பிசிசிஐ-யில் கங்குலிக்கு “எக்சிட்”.. தலைவராக தேர்வானார் ரோஜர் பின்னி! செயலாளராக தொடரும் ஜெய்ஷா
டெல்லி: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ தலைவராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ரோஜர் பின்னி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்திய முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி 2வது முறையாக தலைவராவதற்கான வாய்ப்பு இருந்தும் அவர் நியமிக்கப்படவில்லை.
இந்திய கிரிக்கெட் அணியை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பிசிசிஐ தலைவராக கடந்த நவம்பர் மாதம் சவுரவ் கங்குலி பதவியேற்றார். செயலாளராக உள்துறை அமைச்சர் அமித்ஷா மகன் ஜெய்ஷா பதவியேற்றனர். இவர்களின் பதவிக்காலம் நிறைவடைந்தது.
2 வது முறையாக இவர்கள் பதவி வகிக்க வாய்ப்பு இருக்கும் நிலையில் ஜெய்ஷா செயலாளர் பதவியில் தொடர்வார் என்றும், கங்குலி தலைவராக தொடர மாட்டார் என்றும் கடந்த சில நாட்களுக்கு முன்பே தகவல் வெளியானது.

பேச்சுவார்த்தை
சவுரவ் கங்குலிக்கு ஐபிஎல் தலைவர் பதவியை வழங்க பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும் ஆனால் அதற்கு அவர் சம்மதிக்கவில்லை என்றும் கூறப்பட்டது. இது தொடர்பாக மும்பையிலும் கடந்த வாரம் டெல்லியிலும் அவர் ஆலோசித்து இருக்கிறார். எந்த பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு எட்டப்படவில்லையாம்.

மம்தா பானர்ஜி
இதற்கிடையே பிரதமர் நரேந்திர மோடியிடம் மேற்கு வங்க முதலமைச்சரும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் பதவி சவுரவ் கங்குலியிடம் இருந்து பறிக்கப்படுவதாக பிரதமர் மோடியிடம் கூறினார். ஐசிசி தலைவர் தேர்தலில் சவுரவ் கங்குலி போட்டியிடுவதற்கு அனுமதிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

பிசிசிஐ கூட்டம்
இந்த நிலையில் இன்று பிசிசிஐயின் வருடாந்திர கூட்டம் மும்பையில் நடைபெற்றது. இதில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் சவுரவ் கங்குலி வகித்த பிசிசிஐ தலைவர் பதவிக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ரோஜர் பின்னி தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

செயலாளர் ஜெய்ஷா
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா இம்முறையும் செயலாளராக தொடர்கிறார். பிசிசிஐ துணைத் தலைவராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராஜீவ் சுக்லாவே மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பிரிஜேஷ் பட்டேல் வகித்து வந்த ஐபிஎல் தலைவர் பதவிக்கு மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூரின் சகோதரரும் பிசிசிஐ பொருளாளருமான அருண் சிங் தூமல் தேர்வாகியுள்ளார்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications