டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சமரச முயற்சி தோல்வி.. ஆகஸ்ட் 6ம் தேதி துவங்குகிறது அயோத்தி வழக்கு.. தினமும் ஓபன் கோர்ட்டில் விசாரணை

அயோத்தி வழக்கு வரும் ஆகஸ்ட் 6ம் தேதியில் இருந்து மீண்டும் தினமும் விசாரிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    அயோத்தி வழக்கில் மத்தியஸ்தர் குழு சமரச முயற்சி தோல்வி- வீடியோ

    டெல்லி: அயோத்தி வழக்கு வரும் ஆகஸ்ட் 6ம் தேதியில் இருந்து மீண்டும் தினமும் விசாரிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    அயோத்தி வழக்கு விரைவில் முடிந்துவிடும் என்று நினைத்த நிலையில் தற்போது மீண்டும் சுற்றி சுற்றி தொடங்கிய இடத்திலேயே வந்து நிற்கிறது. ஆம் அயோத்தி வழக்கு மீண்டும் முதலில் இருந்து விசாரிக்கப்பட உள்ளது. 1992ல் பாபர் மசூதி ஆர்எஸ்எஸ் கரசேவகர்களால் இடிக்கப்பட்டது.

    அப்போது தொடங்கிய பிரச்சனை இன்னும் முடியாமல் நீடித்து வருகிறது. அயோத்தியில் பாபர் மசூதி இருந்து பிடிக்கப்பட்ட இடமான 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்ற பிரச்சனைதான் இந்த சிக்கல் அனைத்துக்கும் காரணம்.

    அயோத்தி வழக்கில் மத்தியஸ்தர் குழு சமரச முயற்சி தோல்வி... உச்சநீதிமன்றம் அறிவிப்புஅயோத்தி வழக்கில் மத்தியஸ்தர் குழு சமரச முயற்சி தோல்வி... உச்சநீதிமன்றம் அறிவிப்பு

    என்ன பிரச்சனை

    என்ன பிரச்சனை

    இந்த பிரச்சனை தொடர்பான வழக்கு விசாரணை தற்போது உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. அயோத்தி வழக்கு தொடர்பான 14 மேல்முறையீட்டு மனுக்கள், மற்றும் புதிய மனு ஒன்று ஆகியவற்றின் மீதான விசாரணை நடந்து வருகிறது.

    என்ன யோசனை

    என்ன யோசனை

    இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காக உச்ச நீதிமன்றம் புதிய யோசனை ஒன்று இந்த வழக்கில் புகுத்தியது. எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த வழக்கில், மத்தியஸ்தர் குழுவை அமைத்தது. மத்தியஸ்தர்கள் மூலம் பிரச்சனையை பேசி தீர்க்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்தது. பெரும்பாலும் பிரச்சனை இதனால் தீரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    என்ன மார்ச்

    என்ன மார்ச்

    கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி முன்னாள் நீதிபதி கலிஃபுல்லா தலைமையில் மத்தியஸ்தர் குழு அமைக்கப்பட்டது. ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் இந்த குழுவில் இடம்பெற்றனர். இவர்களுக்கு கடந்த ஜூலை 18ம் தேதி வரை மத்தியசம் பேச அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால் அப்போது மத்தியச குழு அறிக்கையை தாக்கல் செய்யவில்லை.

    தாக்கல்

    தாக்கல்

    இதனால் மத்தியசம் பேச கூடுதல் அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து ஜூலை 31 வரை மத்தியஸம் பேச அவகாசம் வழங்கப்பட்டது. இவர்கள் சார்பில் நேற்று மத்தியச குழுவின் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கை மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடந்தது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நீதிபதிகள் டி.ஒய் சந்திரசூட், அப்துல் நசீர், அசோக் பூஷன், போப்டி ஆகியோர் அமர்வு இதை விசாரித்தது.

    தோல்வி

    தோல்வி

    ஆனால் இந்த சமரச முயற்சி தோல்வி அடைந்துவிட்டதாக மூவர் குழு தெரிவித்துள்ளது. இதனால் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது. ஆகஸ்ட் 6ம் தேதியில் இருந்து வழக்கு மீண்டும் விசாரிக்கப்படும். தினமும் வழக்கு விசாரிக்கப்படும்.

    யார் எல்லாம்

    யார் எல்லாம்

    உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நீதிபதிகள் டி.ஒய் சந்திரசூட், அப்துல் நசீர், அசோக் பூஷன், போப்டி ஆகியோர் அமர்வு வழக்கை விசாரிக்கும்.வழக்கு முழுக்க ஓபன் கோர்ட்டில் நடக்கும். இதனால் மக்கள் யார் வேண்டுமானாலும் வழக்கு விசாரணையை நேரில் பார்க்கலாம். வழக்கு முழுக்க முழுக்க வெளிப்படைத்தன்மையுடன் விசாரணை நடக்கும்.

    English summary
    Mediation failed: Ayodhya land dispute case will go for hearing from August 6th on a daily basis.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X