4வது திருமணம் பண்ணிக்கோங்க.. பெண்ணை அல்ல கிளியை.. இம்ரான் கானுக்கு பறந்து போன அட்வைஸ்!
டெல்லி: ‛‛இம்ரான் கான் பிரதமர் பதவியை இழக்கும் நிலையில் அவர் தனது 3வது மனைவி புஷ்ராவை விவாகரத்து செய்துவிட்டு அதிர்ஷ்டத்தை கூறும் பெண்கிளியை அவர் 4வது திருமணம் செய்து கொள்ளலாம்'' என வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் விமர்சனம் செய்துள்ளார்.
பாகிஸ்தான் பிரதமராக இம்ரான்கான் செயல்பட்டு வந்தார். இவருக்கு வழங்கிய ஆதரவை கூட்டணி கட்சிகள், எம்பிக்கள் திரும்ப பெற்றனர்.
இதனால் இம்ரான் கானுக்கான ஆதரவு குறைந்தது. இதையடுத்து அவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு துணை சபாநாயகரால் ரத்து செய்யப்பட்டதோடு பாராளுமன்றத்தை பாகிஸ்தான் அதிபர் ஆரிப் ஆல்வி கலைத்தார்.

உச்சநீதிமன்றம் கண்டிப்பு
இதை எதிர்த்து எதிர்க்கட்சிகள் அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம் பாராளுமன்ற கலைப்புக்கான உத்தரவை ரத்து செய்தது. அதோடு நம்பிக்கையில்லா தீர்மானத்தை ரத்து செய்தது அரசியலமைப்புக்கு எதிரானது என கண்டித்தது. இதையடுத்து இன்று பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இம்ரான்கான் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் ஓட்டெடுப்பு நடைபெற உள்ளது.

வங்கதேச எழுத்தாளர் விமர்சனம்
இந்நிலையில் தான் இம்ரான் கானை பிரபல வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் கடுமையாக விமர்சித்துள்ளார். குறிப்பிட்ட மதம் சார்ந்த விஷயங்களை தனது எழுத்துக்கள் மூலம் கண்டித்ததால் அடிக்கடி சர்ச்சையில் சிக்கும் இவர் பெண்ணியம் தொடர்பாக எழுதி பிரபலமானவர். இந்நிலையில் தான் வங்கதேசத்தில் அவரது எழுத்துக்கள், கருத்துகளுக்கு எதிர்ப்பு கிளம்பியதால் அங்கிருந்து வெளியேறி வெளிநாடுகளில் வசித்த தஸ்லிமா நஸ்ரின் தற்போது டெல்லியில் வசிக்கிறார்.

அதிர்ஷ்ட பெண் கிளியுடன் திருமணம்
இந்நிலையில் தான் அவர் இம்ரான் கானை விமர்சனம் செய்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில், ‛‛புஷ்ரா(இம்ரான்கான் மனைவி) தனது சிறந்த ஆன்மிக அறிவை வைத்து தன்னை பிரதமர் நாற்காலிக்கு அழைத்து சென்றதால் தான் இம்ரான் கான் அவரை திருமணம் செய்து கொண்டார். இருப்பினும் இம்ரான்கான் தனது ஆட்சியை முழுவதுமாக முடிக்க முடியுமா என்பதை அவர் கணித்தாரா?. நிச்சயமாக இல்லை. இம்ரான் கான் பிரதமர் இருக்கையில் இருந்து வெளியேறும் நிலையில் மூன்றாவது மனைவியும், ஆன்மிக வழிக்காட்டியுமான புஷ்ராவை விவாகரத்து செய்ய முடியும். அதோடு ‛ஒருபோதும் இறக்கமாட்டாய்' என இம்ரான்கான் குறித்து அதிர்ஷ்டம் கூறும் பெண்கிளியை அவர் திருமணம் செய்து கொள்ளலாம்'' என விமர்சனம் செய்துள்ளார்.

விமர்சனத்துக்கு காரணம் என்ன
இம்ரான்கான் கடந்த 2018 தேர்தலின்போது வெற்றி பெற்று பிரதமர் ஆனார். அப்போது அவர் புஷ்ராவை 3வதாக திருமணம் செய்து கொண்டார். 2015 முதல் அவரை ஆன்மிக குருவாக இம்ரான்கான் சந்தித்து வந்த நிலையில் அவரது கணிப்புகள் பல உண்மையானதாகவும், அவரது வழிக்காட்டலால் தான் தனக்கு பிரதமர் பதவியை கிடைத்ததாகவும் இம்ரான் கான் நம்பினார். இதனால் தான் இம்ரான் கான், புஷ்ராவை திருமணம் செய்ததாக பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகின. முன்னதாக ஏற்கனவே இம்ரான் கானுக்கு 2 திருமணங்கள் நடந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

இம்ரான்கானை பிரிந்த மனைவி
இதற்கிடையே இம்ரான் கான் பதவியை இழக்கும் நிலையில் அவரை ஏற்கனவே புஷ்ரா பிரிந்து இருப்பதாக கூறப்படுகிறது. இம்ரான்கான் உடனான திருமணத்துக்கு முன்பே புஷ்ராவுக்கு முன்னாள் கணவர் மூலம் 5 குழந்தைகள் உள்ள நிலையில் அவர்கள் வீட்டுக்கு வரக்கூடாது என இம்ரான்கான் கூறியிருந்தார். ஆனால் புஷ்ராவின் மகன் அடிக்கடி வீட்டுக்கு வந்த தகராறில் புஷ்ரா, இம்ரான்கானை பிரிந்து தோழி வீட்டில் இருப்பதாக செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications