ஜிவி பிரகாஷ் குமார் - எம்எஸ் பாஸ்கருக்கு தேசிய விருது.. பார்க்கிங் படத்துக்கும் தேசிய விருது
டெல்லி: டெல்லியில் 71வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழில் வெளியான ‛பார்க்கிங்' திரைப்படம் சிறந்த திரைப்படமாக தேர்வாகி உள்ளது. இந்த திரைப்படத்துக்கு 3 தேசிய விருதுகள் கிடைத்துள்ளது. இந்த படத்தில் நடித்த எம்எஸ் பாஸ்கருக்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது கிடைத்துள்ளார். அதேபோல் ‛வாத்தி’ திரைப்படத்தில் இசையமைத்த இசையமபை்பாளர் ஜிவி பிரகாஷ் குமாருக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது.
நம் நாட்டில் சினிமா துறையில் மிகப்பெரிய விருதாக தேசிய விருது உள்ளது. மத்திய அரசு சார்பில் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. சிறந்த நடிகர், நடிகைகள், சிறந்த கதை, சிறந்த இசையமைப்பாளர் உள்பட பல்வேறு பிரிவுகளில் இந்த விருது ஒவ்வொரு ஆண்டுகள் வழங்கப்பட்டு வருகிறது.
மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறையின் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் துறையின் இணையமைச்சர் எல் முருகன் ஆகியோரிடம் ஜூரி உறுப்பினர்கள் 2023ம் ஆண்டுக்கான தேசிய விருது பட்டியலை இன்று வழங்கினர்.

இதையடுத்து இன்று மாலையில் டெல்லிநேஷனல் மீடியா சென்டரில் 71வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டது. 2023ம் ஆண்டில் வெளியான திரைப்படங்களில் அடிப்படையில் இந்த விருது அறிவிக்கப்பட்டது.
அதன்படி Feature films பிரிவில் 2023ம் ஆண்டில் தமிழில் வெளியான ‛பார்க்கிங்‛ திரைப்படத்துக்கு மொத்தம் 3 தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. வாடகை வீட்டில் ‛பார்க்கிங்’ பிரச்சனையை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டு இருந்தது. ‛பார்க்கிங்' திரைப்படத்தை இயக்குநர் ராம் குமார் பாலகிருஷ்ணன் இயக்கி இருந்தார். பேஷன் ஸ்டுடியோஸ், சோல்ஜரஸ் பேக்டரி என்ற நிறுவனம் தயாரித்து இருந்தது.
திரைப்படத்தில் நடிகர்கள் ஹரிஷ் கல்யாண், சிந்துஜா, எம்எஸ் பாஸ்கர் உள்பட பலர் நடித்து இருந்தனர்.இந்நிலையில் தான் தமிழில் சிறந்த தமிழ் திரைப்படமாக ‛பார்க்கிங்’ தேர்வு செய்யப்பட்டு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அந்த படத்தில் நடித்த எம்எஸ் பாஸ்கருக்கு சிறந்த துணை நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருது ‛பார்க்கிங்' திரைப்பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான ‛வாத்தி' திரைப்படத்துக்கு இசையமைத்த ஜிவி பிரகாஷ் குமாருக்கு சிறந்த இசையமைப்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கும் தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஜிவி பிரகாஷ் குமார் ஏற்கனவே ஆடுகளம் திரைப்படத்துக்கு தேசிய விருது வென்றிருந்த நிலையில் இது அவரது 2வது தேசிய விருதாகும்.
மேலும் இயக்குநர் அட்லீ இயக்கிய ஜவான் திரைப்படத்தில் நடித்த நடிகர் ஷாருக்கானுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் Non feature film பிரிவில் தமிழ் ஆவணப்படமான லிட்டில் விங்ஸ் சிறந்த ஒளிப்பதிவுக்கான விருது வென்றுள்ளது. மேலும் 'தி டைம்லெஸ் தமிழ்நாடு' என்ற ஆங்கிலப்படத்துக்கு விருது சிறந்த கலை கலாசார படத்துக்கான தேசிய விருது கிடைத்துள்ளது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications