ஏங்க! பாலியல் புகாருக்குள்ளான பெண் என் வீட்டில் நடனமாடுவாரா.. அமைச்சர் மனைவி பகீர்!
டெல்லி: பாலியல் புகாருக்குள்ளான பெண் என் வீட்டில் நடனமாடுவாரா என அமைச்சர் எம் ஜே அக்பரின் மனைவி பகீர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மீ டூ என்ற இயக்கம் மூலம் பெண்கள் தங்களுக்கு எதிரான பாலியல் புகார் குறித்து புகார் கூறி வருகின்றனர். இதில் பிரபலங்கள் மீதும் புகார்கள் வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அந்த வகையில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எம் ஜே அக்பர் மீதும் புகார்கள் எழுந்துள்ளன. இவர் மீது 10-க்கும் மேற்பட்ட பெண்கள் புகார் கூறியுள்ளனர். எம்ஜே அக்பர் பத்திரிகையின் ஆசிரியராக இருந்த போது அமெரிக்காவை சேர்ந்த இந்திய பெண் பத்திரிகையாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பல்லவி கோகாய் சமீபத்தில் வாஷிங்டன் போஸ்ட்டில் வெளியிட்டிருந்தார்.
|
முதல்முறையாக
இதையடுத்து இந்த விவகாரம் 22 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றதாகும். அந்த காலகட்டத்திலும் அக்பர் அதிகாரமிக்க பத்திரிகையாளராக இருந்ததால் தன்னால் புகார் கூற முடியவில்லை என கூறினார். இந்நிலையில் இந்த குற்றச்சாட்டு குறித்து அக்பரின் மனைவி மல்லிகா முதல் முறையாக பேசியுள்ளார்.

நீதி நிலை நாட்ட வேண்டும்
அவர் கூறுகையில் மீ டூ விவகாரத்தில் என் கணவர் மீது பலரும் பாலியல் புகார்களை தெரிவித்துள்ளனர். ஆனால் நான் இதுநாள் வரை அமைதி காத்தேன். ஆனால் என்னுடைய கணவர் மீது பாலியல் புகார் கூறியுள்ள பெண் பத்திரிகையாளர் வாஷிங்டன் போஸ்ட்டில் செய்தி வெளியிட்டுள்ளார். அதில் நானும் அவருக்கு துணையாக இருந்து நீதியை நிலைநாட்ட வேண்டும் என்று கேட்டுள்ளார்.

போனில் அரட்டை
எனக்கு சில விஷயங்கள் புரியவில்லை. எனது கணவர் இரவு நேரங்களில் பல்லவியுடன்தான் இருந்தார். இருவரும் போனில் நீண்ட நேரம் பேசுவார்கள். நான் இருக்கும் போதே பொது இடங்களில் அவர்கள் இருவரும் அதிக நெருக்கமாக இருப்பார்கள். அவருடைய நெருக்கமான உறவால், என்னுடைய ஒட்டு மொத்த குடும்பத்தையே வேதனையில் ஆழ்த்தியது.

கணவருடன் நடனம்
இருவரும் பணிபுரிந்த பத்திரிகையின் மீட்டிங் உள்ளிட்டவை எங்கள் இல்லத்தில்தான் நடக்கும். அப்போது பல்லவி அனைத்து பத்திரிகையாளர் முன்னிலையிலும் என் கணவருடன் நடனம் ஆடுவார். அதை நான் அவமானத்துடனும் வலியுடனும் பார்த்துள்ளேன். நம் குடும்பத்திற்கு முக்கியத்துவம் கொடுங்கள் என்றேன். அதன் பிறகு என் குடும்பத்திற்கு முக்கியத்துவம் அளிக்க அவர் முடிவு செய்தார்.

இரவு உணவு
உஷிதா படேலும் பல்லவி கோகாயும் அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வந்து மது அருந்துவர். இரவு உணவையும் எங்களுடன் அருந்துவர். பாலியல் புகாரால் பாதிக்கப்பட்ட ஒரு பெண் இப்படி இருப்பாரா என்ற எனக்கு தெரியவில்லை. இப்படியொரு பொய்யை என்னுடைய கணவர் மீது அவர் சொல்வதற்கு என்ன காரணம் என்றும் தெரியவில்லை என்று மல்லிகா தெரிவித்துள்ளார்.
{document1}
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications