முல்லைப் பெரியாறு அணை உடைய வாய்ப்பு.. 35 லட்சம் பேருக்கு ஆபத்து.. உச்சநீதிமன்றத்தில் ஜாய் ஜோசப் மனு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: முல்லைப் பெரியாறு அணை கட்டமைப்பு ரீதியாக பலவீனமாகவும், இயற்கை சீற்றத்தால் செயலிழக்கும் அபாயம் உள்ளது என ஐக்கிய நாடுகளின் நீர், சுற்றுசூழல், சுகாதாரத்துக்கான ஆராய்ச்சி பல்கலைகழகத்தின் ஆய்வில் கூறப்பட்டுள்ளதாக சேர்ந்த ஜாய் ஜோசப் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

முல்லைப்பெரியாறு வழக்கில் அணையின் இயக்கம், செயல்பாடு பராமரிப்பு உள்ளிட்டவை அடங்கிய Rule curve தொடர்பாக மத்திய அரசு தாக்கல் செய்த நிலை அறிக்கைக்கு பதில் கேரளாவை சேர்ந்த மனுதாரரான ஜாய் ஜோசப் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், மத்திய அரசின் நிலை அறிக்கை தொழில்நுட்ப ரீதியாக தவறாக உள்ளது என கூறியுள்ள அவர், முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக மத்திய அரசு தாக்கல் செய்துள்ள நிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள வாதங்கள் பொருத்தமற்ற வகையில் உள்ளன என்று தெரிவித்துள்ளார்.

 முல்லை பெரியாறு

முல்லை பெரியாறு

குறிப்பாக, உலகில் உள்ள 6 அணைகள் கட்டமைப்பு ரீதியாக பலவீனமாகவும், இயற்கை சீற்றத்தால் செயலிழக்கும் அபாயம் உள்ளது என ஐக்கிய நாடுகளின் நீர், சுற்றுசூழல், சுகாதாரத்துக்கான ஆராய்ச்சி பல்களைகழகத்தின் ஆய்வில் கூறப்பட்டுள்ளது, அவ்வாறு ஆபத்தான நிலையில் உள்ள 6 அணைகளில் "முல்லை பெரியாறு" அணையும் ஒன்று என தெரிவிக்கப்பட்டுள்ளது, இதில் ஏற்கனவே 4 அணைகளின் இயக்கம் மற்றும் செயல்பாடு நிறுத்தப்பட்டுவிட்ட நிலையில், ஜிம்பாபே நாட்டில். உள்ள கரிபா அணையும், இந்தியாவில் உள்ள முல்லை பெரியாறும் மட்டுமே இயக்கத்தில் உள்ளது, இது ஆபத்தாக ஒன்றாகும். மேலும் பெருவெள்ள காலத்தில் முல்லை பெரியாறு அணை ஆபத்தான வகையில்தான் இயக்கப்பட்டு வருவதாகவும், இதனால் அணையின் கீழ் பகுதியில் வசிக்கும் 35 லட்சம் மக்களின் உயிருக்கு அபாயம் உள்ளதாக ஜாய் ஜோசப் தனது பதில் மனுவில் தெரிவித்துள்ளார்.

தொழில்நுட்ப ரீதியாக தவறு

தொழில்நுட்ப ரீதியாக தவறு

மேலும், இதுபோன்ற அறிவில்பூர்வமான ஆராய்ச்சி தகவல்களை எல்லாம் மத்திய அரசு மறைத்துள்ளது, அவர்களின் நிலை அறிக்கை என்பது தரவுகள் அடிப்படையிலும், தொழில்நுட்ப ரீதியாகவும் தவறானது. எனவே அந்த அறிக்கையை நிராகரிக்க வேண்டும் எனவும் பதில் மனுவில் மனுதாரர் ஜாய் ஜோசப் தெரிவித்துள்ளார்.

அவகாசம் கேட்பு

அவகாசம் கேட்பு

முன்னதாக, முல்லைப்பெரியாறு வழக்கில், அணையின் இயக்கம், செயல்பாடு பராமரிப்பு உள்ளிட்டவை அடங்கிய Rule curve தொடர்பாக மத்திய அரசு தாக்கல் செய்த நிலை அறிக்கைக்கு பதில் அளிக்க 4 வாரம் கால அவகாசம் வழங்க வேண்மென கேரள அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் அவகாசம் கேட்டு கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. வழக்கு வரும் 26ம் தேதி விசாரணைக்கு வரவிருந்த நிலையில் கேரள அரசு தரப்பு வழக்கறிஞர் 4 வாரம் அவகாசம் கோரி கடிதம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசு ஏற்பு

மத்திய அரசு ஏற்பு

ஏற்கனவே, முல்லை பெரியாறு அணை தொடர்பாக கேரள அரசின் தரவுகள் தவறானவை என மத்திய அரசு பதிலளித்திருந்ததோடு, அணையின் இயக்கம், பராமரிப்பு, செயல்பாடு உள்ளிட்டவை தொடர்பாக தமிழக அரசு தயாரித்து அளித்த rule curve எனப்படும் செயல்பாட்டு விதிமுறை அறிக்கையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+