இனி ஜந்தர் மந்தரில் போராட்டம் இல்லை.. சவ்ரவ் தாஸ் – அசுதோஷ் ரங்கா வாக்குறுதி! ஜாமீன் பின்னணி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லி ஜந்தர் மந்தரில் தடையை மீறி போராட்டம் நடத்திய புகாரில் கைதான கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் சவ்ரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரங்கா ஆகியோருக்கு நேற்று இரவு ஜாமீன் கிடைத்தது. இதையடுத்து அவர்கள் விடுவிக்கப்பட்ட நிலையில் ஜாமீன் கிடைத்தது எப்படி? என்பது பற்றிய முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ராஜினாமா செய்யக்கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி கட்சியின் சவ்ரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா ஆகியோர் போராட்டம் நடத்தினர். கடந்த 13ம் தேதி இந்த போராட்டம் நடந்தது.

cockroach jantar mantar delhi protest

ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டதை மீறி அவர்கள் அங்கு நுழைந்தனர். ஜந்தர் மந்தரில் பூடப்பட்ட நுழைவுவாயிலின் கேட்டில் ஏறி தேசியக்கொடியை அசைத்தனர். இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர்.

பிறகு கடந்த 14ம் தேதி முதல் நீதிமன்ற காவலில் நேற்று வரை 7 நாட்கள் திகார் சிறையில் இருந்தனர். நேற்று நள்ளிரவில் இருவருக்கும் ஜாமீன் கிடைத்தது. நேற்றுடன் இருவருக்கும் நீதிமன்ற காவல் முடிவடைந்தது. இதையடுத்து இருவரும் டெல்லி சிறப்பு நிர்வாக மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்ப்படுத்தப்பட்டனர். அப்போது போலீசார் இருவருக்கும் நீதிமன்ற காவலை நீட்டிக்க கோரிக்கை வைத்தனர். ஆனால் மாஜிஸ்திரேட் அதனை ஏற்கவில்லை. சவ்ரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரங்காவிற்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

இந்த ஜாமீன் என்பது சில முக்கிய கட்டுப்பாடுகளுடன் வழங்கப்பட்டது. சவ்ரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா ஆகியோர் இனி டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கமாட்டோம். டெல்லி ஜந்தர் மந்தர் போராட்டத்துக்கான இடமாக இல்லாததால் அங்கு போராட்டம் நடத்தமாட்டோம் என்று உறுதிமொழி அளித்தனர்.
அதேபோல் இனி நடத்தப்படும் எந்தவொரு போராட்டமும் இந்திய அரசியலமைப்பிற்கு உட்பட்டே நடத்தப்படும் என்பதை மீண்டும் உறுதிப்படுத்துகிறோம் எனவும் தெரிவித்தனர்.

அப்போது சவ்ரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா ஆகியோர், ஒரே குரலில், ''நான் அமைதிக்கு பங்கம் விளைவிக்க மாட்டேன் என்று உறுதியளிக்கிறேன். நீதித்துறை மற்றும் அதன் அனைத்து அமைப்புகள் மீதும், இந்த சிறப்பு நிர்வாக நடுவர் நீதிமன்றம் மீதும் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. அமைதி, சட்டம்-ஒழுங்கு மற்றும் பொது அமைதியைப் பேணுவதற்கான உறுதிபாட்டை வலியுறுத்துவோம்'' என கூறினர்.

அதுமட்டுமின்றி இருவரும் தலா ரூ.50 ஆயிரம் தனிநபர் பிணை, ஜாமீன் பத்திரங்களையும் சமர்ப்பித்த நிலையில் ஜாமீன் வழங்கப்பட்டது. அதே சமயம் அவர்கள் மீதான வழக்கு முடித்து வைக்கப்படவில்லை. இந்த வழக்கு மீதான விசாரணை தொடரும் என்றும், அடுத்த விசாரணை நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+