மணிப்பூர் தேர்தல் தேதி மாற்றம்.. தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு.! காரணம் இது தான்
டெல்லி: மணிப்பூர் மாநிலத்தில் இரண்டு கட்டங்களாகச் சட்டசபைத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், வாக்குப்பதிவு தேதிகள் மாற்றப்படுவதாகத் தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.
உத்தரப் பிரதேசம், மணிப்பூர் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்குச் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. அதிகபட்சமாக உபி-இல் 7 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது.
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் 2 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி முதலில் பிப்ரவரி 27 மற்றும் மார்ச் 3 ஆகிய தேதிகள் வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

30 லட்சம் மக்கள் தொகையைக் கொண்ட மணிப்பூரில் சுமார் 41% கிறிஸ்துவர்கள். பிப்ரவரி 27ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சர்ச் நிகழ்வுகள் இருக்கும் என்பதால் முதல் கட்ட வாக்குப்பதிவை (பிப்ரவரி 27) ஒத்தி வைக்க வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தினர்.
இந்தச் சூழலில் தற்போது வாக்குப்பதிவு தேதிகளை மாற்றித் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி முதல் கட்ட வாக்குப்பதிவு பிப்ரவரி 28ம் தேதியும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு மார்ச் 5ம் தேதியும் நடைபெற உள்ளது.
உத்தரப் பிரதேசம், மணிப்பூர் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் வாக்குகள் வரும் மார்ச் 10ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
Annamalai: பாஜகவிலிருந்து இன்று விலகுகிறாரா அண்ணாமலை? நிதின் நபினுடன் ஆலோசனை -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்!












Click it and Unblock the Notifications