Omicron: "இதுதான் உங்களை காக்க போகிறது.. ரொம்ப முக்கியம் பிகிலே" - WHO சவுமியா சாமிநாதன் அறிவுரை
டெல்லளி: ஓமிக்ரானிடம் இருந்து பாதுகாத்துக்கொள்வது எப்படி என்று உலக சுகாதார மையத்தின் தலைமை அறிவியலாளர் சவுமியா சாமிநாதன் பேட்டி அளித்துள்ளார்.
உலகம் முழுக்க ஓமிக்ரான் கேஸ்கள் உயர்ந்து வருகிறது. இந்தியாவில் ஓமிக்ரான் உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு 1270 ஆக உயர்ந்து உள்ளது. டெல்லி, மகாராஷ்டிராவில் நிலைமை மோசமாகி உள்ளது.
இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 16,764 ஆக அதிகரித்து உள்ளது. நேற்று முதல்நாள் வரை இந்தியாவில் 10 ஆயிரத்திற்கும் கீழ்தான் கொரோனா கேஸ்கள் பதிவாகி வந்தது. இப்போது கேஸ்கள் உயர்ந்துள்ளது.

சவுமியா சாமிநாதன்
இந்த நிலையில் ஓமிக்ரான் தடுப்பு நடவடிக்கை குறித்து உலக சுகாதார மையத்தின் தலைமை அறிவியலாளர் சவுமியா சாமிநாதன் அளித்த பேட்டியில், உலக நாடுகள் ஓமிக்ரான் பரவலுக்கு எதிராக கட்டுப்பாடுகள் விதிக்கும் போது அறிவியல் முறைப்படி விதிக்க வேண்டும். பொருளாதாரமும் நலிவடையாமல் பாதுகாக்க வேண்டும். நாம் கவனமாக இருக்க வேண்டும். அதே சமயம் பயப்பட கூடாது.

ஓமிக்ரான் கேஸ்கள்
இந்தியாவில் கண்டிப்பாக கேஸ்கள் உயரும் என்று தெரிகிறது. இதற்கான அறிகுறிகள் தெரிய தொடங்கி உள்ளன. இது வெறும் தொடக்கம்தான். பல நகரங்களில் இனிதான் கேஸ்கள் பதிவாகும். ஒவ்வொரு நாடுகளும் தங்களுக்கான தனிப்பட்ட டேட்டாவை உருவாக்க வேண்டும்.

ஓமிக்ரான் சவுமியா சாமிநாதன்
ஓமிக்ரான் வருகிறது என்றால் அவர் எத்தனை டோஸ் போட்டுள்ளார். கடைசி டோஸ் எப்போது போட்டார் என்று ஆராய வேண்டும். அதற்கு ஏற்றபடி பூஸ்டர் விதிகளை கொண்டு வர வேண்டும். கொரோனாவிற்கு எதிரான எதிர்ப்பு சக்தி குறித்து அறிந்து கொள்ள இது உதவியாக இருக்கும். பூஸ்டர் போடும் போது யாருக்கு போட வேண்டும் என்பதை ஆராய வேண்டும்.

பூஸ்டர் டோஸ்
நாம் முதலில் வயதானவர்களை, உடல் நோய் கொண்டவர்களை காக்க வேண்டும். அவர்களுக்கு பூஸ்டர் வழங்க வேண்டும். அதே சமயம் எல்லோருக்கும் பூஸ்டர் தேவையா என்பது தொடர்பான ஆய்வு முடிவுகளும் நம்மிடம் இல்லை. இதைப்பற்றி ஒவ்வொரு நாடுகளும் ஆய்வு செய்ய வேண்டும்.

மாறி மாறி டோஸ்
பூஸ்டர் டோஸ் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். இரண்டு டோஸ் வேக்சின் நிறுவனத்தை அதே டோஸை பூஸ்டராக போடலாம். அல்லது வேறு ஒரு நிறுவன டோஸை பூஸ்டராக மாற்றி போடலாம். எல்லாமே பலன் அளிக்கும். ஆனால் உங்கள் நாட்டிற்கு எது சரிப்பட்டு வரும். எது எளிதாக தயாரிக்க விநியோகிக்க முடியும் என்பதை நீங்கள்தான் ஆய்வு மூலம் கண்டறிய வேண்டும்.

கட்டுப்பாடுகள்
இதுவரை ஆய்வில் வேறு வேறு வேக்சின்களை பூஸ்டராக பயன்படுத்துவதே சிறந்தது என்று கண்டறியப்பட்டுள்ளது. பள்ளிகளில் கட்டுப்பாடுகள் கொண்டு வருவது பற்றி யோசிக்கலாம். ஆனால் தியேட்டர், மால் போன்ற இடங்களில்தான் அதிகம் கொரோனா பரவுகிறது. இங்குதான் கட்டுப்பாடுகளை கொண்டு வர வேண்டும். மற்றபடி இரவு நேர லாக்டவுன் எல்லாம் பயன் அளிக்காது.
Recommended Video

மாஸ்க்
இதற்கு பின் எந்த விதமான அறிவியலும் இல்லை. அறிவியல் முறைப்படிதான் லாக்டவுன் போட வேண்டும். மாஸ்க் மட்டுமே நம்மை காக்க போகிறது. அதுதான் முக்கியம்.90 சதவிகித மக்கள் தொகை மாஸ்க் போட்டாலே போதும். அது கொரோனா பரவலை தடுத்துவிடும். இது மருத்துவமனையில் மக்கள் சேருவதை குறைக்கும். மக்களை காக்கும் ரட்சகன் மாஸ்க் மட்டுமே. அதை கவனமாக, முறையாக அணிய வேண்டும், என்று உலக சுகாதார மையத்தின் தலைமை அறிவியலாளர் சவுமியா சாமிநாதன் தெரிவித்துள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications