நுபுர் சர்மா.. அடுத்த டெல்லி முதல்வர் வேட்பாளர்.. அந்த கட்சி ஹிஸ்டரி அப்படி - போட்டுத்தாக்கிய ஓவைசி!
டெல்லி : நுபுர் சர்மா டெல்லி முதல்வர் வேட்பாளராக கூட நிறுத்தப்படுவார், முஸ்லிம்களை துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு பாஜகவில் பெரிய பதவிகள் கிடைக்கும் என அசாதுதீன் ஓவைசி விமர்சித்துள்ளார்.
நுபுர் சர்மாவை பாஜக பாதுகாத்து வருவதாகவும், வரும் 6-7 மாதங்களில் நுபுர் சர்மா பெரிய தலைவராக வருவார் என்று எனக்குத் தெரியும் என ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவரும், ஹைதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார்.
நுபுர் சர்மாவை கைது செய்து, அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும், பிரதமர் ஒரு வார்த்தை கூட பேசாமல் அமைதி காக்கிறார் என ஓவைசி தெரிவித்துள்ளார்.

நுபுர் சர்மா
பாஜகவின் தேசிய செய்தி தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா, ஒரு தனியார் தொலைக்காட்சி விவாதத்தில் ஞானவாபி விவகாரம் குறித்துப் பேசுகையில், நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தும் வகையில் பேசியதால் பெரும் சர்ச்சை எழுந்தது. அதேபோல, மற்றொரு பாஜக நிர்வாகியான நவீன் ஜிண்டால் என்பவர் சமூகவலைதளத்தில் நபிகள் நாயகத்தை இழிவுபடுத்திப் பதிவு செய்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் போராட்டங்களில் இறங்கினர்.

வெளி நாடுகளிலும் எதிர்ப்பு
இந்தியா மட்டுமல்லாது அரபு நாடுகளிலும் மிகப்பெரிய எதிர்ப்பு எழுந்தது. இஸ்லாமிய நாடுகளில் இந்தியப் பொருட்களைப் புறக்கணிப்போம் என்ற முழக்கத்தை முன்னெடுக்கும் அளவுக்கு இந்த பிரச்சனை வெடித்தது. இதனையடுத்து நுபுர் சர்மா பாஜகவிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் கடந்த நான்கு நாட்களாக நுபுர் சர்மாவை கண்டறிய முடியவில்லை என மும்பை போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன.

வழக்குப்பதிவு
ரசா அகாடமியின் மும்பை பிரிவின் இணை செயலாளர் இர்பான் ஷேக் அளித்த புகாரின் பேரில் மே 29 அன்று நுபுர் சர்மா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. நுபுர் சர்மா மீது மத உணர்வுகளைப் புண்படுத்துதல், பகைமையை ஊக்குவித்தல் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த நான்கு நாட்களாக அவரை காணவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.

தலைமறைவு
நுபுர் சர்மா, மகாராஷ்டிராவில் இருந்து டெல்லிக்கு தப்பிச் சென்றிருக்கக் கூடும் எனவும் போலீசார் சந்தேகிக்கின்றனர். இதனால் டெல்லியில் கடந்த சில நாட்களாக முகாமிட்டுள்ள மகாராஷ்டிரா போலீசார், நுபுர் சர்மாவை தீவிரமாக தேடுகின்றனர். அதேநேரம், அவர் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் டெல்லி போலீசாரின் பாதுகாப்பில் ரகசிய இடத்தில் பத்திரமாக இருப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.

முதல்வர் வேட்பாளர் ஆவார்
இந்நிலையில் ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவரும், ஹைதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஓவைசி நுபுர் சர்மா விவகாரம் குறித்து பேசியுள்ளார். அப்போது அவர், "நுபுர் ஷர்மாவை பாஜக பாதுகாக்கிறது. வரும் 6-7 மாதங்களில் நுபுர் சர்மா பெரிய தலைவராக வருவார் என்று எனக்குத் தெரியும். டெல்லி முதலமைச்சர் வேட்பாளராக நுபுர் சர்மா நிறுத்தப்படக்கூட வாய்ப்புள்ளது. ஏனெனில், முஸ்லிம்களை துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு பா.ஜ.கவில் பெரிய பதவிகள் கிடைக்கும்.

பிரதமர் ஒரு வார்த்தை கூட பேசவில்லை
நுபுர் சர்மாவை கைது செய்து அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். ஏஐஎம்ஐஎம் சார்பாக இது குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளது மற்றும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நாங்கள் பிரதமரிடம் இதுதொடர்பாக கோரிக்கை வைத்தோம். ஆனால் அவர் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

கைது செய்யமாட்டீர்கள்
பிரதமர் மோடி, யோகி ஆதித்யநாத் ஆகியோருக்கு எதிராக யாராவது ஏதாவது சொன்னால், அவர்கள் கைது செய்யப்படுவார்கள். ஆனால் யாராவது நபிகள் நாயகத்துக்கு எதிராக ஏதாவது சொன்னால், நீங்கள் அவரைக் கைது செய்ய மாட்டீர்கள் " என ஓவைசி காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications