2023ல் நீட்..க்யூட்..ஜேஇஇ தேர்வுகளுக்கு தயாராகுங்கள் மாணவர்களே..தேசிய தேர்வு முகமை அறிவிப்பு
டெல்லி: ஜேஇஇ முதல்கட்ட மெயின் தேர்வு 2023 ஆம் ஆண்டு ஜனவரி 24ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. அடுத்த ஆண்டு மே 7ல் நீட் தேர்வு நடத்தப்படும் எனவும் மே 21 முதல் 31 வரை பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான கியூட் தேர்வு நடைபெறும் எனவும் தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பொறியியல், மருத்துவம், மத்திய அரசு பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கைக்கான பொது நுழைவுத்தேர்வு தேதிகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் நீட் தேர்வு நடைபெறுவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை கடந்த பல ஆண்டு காலமாக எழுந்து வரும் நிலையில் 2023ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு தேதியினை தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

ஜேஇஇ முதற்கட்ட தேர்வு
அடுத்த ஆண்டுக்கான ஜேஇஇ முதல்கட்ட மெயின் தேர்வு ஜனவரி 24ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடக்கிறது. 26ம் தேதி மட்டும் தேர்வு நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் 2ம் கட்ட தேர்வு ஏப்ரல் 6 முதல் 12ம் தேதி வரை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நீட், க்யூட் தேர்வுகள்
எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கான நீட் தேர்வு மே 7ம் தேதி நடக்கிறது. மேலும் மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை பட்டப்படிப்புகளில் சேர்வதற்கான கியூட் நுழைவுத்தேர்வு அடுத்த ஆண்டு மே 21 முதல் 31ம் தேதி வரை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பல்கலையில் மாணவர் சேர்க்கை தொடர்பான நடைமுறைகள் ஜூலை மாதத்துடன் முடிக்க வேண்டும் என்றும், புதிய கல்வி ஆண்டு ஆகஸ்ட் 1ம் தேதி தொடங்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எப்போது விண்ணப்பிக்கலாம்
க்யூட் தேர்வுக்கு பிப்ரவரி முதல்வாரத்தில் இருந்து விண்ணப்பிக்கலாம் என்று யுஜிசி தலைவர் ஜெகதீஷ்குமார் அறிவித்து உள்ளார். இந்த தேர்வுகளை நடத்த நாடு முழுவதும் 1000 தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. ஒவ்வொரு நாளும் 500 மையங்களை பயன்படுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. க்யூட் பிஜி தேர்வு தொடர்பான அறிவிப்பு அடுத்த வாரம் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக மாணவர்களுக்கு விலக்கு கிடைக்குமா?
திமுக எதிர்கட்சியாக இருந்த போது நீட் தேர்வுக்கு விலக்கு கோரி பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தது. நீட் தேர்வினை ரத்து செய்வதற்கான ரகசியம் தங்களிடம்தான் இருக்கிறது என்று கூறி வாக்கு சேகரித்தார் உதயநிதி ஸ்டாலின். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இரண்டு ஆண்டுகள் மாணவர்கள் நீட் தேர்வுகள் எழுதியே மருத்துவ படிப்புகளில் சேர்ந்தனர். தமிழகத்தில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நூற்றுக்கணக்கான அரசுப்பள்ளியில் பயின்ற ஏழை மாணவர்கள் மருத்துவர்களாக சேர்ந்துள்ளனர். இந்த ஆண்டு தமிழகத்தில் மாணவர்களுக்கு நீட் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒருவேளை நீட் தேர்வு எழுத வேண்டும் என்கிற பட்சத்தில் முன்கூட்டியே பயிற்சிகளை தொடங்க வேண்டும் என்ற கோரிக்கையும் மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications