செல்லாது செல்லாது.. மாஸ்க் போடுங்க , தள்ளி இருங்க... ஓமிக்ரான் கம்மிங்
டெல்லி: புதியதாக கண்டுபிடிக்கப்பட்டு உலகை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸின் திரிபான ஓமிக்ரான், தடுப்பூசி மருந்தை 40 சதவீதம் வரை செயலலிழக்க வைக்கும் தன்மை கொண்டதாக இருக்குமென ஆய்வாளர்கள் கருதுவதால் மாஸ்க் அணிவது, தனிமனித இடைவெளி அவசியம் என சுகாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
தென்னாப்பிரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்று திடீரென அதிகரித்து 2400 பேர் வரை பாதிக்கப்பட்டனர். பிரிட்டோரியா மற்றும் அதைச் சுற்றியுள்ள நகரங்கள் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வைரஸ் பாதிப்பு அதிகமாக இருந்தது. இந்த புதிய வகை கொரோன வைரஸ் அதிகமான வேகத்தில் பரவும் தன்மை கொண்டதாகவும் உருமாற்றங்கள் அதிகம் கொண்டதாகவும் இருக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த புதிய வைரசுக்கு பி11529 என்றும், ஓமிக்ரான் எனவும் விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர். தென் ஆப்பிரிக்காவில் இருந்து சென்ற பயணிகள் உடலில் இருந்த கொரோனா வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து உச்சபட்ச எச்சரிக்கையில் உள்ள உலக நாடுகள் புதிய வகை வைரஸ் தாக்கத்தால் தங்கள் நாடுகளுக்கு விமான போக்குவரத்து மற்றும் பயணிகள் வர தடை கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய நாடுகள் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில் இந்தியாவும், தென்ஆப்பிரிக்கா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது தொடர்பாக பிரதமர் மோடி உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
மேலும் இந்த வகை வைரஸ் தடுப்பூசியை எதிர்க்கும் தன்மை கொண்டதாக அறிகுறிகள் இருப்பதால் தடுப்பூசி போட்டு இருந்தாலும் மக்கள் எச்சரிக்கை தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். தற்போதைய முதற்கட்ட ஆய்வு முடிவுகளின்படி, ஒமிக்ரான் வைரஸின் அடிக்கடி உருமாறும் தன்மை காரணமாக தடுப்பூசி மருந்துகளை 40 சதவீதம் அளவுக்கு எதிர்க்கும் தன்மை இருக்கும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
ஓமிக்ரான் அதிகமுறை உருமாற்றம் அடைவதால் இவை நிச்சயம் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று உலக சுகாதார நிறுவனத்தின் தொழில்நுட்ப பிரிவு தலைவர் டாக்டர். மரியா வான் கெர்கோ எச்சரித்துள்ள நிலையில், மாஸ்க் அணிதல், தனிநபர் இடைவெளியை கடைபிடித்தல், சானிடைசர் உபயோகம் போன்ற கொரோனா தடுப்பு நடவடிக்கைளில் தற்போது மக்கள் அலட்சியம் காட்டி வருகின்றனர்.
Recommended Video
இந்தநிலையில், மீண்டும் கடந்தாண்டுகளைப் போல் பாதிப்பு அதிகமானால் முழு அடைப்புதான் அரசின் அடுத்தகட்ட நடவடிக்கையாக இருக்கும். எனவே, நோய் தடுப்பு நடவடிக்கைகளை மக்கள் முறையாக கடைபிடிக்க வேண்டுமென நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications