டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

முஸ்லிம்களுக்கு 5% இடஒதுக்கீடா? இல்லவே இல்லை.. அடியோடு மறுக்கும் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே

Google Oneindia Tamil News

மும்பை: முஸ்லிம்களுக்கு கல்வி வேலைவாய்ப்பில் 5% இடஒதுக்கீடு அளிக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா சட்ட மேலவையில் அண்மையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மாநில அமைச்சர் நவாப் மாலிக், முஸ்லிம்களுக்கு 5% இடஒதுக்கீடு அளிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. நடப்பு கூட்டத் தொடரில் இதற்கான மசோதா தாக்கல் செய்யப்படும் என்று கூறியிருந்தார்.

No Proposal on Muslim Reservation, Says Uddhav Thackeray

இந்நிலையில் மகாராஷ்டிரா சட்டசபை வளாகத்தில் உத்தவ் தாக்கரே செய்தியாளர்களிடம் கூறியதாவது: முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் எந்த ஒரு பரிந்துரையும் மேற்கொள்ளப்படவில்லை. இதன் சட்டப் பூர்வ அங்கீகாரம் குறித்து ஆலோசனை நடத்த இருக்கிறோம். ஆனால் எந்த ஒரு முடிவையும் எடுக்கவில்லை.

இந்த பிரச்சனையில் பாஜகவினர் தேவையற்ற கூப்பாடுகளை போட்டு வருகின்றனர். இதில் சிவசேனாவின் நிலைப்பாட்டை இன்னமும் நாங்கள் அறிவிக்கவும் இல்லை. சாம்னாவின் எடிட்டராக இருந்த நான் முதல்வராகி இருக்கிறேன். அதனால்தான் ராஷ்மி ,சாம்னாவின் எடிட்டராக பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிறார். அதேநேரத்தில் அதில் இடம்பெறும் கருத்துகளை சஞ்சய் ராவத் முடிவு செய்வார்.

234 எம்.எல்.ஏ-க்களையும் கடத்த போகிறோம்.. வண்ணாரப்பேட்டை போலீசுக்கு வந்த மிரட்டல் கடிதம்234 எம்.எல்.ஏ-க்களையும் கடத்த போகிறோம்.. வண்ணாரப்பேட்டை போலீசுக்கு வந்த மிரட்டல் கடிதம்

அயோத்திக்கு வரும் 7-ந் தேதி செல்கிறேன். அங்கு சென்று ராமரை வழிபட இருக்கிறேன். இதில் எங்கே அரசியல் இருக்கிறது என தெரியவில்லை? எனக்கு நம்பிக்கை இருகிறது . அதனால் வழிபாடு நடத்த செல்கிறேன். காங்கிரஸ் அல்லது பிற கட்சிகளுடன் கூட்டணி அமைத்துவிட்டதால் கடவுளின் கதவுகள் மூடிவிடாது. என்னுடன் வர விரும்புகிறவர்கள் அயோத்திக்கு வரலாம். ஆதார் எண் இணைக்கப்பட்ட விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு வருகின்றன.

இவ்வாறு உத்தவ் தாக்கரே கூறினார்.

English summary
Maharashtra Chief Minister Uddhav Thackeray said that there is no proposal on Muslim reservation before his government.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X