ஆத்ம நிர்பர் பாரத் திட்டத்தின் கீழ்.. மத்திய அரசின் "பிஎப்" உதவி திட்டம் 2022 மார்ச் வரை நீட்டிப்பு
டெல்லி: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியான PF தொகையை மத்திய அரசு செலுத்தும் திட்டம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நீட்டிப்பு செய்யப்படுவதாக, மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
கொரோனா நோய் தாக்கம் மற்றும் ஊரடங்கு உத்தரவுகளால் பல்வேறு துறைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கு ஊக்கம் கொடுக்கும் வகையில் பொருளாதார தூண்டுதல் நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.
இது தொடர்பாக இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார் மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

தன்னிறைவு பாரதம் திட்டம்
அப்போது அவர் கூறுகையில், ஆத்மனிர்பர் பாரத் ரோஸ்கர் யோஜனா, திட்டத்தின்கீழ், தொழில் துவங்க முதலாளிகளை ஊக்குவிப்பதற்கும், ஈபிஎஃப்ஒ மூலம் வேலை இழப்பை சமாளிக்கவும் ஆத்மனிர்பார் பாரத் ரோஸ்கர் யோஜனா திட்டம் அமல்படுத்தப்படுகிறது.

காலக்கெடு நீட்டிப்பு
கொரோனா ஊரடங்குகளால் தொழில்கள் முடங்கியுள்ளதால், இந்த திட்டத்தை தற்போதைய காலக்கெடுவான 2021 ஜூன் 30 ம் தேதிக்கு பதில், 2022ம் ஆண்டு மார்ச் 22 வரை நீட்டிக்கிறோம்.

பிஎப் பணத்தை அரசே செலுத்தும்
இத்திட்டத்தின் கீழ், புதிய ஊழியர்களுக்கு ரூ. 1,000 க்கும் குறைவான ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்களில் இரண்டு ஆண்டுகளுக்கு முழு ஈபிஎஃப் பங்களிப்புகளை அதாவது, தொழிலாளர் (12%)மற்றும் தொழில் நிறுவனம்(12%) செலுத்த வேண்டிய 24% தொகையை அரசே செலுத்தும். மாதம், 15,000 ரூபாய்க்கு குறைவாக ஊதியம் பெறுவோருக்கு இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதேநேரம் 1,000க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்களுக்கு, ஈபிஎஃப் பங்களிப்பில் பாதியை அரசு செலுத்தும். இத்திட்டத்தின் கீழ் இதுவரை ரூ .902 கோடி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

பிராட்பேண்ட்
மேலும் அவர் கூறுகையில், டிஜிட்டல் இந்தியா திட்டத்தின்கீழ், 2020மாவது ஆண்டு சுதந்திர தினத்திலிருந்து, 1000 நாட்களில் அனைத்து கிராம பஞ்சாயத்துகளுக்கும் பிராட்பேண்ட் இணைப்பு கிடைக்கும் என்று பிரதமர் குறிப்பிட்டிருந்தார். 1,56,223 கிராம பஞ்சாயத்துகள் இப்போது சேவைக்கு தயாராக உள்ளன.

கிராமங்களில் பிராட்பேண்ட்
மற்ற கிராமங்களுக்கும் பிராட்பேண்ட் கொண்டு செல்ல, 1,000 நாட்கள் இலக்கை அடைய கூடுதலாக ரூ.19,041 கோடி வழங்கப்படுகிறது. இந்த தொகையை வைத்து விரைவாக பிராட்பேண்ட் திட்டம் அமலாக்கப்பட முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications