டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்தியா இழந்தது கோல்டன் வாய்ப்பு... உச்சத்தில் கொரோனா... காங்கிரஸ் எம்பி குலாம் நபி விளாசல்!!

Google Oneindia Tamil News

டெல்லி: டிசம்பர் மாதத்தில் இருந்து கொரோனாவை தடுக்க மத்திய அரசு தவறிவிட்டது. நமக்கு அண்டை நாடாக சீனா இருந்தும் கவனம் செலுத்தவில்லை. கொரோனா குறித்து முதலில் ராகுல் காந்தி எச்சரிக்கை செய்தார் என்று இன்று ராஜ்ய சபாவில் காங்கிரஸ் எம்பி குலாம் நபி ஆசாத் தெரிவித்தார்.

இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை இந்தியாவில் கொரோனாவுக்கு 51 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 40 லட்சம் பேர் மீண்டுள்ளனர். 83,198 பேர் உயிரிழந்து இருக்கின்றனர். கொரோனா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் இருந்து உலக நாடுகளுக்கு பரவி இருந்தது.

எல்லாம் கொரோனா படுத்தும்பாடு.. சென்னை உள்பட 8 நகரங்களில் புதிய வீடு வாங்க ஆளில்லை.. என்ன காரணம்? எல்லாம் கொரோனா படுத்தும்பாடு.. சென்னை உள்பட 8 நகரங்களில் புதிய வீடு வாங்க ஆளில்லை.. என்ன காரணம்?

ஊரடங்கு

ஊரடங்கு

ஆனால், இந்தியாவில் கடந்த மார்ச் 25 ஆம் தேதி முதல்தான் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டு இருந்தது. வர்த்தகம், தொழில் நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகள் என்று அனைத்தும் மூடப்பட்டன. துவக்கத்தில் மெதுவாக பரவி வந்த தொற்று சமீப நாட்களில் அதிகரித்து வருகிறது. இதற்குக் காரணம் பல மாநிலங்களில் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது.

மத்திய அரசு

மத்திய அரசு

இதனால், மக்கள் சகஜ வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். தொற்றும் அதிகரித்து வருகிறது. இதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். துவக்கத்திலேயே கட்டுப்படுத்துவற்கு மத்திய அரசு தவறிவிட்டது என்று கண்டனம் தெரிவித்துள்ளனர்.

உயிரிழப்பு தவிர்ப்பு

உயிரிழப்பு தவிர்ப்பு

இதற்கிடையே நேற்று லோக் சபாவில் பேசி இருந்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், இந்தியாவில் கொரோனா பெரிய அளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் சுமார் 80000த்துக்கும் அதிகமான உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளது என்று தெரிவித்து இருந்தார்.

அறிவியல்

அறிவியல்

இதற்கு காங்கிரஸ் எம்பியும், லோக் சபா தலைவருமான அதிர் ரஞ்சன் சவுத்ரி கடுமையான கண்டனம் தெரிவித்து இருந்தார். எந்த அறிவியலின் அடிப்படையில் இதுபோன்ற தகவல்களை அவையில் தெரிவிக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

ராகுல் காந்தி

ராகுல் காந்தி

இந்த நிலையில் இன்று ராஜ்ய சபாவில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்பியுமான குலாம் நபி ஆசாத், ''சீனாவின் அண்டை நாடாக இந்தியா இருக்கிறது. அப்படி இருந்தும் கடந்த டிசம்பரில் இருந்து கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசு தவறிவிட்டது. கோல்டன் வாய்ப்பை இந்தியா இழந்துள்ளது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி துவக்கத்தில் இருந்தே இதுகுறித்து எச்சரித்து வந்தார். ஆனால், நிராகரிக்கப்பட்டுள்ளது'' என்றார்.

English summary
Modi govt wasting golden months since December says MP Ghulam Nabi Azad
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X