நடப்பது பாஜக ஆட்சி.. ஒரு இன்ச் நிலத்தை கூட யாரும் ஆக்கிரமிக்க முடியாது: சீனாவுக்கு அமித்ஷா எச்சரிக்கை
டெல்லி: இந்தியாவில் பாஜக ஆட்சியில் இருக்கும் வரை நாட்டின் ஒரு அங்குலம் நிலத்தை கூட யாராலும் ஆக்கிரமிக்க முடியாது என சீனாவுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அருணாச்சல பிரதேச மாநிலம் தவாங் செக்டாரில் டிசம்பர் 9-ந் தேதியன்று சீன ராணுவத்தின் 300க்கும் மேற்பட்டோர் கும்பல் கும்பலாக ஊடுருவி ஆக்கிரமிக்க முயன்றனர். எல்லையில் பாதுகாப்புப் பணியில் இருந்த நமது ராணுவ வீரர்கள் தீரமுடன் போராடி சீன ராணுவத்தினரை விரட்டியடித்தனர்.

நாடாளுமன்றத்தில் அமளி
இந்த விவகாரம் இன்று நாடாளுமன்றத்தில் கடுமையாக எதிரொலித்தது. சீனாவின் இந்த ஆக்கிரமிப்பு முயற்சி தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தின் லோக்சபா, ராஜ்யசபாவில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் வலியுறுத்தினர். இதனால் இரு சபைகளின் நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து லோக்சபாவில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், சீனாவின் ஆக்கிரமிப்பு முயற்சி தொடர்பாக விளக்கம் அளித்தார்.

ராஜ்நாத்சிங் விளக்கம்
மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் தமது விளக்க அறிக்கையில், அருணாச்சல பிரதேச மாநிலம் தவாங் செக்டாரில் டிசம்பர் 9-ந் தேதி சீன ராணுவத்தினர் ஊடுருவி ஆக்கிரமிப்பு முயற்சிகளை மேற்கொண்டனர். நமது ராணுவத்தினர் சீன ராணுவத்தின் இம்முயற்சிகளை எதிர்கொண்டு முறியடித்து அவர்களது நிலைகளுக்கே திரும்பச் செய்தனர். இச்சம்பவம் தொடர்பாக ராஜதந்திர வழிகளில் சீனாவின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. நமது நாட்டின் எல்லைகளைப் பாதுகாப்பதற்கும் அதை மாற்றி அமைக்கும் முயற்சிகளை முறியடிப்பதற்கும் நமது ராணுவ வீரர்கள் உறுதியாக உள்ளனர். இச் சம்பவத்தைத் தொடர்ந்து டிசம்பர் 11-ந் தேதி இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் இடையேயான பேச்சுவார்த்தை நடைபெற்றது. எல்லை ஊடுருவல் முயற்சிகளை சீன ராணுவம் மறுத்ததுடன் எல்லையில் அமைதி நிலைநாட்டப்படும் எனவும் தெரிவித்தது. இருதரப்பிலும் ராணுவ வீரர்களுக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டன. இந்த நிகழ்வில் நமது ராணுவ வீரர்கள் கொல்லப்படவோ, படுகாயமடையவோ இல்லை என்பதை சபைக்கு தெரிவித்துக் கொள்கிறேன். நமது ராணுவம் உரிய நேரத்தில் நடவடிக்கையில் இறங்கியதால் சீன ராணுவத்தினர் தங்களது நிலைகளுக்கு திரும்பிச் சென்றனர் என விளக்கம் அளித்தார்.

எதிர்க்கட்சிகள் மீது அமித்ஷா பாய்ச்சல்
இதனிடையே நாடாளுமன்ற வளாகத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாடாளுமன்றம் லோக்சபாவில் எதிர்க்கட்சிகள் கேள்வி நேரம் நடைபெறுவதை அனுமதிக்கவில்லை. எதிர்க்கட்சிகளின் இந்த நடவடிக்கைக்கு என் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். தவாங் செக்டாரில் சீன ராணுவத்தினருடனான மோதல் தொடர்பாக நாடாளுமன்றத்தில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் அறிக்கை தாக்கல் செய்வார் என நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் அறிவித்திருக்கிறார். ஆனாலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டுள்ளனர்.

ராஜீவ் காந்தி அறக்கட்டளை விவகாரம்
லோக்சபாவில் ராஜீவ் காந்தி அறக்கட்டளையின் (சோனியா, ராகுல் காந்திக்கு சொந்தமானது) வெளிநாட்டு நிதி உதவி சட்ட மீறல்கள் தொடர்பான கேள்வியைத் தடுக்கவே இந்தியா - சீனா மோதல் விவகாரத்தை எதிர்க்கட்சிகள் எழுப்பி இருக்கின்றன. லோக்சபாவில் கேள்விகள் பட்டியலில் 5-வதாக ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கான வெளிநாட்டு நிதி உதவி குறித்த கேள்வி இடம் பெற்றுள்ளது. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கேள்வி நேரத்தை அனுமதித்திருந்தால், ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கான வெளிநாட்டு நிதி உதவி தொடர்பாக பதில் அளித்திருப்பேன். ராஜீவ் காந்தி அறக்கட்டளையானது 2005-2007ம் ஆண்டு காலத்தில் சீன தூதரகத்திடம் இருந்து ரூ1.35 கோடி நிதி உதவி பெற்றது. இது வெளிநாட்டு நிதி உதவிகள் சட்டத்தை மீறியதாக இருந்ததால் அந்த அறக்கட்டளையின் உரிமம் ரத்து செய்யப்பட்டது.

பாஜக ஆட்சி.. ஒரு அங்குலம் கூட பறிபோகாது
நமது நாட்டில் தற்போது பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. பாஜக ஆட்சி இருக்கும் வரையில் நமது நாட்டின் ஒரு அங்குலம் நிலத்தை கூட எவராலும் ஆக்கிரமிக்க முடியாது. டிசம்பர் 8-9-ந் தேதிகளில் அருணாச்சல பிரதேசத்தில் சீனாவின் அத்துமீறலுக்கு தக்க பதிலடி கொடுத்த நமது ராணுவ வீரர்களின் மகத்தான நடவடிக்கைக்கு என் வணக்கங்களை செலுத்துகிறேன். இவ்வாறு அமித்ஷா கூறினார்.
-
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்?












Click it and Unblock the Notifications