்போது தள்ளிப் போய் இருக்கிறது.. சந்திரபாபு நாயுடு வரும் ஜூன் 12ஆம் தேதி ஆந்திர முதல்வராகப் பதவியேற்பார் என கூறப்படுகிறது.
8:04 AM, 6 Jun
3வது முறையாகப் பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள மோடிக்கு அமெரிக்க அதிபர் பைடன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.. தேர்தலில் வாக்களித்த 65 கோடி மக்களுக்கும் வாழ்த்து தெரிவித்துக் கொள்வதாக பைடன் கூறியுள்ளார்.
7:42 AM, 6 Jun
அமலாக்க துறை உள்ளிட்ட விசாரணை அமைப்புகளால் விசாரிக்கப்பட்ட 13 பேர் தேர்தலுக்கு முன்பு கட்சி மாறியிருந்தனர். அவர்களில் 9 பேர் தேர்தலில் படுதோல்வி அடைந்துள்ளனர்
7:06 AM, 6 Jun
லோக்சபா தேர்தலில் வென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு சர்வதேச தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மோடியை தொடர்பு கொண்ட ரஷ்ய அதிபர் புதின் அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
6:45 AM, 6 Jun
"ராகுல் காந்தி தலைமை ஏற்கத் தயாராக இருந்தால்.. அதை நாங்கள் ஏன் ஆட்சேபிக்க வேண்டும்? அவர் தேசிய தலைவராகத் தன்னை பலமுறை நிரூபித்துள்ளார். நாட்டில் பிரபலமாக உள்ள தலைவர்களில் அவரும் ஒருவர். அனைவரும் அவரை விரும்புகிறோம். தேவைப்பட்டால் அவரை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தத் தயார்- சிவசேனா (தாக்கரே) எம்பி சஞ்சய் ராவத்
8:55 PM, 5 Jun
பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்புகொண்ட ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மோடிக்கு வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து இருநாட்டு உறவை மேலும் பலப்படுத்த இருவரும் சேர்ந்து பயணிப்போம் எனவும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மோடியிடம் பேசியுள்ளார்.
8:53 PM, 5 Jun
இந்தியா கூட்டணியின் குரல் மக்களின் குரல் என்பதை தேர்தல் முடிவு தெளிவாக்கியுள்ளது - ராகுல் காந்தி
இந்தியா கூட்டணி ஒருங்கிணைந்து பாஜகவின் மக்கள் விரோத போக்கை எதிர்ப்போம் - ராகுல் காந்தி
இந்தியா கூட்டணி கட்சி ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு ராகுல் காந்தி பேச்சு
8:23 PM, 5 Jun
லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்ற பிரதமர் மோடி மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த வரலாற்று தேர்தலில் கிட்டதட்ட 650 மில்லியன் வாக்காளர்கள் பங்கெடுத்துள்ளனர். இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான நட்பு மேலும் வலுப்பெறும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
7:29 PM, 5 Jun
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் டெல்லியில் நடந்த ஆலோசனை கூட்டம் நிறைவு பெற்றுள்ளது.
7:11 PM, 5 Jun
மக்களின் விருப்பத்திற்கு எதிராக பிரதமர் மோடி செயல்படுகிறார். தேர்தல் முடிவு மோடிக்கு எதிராக இருந்தும் மக்களின் விருப்பத்திற்கு மாறாக மோடி செயல்படுகிறார் என டெல்லியில் நடந்து வரும் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேச்சு.
6:52 PM, 5 Jun
டெல்லியில் ‛இந்தியா’ கூட்டணி கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது. டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வீட்டில் நடக்கும் இந்த கூட்டத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, தமிழக முதல்வர் ஸ்டாலின், திமுக எம்பி டிஆர் பாலு, அகிலேஷ் யாதவ், ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.
6:37 PM, 5 Jun
தேசிய ஜனநாயக கூட்டணி தலைவராக மோடி தேர்வு செய்யப்பட்டுள்ளார். கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் பாஜக ஆட்சி அமைக்கஉள்ள நிலையில் மோடி தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்
6:33 PM, 5 Jun
கார்கே வீட்டில் முதல்வர் ஸ்டாலின்
‛இந்தியா’ கூட்டணி கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டத்துக்காக டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வீட்டில் நடக்கும் முதல்வர் ஸ்டாலின், திமுக எம்பி டிஆர் பாலு ஆகியோர் வருகை. பத்திரிகையாளர்களை பார்த்து முதல்வர் ஸ்டாலின் கையசைத்து உற்சாகம்.
#WATCH | Delhi | DMK President MK Stalin reaches Congress President Mallikarjun Kharge's residence for meeting of the INDIA alliance pic.twitter.com/ozw2vXbtVB
இன்னும் சற்று நேரத்தில் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வீட்டில் ‛இந்தியா’ கூட்டணி கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் தொடங்குகிறது.
4:56 PM, 5 Jun
‛‛பாராளுமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றியடைந்த திமுக கூட்டணி தலைவர் என்னுடைய அருமை நண்பர் முதல் அமைச்சர் ஸ்டாலினுக்கு பாராட்டும், நன்றியும் தெரிவித்து கொள்கிறேன். அப்படியே என்னுடைய நண்பர் சந்திரபாபுநாயுடு ஆந்திர பிரதேசத்தில் பெரிய வெற்றியடைந்துள்ளார். அவருக்கும் வாழ்த்துகள். பாராட்டுகள். மத்தியில் என்டிஏ 3வது முறையாக ஆட்சி அமைக்க போகிறது. 3வது முறையாக மோடி பதவியேற்க உள்ளார். அவருக்கு ம் என்னுடைய பாராட்டுகள்’’ சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் பேட்டி
3:27 PM, 5 Jun
என்டிஏ ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள டெல்லி சென்றடைந்தார் சந்திரபாபு நாயுடு.
TDP chief N Chandrababu Naidu arrives at the residence of Jayadev Galla in Delhi.
மோடியின் ராஜினாமாவை ஏற்றார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
1:58 PM, 5 Jun
பிரதமர் பதவியில் இருந்து நரேந்திர மோடி ராஜினாமா
1:01 PM, 5 Jun
ஜூன் 8-ந் தேதி பிரதமராக மீண்டும் மோடி பதவியேற்கிறார்?
1:01 PM, 5 Jun
டெல்லி மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு என தகவல்
1:01 PM, 5 Jun
ஜனாதிபதியை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருகிறது பாஜக
1:01 PM, 5 Jun
கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் மீண்டும் பிரதமராகிறார் மோடி
12:50 PM, 5 Jun
டெல்லியில் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம்
12:50 PM, 5 Jun
மோடி தலைமையிலான பாஜக ஆட்சியின் கடைசி அமைச்சரவைக் கூட்டம்
12:50 PM, 5 Jun
தேர்தலில் தோற்ற அமைச்சர்கள் பங்கேற்கும் கடைசி அமைச்சரவைக் கூட்டம்
12:41 PM, 5 Jun
பாஜக கூட்டணியின் முதல்வர்கள் கூட்டம் ஜூன் 7ஆம் தேதி நடைபெறுகிறது.. டெல்லியில் என்டிஏ கூட்டணியில் உள்ள அனைத்து மாநில முதல்வர்களின் ஆலோசனைக் கூட்டம் நடக்க உள்ளது. .லோக்சபா தேர்தல் முடிவுகள் குறித்து இதில் ஆலோசிக்கப்படும் என தெரிகிறது.
12:18 PM, 5 Jun
"இந்தியா" கூட்டணி கூட்டத்தில் கலந்து கொள்ள மூத்த தலைவர் சரத்பவார் டெல்லி சென்றார். செய்தியாளர்களைச் சந்திக்காமலே விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றார்.
#WATCH | NCP-SCP chief Sharad Pawar and party MP Supriya Sule arrive in Delhi for the INDIA bloc meeting, scheduled for later today.
18-வது லோக்சபா தேரதலில் பதிவான வாக்குகள் அனைத்தும் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கும்.
4:54 AM, 4 Jun
542 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை
மொத்தம் உள்ள 543 லோக்சபா தொகுதிகளில் குஜராத்தின் சூரத் தொகுதியில் பாஜக வேட்பாளர் போட்டியின்றி தேர்வானார். இதனால் 542 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்குகிறது
5:00 AM, 4 Jun
சட்டசபை தேர்தல்கள் வாக்கு எண்ணிக்கை
ஆந்திரா (175) , ஒடிஷா (147) சட்டசபை தொகுதிகளில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. மேலும் விளவங்கோடு (தமிழ்நாடு) உள்ளிட்ட 25 சட்டசபை தொகுதி இடைத்தேர்தல்களில் பதிவான வாக்குகளும் இன்று எண்ணப்படுகின்றன.
5:01 AM, 4 Jun
அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம்
அருணாச்சலப் பிரதேசம் மற்றும் சிக்கிம் மாநில சட்டசபை தேர்தல்கள் வாக்கு எண்ணிக்கை ஜூன் 2-ந் தேதி நடைபெற்றது. அருணாச்சாலப் பிரதேசத்தில் மொத்தம் உள்ள 60 தொகுதிகளில் பாஜக 46 இடங்களைக் கைப்பற்றியது. சிக்கிம் மொத்தம் உள்ள 32 தொகுதிகளில் எஸ்கேஎம் 31 இடங்களில் வென்றது
5:02 AM, 4 Jun
முதலில் தபால் வாக்குகள்
காலை 8 மணிக்கு முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இதன் பின்னர் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும்.
#WATCH | Ahead of the Lok Sabha poll counting day, security heightened at a counting centre in the Siri Institutional Area, Delhi.
(Visuals from Jija Bai Industrial Training Institute for Women, August Kranti Marg, Siri Institutional Area) pic.twitter.com/OuGs6Qeuoh
18-வது லோக்சபா தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடத்தப்பட்டது. இத்தேர்தலில் மொத்தம் 64.2 கோடி பேர் வாக்களித்தனர்
5:09 AM, 4 Jun
543 தொகுதிகளில் 8,360 வேட்பாளகள்
நாட்டின் 18-வது லோக்சபா தேர்தலில் 543 தொகுதிகளில் மொத்தம் 8360 வேட்பாளர்கள் களம் கண்டனர். மொத்தம் 744 அரசியல் கட்சிகள் தேர்தலில் பங்கேற்றன. இதி 6 கட்சிகள் தேசிய கட்சிகள்.
5:11 AM, 4 Jun
எத்தனை சுற்றுகள் எண்ணப்படும்?
பொதுவாக மின்னணு வாக்குப் இயந்திரத்தில் பதிவான வாக்குகள் 19 முதல் 24 சுற்றுகள் வரை எண்ணப்படும். மொத்தம் 14 மேஜைகள் போடப்பட்டு வாக்குகள் எண்ணப்படும்.
5:36 AM, 4 Jun
எக்ஸிட் போல் முடிவுகள்
18-வது லோக்சபா தேர்தல் எக்ஸிட் போல் முடிவுகள் பெரும்பாலும் மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும் என கணித்துள்ளன. 2 எக்ஸிட் போல் முடிவுகள் மட்டும் இந்தியா கூட்டணி ஆட்சியை கைப்பற்றும் என கணித்திருந்தன
5:40 AM, 4 Jun
இனிப்புகள் தயார்
சத்தீஸ்கர் மாநிலத்தில் 201 கிலோ இனிப்புகளுடன் தேர்தல் வெற்றியை கொண்டாட தயார் நிலையில் இருக்கிறது பாஜக
5:45 AM, 4 Jun
மோடி, ராகுல் காந்தி
உத்தரப்பிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி, மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரளாவின் வயநாடு, உ.பி.யின் ரேபரேலி தொகுதிகளில் போட்டியிட்டுள்ளனர்
5:46 AM, 4 Jun
வயநாட்டில் ராகுல்- ஆனி ராஜா
கேரளாவின் வயநாடு லோக்சபா தொகுதியில் ராகுல் காந்தியும் இடதுசாரித் தலைவர் ஆனிராஜாவும் மோதுகின்றனர்.
5:58 AM, 4 Jun
ராஜஸ்தான் பாஜக அலுவலகத்தில் உற்சாகம்
வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு முன்னரே ராஜஸ்தான் மாநில பாஜக தலைமை அலுவலகத்தில் வெற்றி விழா கொண்டாட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
6:16 AM, 4 Jun
மோடி அமைச்சரவையில் நிதிஷ்குமார்?
மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி அமைத்தால் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தமது பதவியை ராஜினாமா செய்துவிட்டு மத்திய அமைச்சரவையில் இணைவார் என்கின்றன டெல்லி தகவல்கள்.
6:24 AM, 4 Jun
பலத்த பாதுகாப்பு
ஒடிஷாவின் புவனேஸ்வரில் வாக்கு எண்ணும் மையத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
6:33 AM, 4 Jun
உக்கிர மோதல் மாநிலங்கள்
லோக்சபா தேர்தலில் உ.பி., பீகார், மேற்கு வங்கம், ஒடிஷா மாநிலங்களின் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் மிக முக்கியமான இடம் பிடிக்கும்
6:42 AM, 4 Jun
ரேபரேலியில் தயார் நிலை
ராகுல் காந்தி போட்டியிடும் தொகுதிகளில் ஒன்றான உ.பி. ரேபரேலி தொகுதி வாக்குகள் எண்ணும் மையத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன
6:46 AM, 4 Jun
எக்ஸிட் போல் முடிவுகள் ஒப்பீடு
2019 மற்றும் 2024 லோக்சபா தேர்தல் குறித்த எக்ஸிட் போல் முடிவுகள் எப்படி இருந்தன?
6:58 AM, 4 Jun
புதுச்சேரியில் பதற்றம்
புதுச்சேரியில் வாக்கு எண்ணும் மையத்தில் துணை ராணுவ படைக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பதற்றம்.செல்போன் எடுத்து வந்தால் அனுமதிக்க முடியாது என் போலீஸ் கூறியதால் இரு தரப்பிற்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
7:25 AM, 4 Jun
களைகட்டும் பாஜக அலுவலகங்கள்
டெல்லி பாஜக தலைமை அலுவலகம் மற்றும் மாநிலங்க்ளில் பாஜக அலுவலகங்களில் இனிப்புகள் தயார் செய்யப்பட்டு கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
7:29 AM, 4 Jun
உ.பி.யில் முன்னெச்சரிக்கை
வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு உ.பி.யின் அனைத்து மாவட்டங்களிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.வாக்கு எண்ணிக்கை மையங்களில் மோதல்கள் ஏற்பட்டால் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
7:30 AM, 4 Jun
ஸ்டிராங் ரூம்கள் திறக்கப்பட்டன
வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த ஸ்டிராங் ரூம்கள் திறக்கப்பட்டு வாக்கு எண்ணுவதற்காக பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
7:46 AM, 4 Jun
கோவில்களில் வழிபாடு
வாக்கு எண்ணிக்கை தொடங்கும் நிலையில் வேட்பாளர்கள் கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்தினர். பின்னர் வாக்கு எண்ணும் மையங்களுக்கு புறப்பட்டுச் சென்றனர்.
8:04 AM, 4 Jun
தபால் வாக்குகள்
தற்போது தபால் வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்று வருகிறது.
8:12 AM, 4 Jun
தபால் வாக்குகளில் பாஜக முன்னிலை
தபால் வாக்குகளில் பாஜக கூட்டணி 93 இடங்களிலும் இந்தியா கூட்டணி 36 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன
8:17 AM, 4 Jun
பாஜக 157 இடங்களில் முன்னிலை
தபால் வாக்குகளில் பாஜக 157 இடங்களிலும் காங்கிரஸ் கூட்டணி 62 இடங்களிலும் முன்னணி வகிக்கின்றன
8:38 AM, 4 Jun
பாஜக கனவு தகருகிறது
கேரளாவில் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட பாஜக வேட்பாளர் நடிகர் சுரேஷ் கோபி பின்னடைவு
8:38 AM, 4 Jun
ராகுல் முன்னிலை
கேரளா வயநாடு லோக்சபா தொகுதியில் தபால் வாக்குகளில் ராகுல் காந்தி முன்னிலை
8:38 AM, 4 Jun
அமேதி ஸ்மிருதி இரானி
அமேதி தொகுதியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி முன்னிலை
8:38 AM, 4 Jun
ரேபரேலியில் ராகுல்
ரேபரெலி தொகுதி தபால் வாக்குகளில் ராகுல் காந்தி தொடர்ந்து முன்னிலை
Lok Sabha Election Results 2024 (லோக்சபா தேர்தல் முடிவுகள்) LIVE News Updates in Tamil: 2024 லோக்சபா தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுகள், இந்திய நாட்டை ஆளப்போகும் பிரதமர் யார்? எந்தெந்த தொகுதிகளில் யார் யார் வெற்றி தோல்வி? உள்ளிட்ட நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் இந்த பக்கத்தில் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
Notifications
Settings
Clear Notifications
No New Notifications
Notifications
Use the toggle to switch on notifications
Block for 8 hours
Block for 12 hours
Block for 24 hours
Don't block
To start receiving timely alerts, as shown below click on the Green “lock” icon next to the address bar
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on the Menu icon of the browser, it opens up a list of options.
Click on the “Options ”, it opens up the settings page,
Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page.
Scroll down the page to the “Permission” section .
Here click on the “Settings” tab of the Notification option.
A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification.
Once the changes is done, click on the “Save Changes” option to save the changes.