Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அரசு பள்ளியில் குழந்தைகளோடு குழந்தையாக மகிழ்ச்சியாக இருந்த மெலனியா டிரம்ப்.. வைரல் வீடியோ

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அமெரிக்க அதிபரின் மனைவியும், அமெரிக்காவின் முதல் பெண்மணியான (கௌரவம்) மெலனியா டிரம்ப் இன்று டெல்லியில் அரசுப் பள்ளியில் குழந்தைகளுடன் உற்சாகமாக உரையாடினார். அவரை குழந்தைகள் ஆராத்தி எடுத்து மகிழ்ச்சியோடு வரவேற்றார்கள்.

Recommended Video

    அரசு பள்ளியில் குழந்தைகளோடு குழந்தையாக மகிழ்ச்சியாக இருந்த மெலனியா டிரம்ப்.. வைரல் வீடியோ

    இந்தியாவிற்கு இரண்டு நாள் பயணமாக வந்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், உடன் தனது மனைவி மெலனியா டிரம்ப் மற்றும் மகள், மருமகன் உள்ளிட்டோரையும் அழைத்து வந்துள்ளார்.

    Melania Trump Excited after Delhi govt school students welcome

    டிரம்பின் மனைவி மெலனியா டிரம்ப், டெல்லியின் நானக்புராவில் உள்ள சர்வோதய வித்யாலயா என்ற அரசு பள்ளிக்கு இன்று வருகை தந்தார். அந்த பள்ளியில் குழந்தைகளுக்கு "மகிழ்ச்சி வகுப்புகள்" கற்பிக்கப்படுகின்றன. அந்த வகுப்பில் அவர் கலந்து கொண்டார். அப்போது குழந்தைகள் {பூங்கொத்து அளித்து, ஆரத்தி எடுத்து மெலானியாவை வரவேற்றனர். பள்ளியில் பயிலும் 2,299 மாணவர்கள், 80 ஆசிரியர்கள் மற்றும் 50 ஊழியர்கள் அனைவரும் மெலானியா ட்ரம்பை இன்முகத்துடன் வரவேற்றார்கள்.

    ஆம் ஆத்மி ஆளும் டெல்லியில் அரசுப் பள்ளிகளில் ஏசி வகுப்பறைகள், நீச்சல் குளம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு உள்ளது. மெலனியா வந்த அரசு பள்ளியில் தியானம், யோகா, விளையாட்டு போன்ற பயிற்சிகள் முக்கித்துவம் கொடுத்து அளிக்கப்படுகின்றன. அதை எப்படி தருகிறார்கள் என்பதை மெலானியா நேரில் சென்று பார்வையிட்டார்.

    அத்துடன் மகிழ்ச்சியான வகுப்புகள் எப்படி எடுக்கப்படுகிறது என்பது குறித்து அரசுப் பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடினார். சுமார் 1 மணிநேரத்துக்கும் மேலாக பள்ளிக் குழந்தைகளுடன் மெலானியா நேரம் செலவிட்டார். அப்போது மாணவ மாணவிகள் தாங்கள் வரைந்த அழகான ஓவியங்களை அவருக்கு காண்பித்தனர். அத்துடன் நடனம் ஆடி மகிழ்வித்தனர். மெலனியா குழந்தைகளுடன் மகிழ்ச்சியுடன் இருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+