டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மோடி மீதான விமர்சனம்.. உச்ச நீதிமன்றத்தில் ராகுல் மீண்டும் வருத்தம்.. மன்னிப்பு கேட்க மறுப்பு!

பிரதமர் மோடியை உச்ச நீதிமன்றம் திருடர் என்று கூறிவிட்டது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியதற்கு தற்போது வருத்தம் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

டெல்லி: பிரதமர் மோடியை உச்ச நீதிமன்றம் திருடர் என்று கூறிவிட்டது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியதற்கு தற்போது வருத்தம் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்குமுன் பிரதமர் மோடியை உச்ச நீதிமன்றம் திருடர் என்று கூறியதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குறிப்பிட்டு இருந்தார். ரபேல் ஊழல் குறித்த செய்தியாளர் சந்திப்பில் ராகுல் இப்படி குறிப்பிட்டார்.

அவர் இப்படி பேசி இருந்தது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு எதிராக பாஜக வழக்கு தொடுத்தது. பாஜக எம்.பி மீனாட்சி லேகி இந்த வழக்கை தொடுத்து இருந்தார்.

லோக்சபா தேர்தலும்.. ஈரானுடன் ஏற்பட்ட மோதலும்.. எகிற போகிறது பெட்ரோல் டீசல் விலை.. பகீர் பின்னணி!லோக்சபா தேர்தலும்.. ஈரானுடன் ஏற்பட்ட மோதலும்.. எகிற போகிறது பெட்ரோல் டீசல் விலை.. பகீர் பின்னணி!

என்ன விளக்கம்

என்ன விளக்கம்

இதில் ராகுல் காந்தி தன்னுடைய விளக்கத்தை உச்ச நீதிமன்றத்தில் ஏற்கனவே அளித்து இருந்தார். ராகுல் காந்தி தனது விளக்கத்தில் ''நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டு இருக்கிறது. தேர்தல் பிரச்சாரத்தின் போது ஒரு வேகத்தில் ரபேல் விவகாரம் குறித்து அவ்வாறு பேசிவிட்டேன். உச்ச நீதிமன்றம் சொல்லாத ( மோடியையே திருடர் என்று) விஷயத்தை சொல்லிவிட்டதாக கூறியதற்கு வருத்தம் தெரிவிக்கிறேன், என்று குறிப்பிட்டார்.

மீண்டும்

மீண்டும்

ஆனால் ராகுல் காந்தியின் இந்த விளக்கத்தை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் அவருக்கு மீண்டும் இந்த வழக்கு தொடர்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டது. மோடியை உச்ச நீதிமன்றம் விமர்சித்ததாக தொடரப்பட்ட வழக்கில் மீண்டும் ராகுல் காந்தியிடம் விளக்கம் கேட்கப்பட்டது.

என்ன சொன்னார்

என்ன சொன்னார்

இதையடுத்து ராகுல் காந்தி தற்போது புதிய பிரமாணபத்திரம் ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இன்று காலை இந்த பிரமாணபத்திரத்தை ராகுல் காந்தி தாக்கல் செய்துள்ளார். இதிலும் ராகுல் காந்தி தான் தெரிவித்த கருத்துக்கு வருத்தம் தெரிவித்து இருக்கிறார்.

முடியாது

முடியாது

ஆனால் இதே பிரமாணபத்திரத்தில், நான் தெரிவித்தது திரித்து கூறப்பட்டுள்ளது. எனக்கு அரசியல் லாபத்திற்காக நீதிமன்றத்தை இழுக்கும் எண்ணம் எல்லாம் கிடையாது. நான் பேசியதற்காக வருத்தம் தெரிவிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். ஆனால் ராகுல் காந்தி இதற்காக மன்னிப்பு கேட்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நாளை

நாளை

இதேபோல் இன்று மத்திய அரசும் இந்த வழக்கில் பிரமாணபத்திரம் தாக்கல் செய்து இருக்க வேண்டும். நாளை வழக்கு விசாரணைக்கு வர உள்ளதால் பிரமாணபத்திரம் இன்று தாக்கல் செய்யப்பட வேண்டும். ஆனால் மத்திய அரசு பிரமாணபத்திரம் தாக்கல் செய்ய மேலும் கால அவகாசம் கேட்டு உள்ளது. இதற்காக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு அளித்துள்ளது.

English summary
Modi Chor Remark: Congress Chief Rahul Gandhi Once Again Expresses his Regret but No Apology.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X