டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

குண்டை தூக்கி போட்ட "ஆய்வு".. அந்த 3 கேள்விகள்.. ஒமிக்ரான் அவ்வளவு மோசமா? ஒரே வாரத்தில் எகிறிய வைரஸ்

டெல்டா வைரஸைவிட வேகமாக பரவுகிறதாம் ஒமிக்ரான்

Google Oneindia Tamil News

டெல்லி: ஒமிக்ரான் வைரஸ் தாக்கமானது ஒரே வாரத்தில், 3 சதவீதத்திலிருந்து 73 சதவீதமாக கூடிப் போயுள்ளதாகவும், இதன் வீரியம் இனி அடுத்தடுத்த நாட்களில் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.

கொரோனா வைரஸின் உருமாற்றமடைந்த வகையான ஒமிக்ரான் வைரஸ் உலகம் முழுவதும் பரவி கொண்டிருக்கின்றன..

கொரோனாவில் இருந்து ஒருவழியாக மீண்டு வந்து கொண்டிருக்கும் நிலையில், ஒமிக்ரானின் பிடியில் சிக்கி கொண்டுள்ளது

விழித்து கொள்ளுங்கள்.. எகிறபோகும் ஒமிக்ரான்.. விழித்து கொள்ளுங்கள்.. எகிறபோகும் ஒமிக்ரான்..

 எண்ணிக்கை

எண்ணிக்கை

இப்போதைக்கு 90- க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள ஒமிக்ரான் வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை டபுள் மடங்காக பெருகி கொண்டு வருகிறது. நம் நாட்டை பொறுத்தவரை மும்பையில் கண்டுபிடிக்கப்பட்ட ஒமிக்ரோன், 7-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் பாதிப்பை தந்து வருகிறது.. இதனால், பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள் கையில் எடுக்கப்பட்டு வருகின்றன.... அதேசமயம், இந்த ஒமிக்ரான் பன்மடங்கு வீரியம் கொண்டது, வேகமாக பரவக்கூடியது என்ற ஆய்வுகள் வெளிவந்து கொண்டேயிருக்கின்றன.

பேட்டி

பேட்டி

அந்த வகையில் ஒமிக்ரான் வைரஸ் பற்றி உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் மற்றொரு தகவலை கூறியுள்ளார்.. செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "கொரோனாவின் மாறுபாடான இந்த ஒமிக்ரான், டெல்டா வைரஸை விட படுவேகமாக பரவி கொண்டிருக்கிறது.. இது ஏற்கனவே தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களையும் சேர்த்து பாதிப்பை ஏற்படுத்துகிறது... அதேபோல, ஏற்கனவே நோய்த்தொற்று ஏற்பட்டு அதிலிருந்து மீண்டவர்களையும் இந்த ஒமிக்ரான் தாக்கி வருகிறது.. டெல்டா வைரஸை விட ஒமிக்ரான் வேகமாக பரவுவதற்கான ஆதாரங்கள் இப்போது கிடைத்துள்ளன" என்றார் டெட்ரோஸ்.

டெல்டா

டெல்டா

அதேபோல, உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தின் டைரக்டர் பூனம் கேத்ரபால் சிங்கும் ஒமிக்ரான் பற்றி கூறியுள்ளார்.. "இந்த ஒமிக்ரான் வைரஸ் குறித்து இதுவரை முழுமையான தகவல்கள் எதுவும் தெரியவில்லை.. அதுசம்பந்தமாக ஆராய்ச்சிகள் இன்னமும் நடந்து கொண்டிருக்கறது.. ஆனால், ஒமிக்ரான் எவ்வளவு வேகமாக பரவக்கூடியது? ஏற்கனவே உள்ள தடுப்பூசிகளை கொண்டு, அந்த வைரஸை தடுக்க முடியுமா? மற்ற வகை வைரஸ்களை விட இது எவ்வளவு வீரியம் கொண்டது என்பது போன்ற 3 கேள்விகள் வருகின்றன.

Recommended Video

    வேகமெடுக்கும் ஒமிக்ரான் பரவல்… 27.57 கோடியை தாண்டிய பாசிட்டிவ் கேஸ்கள்!
     பாதுகாப்பு நடவடிக்கைகள்

    பாதுகாப்பு நடவடிக்கைகள்

    நமக்கு வந்துள்ள தகவல்படி, ஒமிக்ரான் வைரஸ், டெல்டா வகை வைரஸை விட ஸ்பீடாகெ பரவி வருகிறது. இதன் பாதிப்பு குறைவுதானே என்று நாம் அசால்ட்டாகவும், அஜாக்கிரதையாவும் இருந்துவிட கூடாது.. சோஷியல் டிஸ்டன்ஸ், மாஸ்க் அணிவது உள்ளிட்ட இப்போது நடைமுறையில் உள்ள விதிமுறைகளை அப்படியே தொடர வேண்டும்.. தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கே பாதிப்பு வரும் நிலையில், எல்லோருமே பாதுகாப்பு அம்சங்களை கடைப்பிடிக்க வேண்டும்" என்றார் பூனம் கேத்ரபால் சிங்.

    English summary
    Omicron is spreading faster than delta variant, says who
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X