குடியரசுத் தலைவர் தேர்தல்.. ஃபரூக் அப்துல்லா விலகல்.. வேட்பாளர் தேர்வில் திணறுகிறதா எதிர்க்கட்சிகள்?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக போட்டியிட விரும்பவில்லை என்று தேசிய மாநாட்டு கட்சியின் ஃபரூக் அப்துல்லா அறிவித்துள்ளார்.

குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் ஜூன் 15ம் தேதி தொடங்கியுள்ளது. இதில் வேட்பாளர் யார் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்தநிலையில் பொதுவான ஒரு வேட்பாளரை தேர்வு செய்ய மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தரப்பில், 22 எதிர்க்கட்சிகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. அதில், குடியரசுத் தலைவர் வேட்பாளர் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

National Conference chief Farooq Abdullah withdraws his name for consideration as joint oppositions presidential candidate

இதனைத்தொடர்ந்து நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில், குடியரசுத் தலைவர் தேர்தலில் சரத் பவார் மறுப்பு தெரிவித்தார். இதனால் பொதுவான வேட்பாளரை கண்டறிய, 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவில் மம்தா பானர்ஜி, மல்லிகார்ஜுனா கார்கே மற்றும் சரத் பவார் ஆகியோர் இடம்பெற்றனர்.

இந்தக் குழு குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யாரை நிறுத்தலாம் என்று முடிவு செய்யும் என்று கூறப்பட்டது. இதனைத்தொடர்ந்து அந்தக் குழு பல்வேறு மூத்தத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வரும் நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஃபரூக் அப்துல்லாவிடம் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் ஃபரூக் அப்துல்லா, நான் குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிட விரும்பவில்லை. ஜம்மு காஷ்மீர் மாநில மக்களுக்கும், இந்தியாவுக்கும் தொடர்ந்து சேவை செய்ய விரும்புகிறேன். குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக என்னை முன்மொழிந்த மம்தா பானர்ஜிக்கும், எனக்கு அழைத்து ஆதரவு கூறிய எதிர்க்கட்சித் தலைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கடினமான சூழலில் ஜம்மு காஷ்மீர் மாநில சிக்கி இருப்பதால், நான் குடியரசுத் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார்.

குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றிபெற பாஜகவுக்கு 13 ஆயிரம் வாக்குகள் மட்டுமே கூடுதலாக தேவை என்பதால், எதிர்க்கட்சிகளின் வெற்றி மிகவும் கடினம். இதனால் வேட்பாளரை தேர்வு செய்வதில் எதிர்க்கட்சிகளுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. வரும் 21ஆம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்து எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் மீண்டும் நடைபெற உள்ளதால், அடுத்த சில நாட்களுக்குள் வேட்பாளரை எதிர்க்கட்சிகள் தேர்வு செய்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+