காவி ஆடையில் கவர்ச்சி நடனம்.. வாயை கொடுத்து சிக்கிக்கொண்ட பாஜக ஆதரவு பெண் எம்.பி.. பழைய வீடியோ லீக்
டெல்லி: வரும் ஜனவரியில் வெளியாக உள்ள 'பதான்' திரைப்படத்திற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இந்நிலையில் இது குறித்து முன்னாள் நடிகையும் பாஜக ஆதரவு சுயேச்சை எம்.பி.யுமான நவ்நீத் கவுர் ராணா (Navneet Kaur Rana) கூறியுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் ஷாருக்கானின் 'பதான்' திரைப்படம் வரும் ஜனவரி 25ம் தேதி தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'பேஷரம் ரங்' எனும் பாடல் பாஜகவினர் மத்தியில் கடும் எதிர்ப்பை கிளப்பி இருக்கிறது.

தடை செய்ய வலியுறுத்தல்
இந்த பாடலில் காவி உடையில் நடிகை தீபிகா படுகோன் கவர்ச்சியாக நடனமாடியுள்ளார். இதற்குதான் பாஜக தலைவர்கள் மற்றும் இந்துத்துவ அமைப்பினர் பலர் கடும் விமர்சனம் தெரிவித்து வருகின்றனர். மத்தியப் பிரதேசத்தில் ஷாருக்கானை எதிர்த்து இந்து அமைப்பினர் அவரது உருவ பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல இந்து மகாசபையின் தேசிய தலைவரான சக்கரபாணி மகாராஜ் "ஷாருக்கானின் இந்த படத்தில் காவியும் இந்து மதமும் அவமதிக்கப்பட்டுள்ளது. தணிக்கை வாரியம் தூங்கி கொண்டிருந்ததா? என்கிற கேள்விதான் எழுகிறது. படத்தை தடைசெய்ய நாங்கள் வலியுறுத்துகிறோம். படம் திரையிடப்பட்டால் அதனை நாங்கள் தொடர்ந்து எதிர்ப்போம்" என்று கூறியிருந்தார்.

மிரட்டல்
அதேபோல அயோத்தியின் அனுமன் காரி மடத்தின் தலைவர் ராஜு தாஸ் கூறுகையில், "காவி நிறத்தில் பிகினி உடை ஏன் அணிய வேண்டும்? பாலிவுட் திரையுலகம் தொடர்ந்து சனாதன தர்மத்தை கிண்டல் செய்து வருகிறது. தீபிகா படுகோன் காவி உடையில் பிகினி அணிந்திருந்தாலும், அவருடன் நடனமாடும் ஷாருக்கான் சனாதன தர்மத்தை தொடர்ந்து எதிர்த்து வருகிறார். எனவே இந்த திரைப்படம் புறக்கணிக்கப்பட வேண்டும். மீறி திரையிடப்படுமானால் அந்த தியேட்டர்கள் தீயிட்டு கொளுத்தப்பட வேண்டும்" என்று கூறியுள்ளார். மட்டுமல்லாது இந்த திரைப்படத்தை எடுத்தவர்களுக்கும் இதே தண்டனையை கொடுக்க வேண்டும் என கூறியுள்ளார். இவரது இக்கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக எம்பி
இந்நிலையில் இன்று நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் நடிகையும், பாஜக ஆதரவு எம்பியுமான நவ்நீத் ராணா, "நாங்கள் மிகவும் நேர்மையாக இருக்கிறோம். ஆனால் எங்கள் மத உணர்வுகளுடன் தொடர்ந்து விளையாடி வருகிறார்கள். தணிக்கை வாரியம் தங்களது பணியை சரியாக செய்ய வேண்டும். இதுபோன்று மத உணர்வுகளுடன் விளையாடும் காட்சிகள் இருப்பின் அந்த காட்சிகள் தணிக்கை செய்யப்பட வேண்டும். திரையரங்குகளில் திரையிடப்படும்போது அக்காட்சிகள் இடம்பெற்றிருக்கக்கூடாது. இதனை தணிக்கை வாரியம்தான் உறுதி செய்ய வேண்டும்" என்று கூறியுள்ளார்.

காவியில் கவர்ச்சி
இந்த கருத்து டிவிட்டரில் பரவலாக பகிரப்பட்டு வரும் நிலையில், 'Alt News' செய்தி நிறுவனத்தின் இணை நிறுவனரான முகமது ஜுபைர் பாஜக ஆதரவு எம்பி நவ்நீத் ராணாவின் பழைய தமிழ் பாடல் வீடியோ ஒன்றை பகிர்ந்து இந்த தமிழ் பாடல் உங்களுக்கு நினைவிருக்கிறதா? என்று கேள்வியெழுப்பியுள்ளார். அதாவது கடந்த 2010ம் ஆண்டு வெளிவந்த 'அம்பாசமுத்திரம் அம்பானி' திரைப்படத்தின் பாடல்தான் இந்த வீடியோ. இதில் தற்போது பேட்டியளித்த பாஜக எம்பி நவ்நீத் ராணா காவி உடையில் கவர்ச்சியாக நடனம் ஆடியிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications