11 தேர்தல்களில் தொடர்ந்து வென்ற மக்கள் செல்வாக்கு தலைவர்.. யார் இந்த மல்லிகார்ஜூன கார்கே! பின்னணி
டெல்லி: அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கான தலைவர் தேர்தலில் 80 வயதான, மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வெற்றி பெற்றுள்ளார். கர்நாடகாவை சேர்ந்த மல்லிகார்ஜுன கார்கே 11 முறை தொடர்ந்து தேர்தலில் வெற்றி பெற்று சாதனை படைத்த மக்கள் செல்வாக்கு மிக்க தலைவர் என்பதால் காங்கிரஸ் கட்சியை அவர் இந்தியா முழுவதும் வலுபெற செய்வாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி உள்ள நிலையில் புதிய தலைவரை தேர்வு செய்ய தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி அக்டோபர் 17 ல் நடைபெறுவதாக முறைப்படி அறிவிப்பு வெளியானது. இதில் திருவனந்தபுரம் எம்பி சசிதரூர் போட்டியிடுவதாக முதன் முதலாக அறிவித்தார்.
அதேபோல் திக்விஜய் சிங் உள்பட இன்னும் சில தலைவர்கள் போட்டியிலாம் என்ற தகவல்கள் வெளியாகின. சோனியா காந்தி ஆதரவுடன் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் களமிறக்கப்படுவார் என்ற அறிவிப்பு வெளியானது.

காங்கிரஸ் தலைவர் தேர்தல்
ஆனால் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் காங்கிரஸ் தலைவர் பதவியை விரும்பாத நிலையில் ராஜஸ்தான் அரசியலில் குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து பின்வாங்கினார். இதையடுத்து சோனியா காந்தியின் ஆதரவுடன் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே களம் இறக்கப்பட்டார். காங்கிரஸ் தலைவர் தேர்தலில் சசீதரூர், மல்லிகார்ஜூன கார்கே மற்றும் ஜார்கண்ட் மாநில காங்கிரஸ் தலைவர் கேஎன் திரிபாதி ஆகியோர் மனுத்தாக்கல் செய்தனர். இதில் கேஎன் திரிபாதியின் மனு தள்ளுபடியானது.

மல்லிகார்ஜூன் கார்கே வெற்றி
இதையடுத்து காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மல்லிகார்ஜூன் கார்கே மற்றும் சசீதரூர் ஆகியோர் இடையே நேரடியாக போட்டி நடந்தது. தேர்தல் அக்டோபர் 17 ல் தேர்தல் நடந்தது. பொதுக்குழு உறுப்பினர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் உள்பட மொத்தம் 9900 பேர் ஓட்டளித்தனர். இதில் பதிவான ஓட்டுக்கள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் சோனியா காந்தி ஆதரவு பெற்ற வேட்பாளரான மல்லிகார்ஜூன் கார்கே 7,897 ஓட்டுக்கள் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சசீதரூர் வெறும் 1,000 ஓட்டுக்கள் மட்டுமே பெற்று தோல்வியடைந்தார். 416 ஓட்டுக்கள் செல்லாததாக அறிவிக்கப்பட்டது.

80 வயது - கர்நாடகத்தை சேர்ந்தவர்
காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக தேர்வாகி உள்ள மல்லிகார்ஜூன கார்கே சோனியா காந்தியின் குடும்பத்துக்கு மிகவும் நெருக்கமானவர். இவர் நீண்ட நெடிய அரசியல் அனுபவம் கொண்டவர் என்பதாலும், சோனியாவின் நம்பிக்கைக்கு உரியவர் என்பதாலும் தான் அவரை சோனியா காந்தி தேர்வு செய்த நிலையில் அவரே தற்போது தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மல்லிகார்ஜூன கார்கே கர்நாடகத்தின் கலபுரகியில் பிறந்தார். 1942ல் பிறந்த மல்லிகார்ஜூன கார்கேவுக்கு தற்போது வயது 80 ஆகும். இவர் தற்பாது மாநிலங்களைவில் எதிர்க்கட்சி தலைவராக இருந்த நிலையில் காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

கர்நாடகா தலைவராக..
இவர் கடந்த 1972 முதல் 2008 வரை 1972, 1978, 1983, 1985, 1989, 1994, 1999, 2004, 2008 வரை நடந்த சட்டசபை தேர்தலில் தொடர்ந்து 9 முறை வெற்றி பெற்றார். 1980இல் குண்டுராவ் அமைச்சரவையில் அமைச்சரானார். அதன்பிறகு 1990ல் எஸ் பங்காரப்பா அமைச்சரவை 1992 முதல் 1994 வரை எம் வீரப்ப மொய்லி அமைச்சரவையில் அமைச்சராக இருந்தார். 1996-99ல் கர்நாடகா எதிர்க்கட்சித் தலைவராகவும் செயல்பட்டார். 2005 முதல் 2008 வரை கர்நாடகா மாநில காங்கிரஸ் தலைவராகவும் செயல்பட்டார

தேசிய அரசியலில்..
அதன்பிறகு தேசிய அரசியலுக்கு 2009ல் தான் நுழைந்தார். 2009ல் முதல் முறையாக மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கலபுரகி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட அவர் வெற்றி பெற்று முதல் முறையாக எம்பியானார். முதல் முறையாக எம்பி ஆனாலும் கூட மூத்த அரசியல்வாதி என்பதால் மத்திய அமைச்சவையில் இடம் பிடித்தார். அப்போது பிரதமராக இருந்த மன்மோகன் சிங் அமைச்சரவையில் தொழிலாளர்த்துறை அமைச்சராகவும் செயல்பட்டார். அதன்பிறகு துறை மாற்றம் செய்யப்பட்டு ரயில்வே மற்றும் சமூக நீதி மற்றும் மேம்பாட்டத்துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்தார். இதையடுத்து 2014ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்றார். ஆனால் இந்த தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. இருப்பினும் நாடாளுமன்றத்தின் மக்களவையின் காங்கிரஸ் குழு தலைவராக மல்லிகார்ஜூன் கார்கே செயல்பட்டார்.

10 தேர்தலில் தொடர் வெற்றி
அதன்பிறகு கடந்த 2019ல் நடந்த தேர்தலில் கலபுரகி நாடாளுமன்ற தொகுதியில் மல்லிகார்ஜூன கார்கே தோல்வியடைந்தார். இவரை எதிர்த்து போட்டியிட்ட உமேஷ் யாதவ் வெற்றி பெற்றார். இந்த உமேஷ் யாதவ் என்பவர் காங்கிரஸில் இருந்து பாஜகவில் இணைந்து மல்லிகார்ஜூன் கார்கேவை வீழ்த்தினார். இதன்மூலம் மொத்தம் 11 தேர்தல் (9 சட்டசபை, 2 நாடாளுமன்ற தேர்தல்) தேர்தல்களில் தொடர்ந்து வெற்றி பெற்று சாதனை படைத்த மல்லிகார்ஜூன் கார்கே முதல் முறையாக தோல்வியை சந்தித்தார். தேர்தல் அரசியலில் தோல்வியை சந்திக்காத நபர் என்ற அவரது பெருமையும் முடிவுக்கு வந்தது.

சோனியாவின் நம்பிக்கைக்குரியவர்
இருப்பினும் அவரது அரசியல் அனுபவத்துக்காக மாநிலங்களவை எம்பி பதவி வழங்கப்பட்டது. தற்போது கர்நாடகத்தில் இருந்து அவர் மாநிலங்களை எம்பியாக உள்ளார். சமீபத்தில் குலாம் நபி ஆசாத்தின் பதவிக்காலம் முடிவுக்கு வந்ததால் மல்லிகார்ஜூன கார்கே மாநிலங்களை எதிர்க்கட்சி தலைவராக உள்ளார். இதுதவிர மல்லிகார்ஜூன கார்கே கர்நாடகத்தில் அமைச்சராகவும், கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவராகவும், எதிர்க்கட்சி தலைவராக செயல்பட்டார். மேலும் கடந்த 11 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சி சார்ந்து பல்வேறு முக்கிய பொறுப்புகளில் மல்லிகார்ஜூன் கார்கே பொறுப்பு வகித்துள்ளார். இந்த சமயத்தில் மல்லிகார்ஜூன கார்கே சோனியா காந்தி, ராகுல்காந்தியின் நம்பிக்கைக்குரிய நபராக தன்னை மாற்றி கொண்ட நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்வாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விடிய விடிய நடந்த பேச்சுவார்த்தை.. புதுவையில் திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிப்பு -
ஆதவ் அர்ஜூனா போட்ட குண்டு.. தூக்கி அடிக்கப்பட்ட காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் செல்வம் -
எண்ணி 2 நாள்.. காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைவார்கள்.. குட்டையை குழப்பும் ஆதவ் அர்ஜுனா -
பாஜக கூட ஓகே.. தவெகதான் பிரச்சனை.. செல்வப்பெருந்தகை சரமாரி குற்றச்சாட்டு -
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?.. -
"உங்களுக்கு 3 நாள் தான் டைம்.. உடனே காலி பண்ணுங்க.." காங்கிரஸுக்கு அதிர்ச்சி கொடுத்த நோட்டீஸ் -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
Sonia Gandhi: சோனியா காந்தி மருத்துவமனையில் திடீர் அனுமதி.. ஹாஸ்பிடலுக்கு விரைந்த ராகுல், பிரியங்கா! -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்!












Click it and Unblock the Notifications