இந்த படத்தில் என்ன தெரியுதுன்னு சொல்லுங்க.. உங்க குணாதிசயத்தை சொல்லுறோம்
டெல்லி: கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்க கண்களுக்கு முதலில் பாம்பு தெரிந்ததா? அல்லது கைகளில் தான் பாம்பு போல சித்தரிக்கப்பட்டுள்ளது என்பதை உணர்ந்தீர்களா? என்பதை வைத்து உங்கள் குணாதிசயங்களை தெரிந்துகொள்ளலாம்.
ஆப்டிகல் இல்யூஷன் எனப்படும் ஒளி மாயை படங்களுக்கு இணையத்தில் எப்போதும் தனித்த வரவேற்பு உள்ளது.
ஓய்வு நேரத்தில் நமது மூளைக்கு வேலை வைக்கும் ஆப்டிகல் இல்யூஷன் படங்களை போல குணாதிசயங்களை பற்றி சொல்லும் பெர்சானலிட்டி டெஸ்ட் இல்யூஷன் படங்களுக்கும் வரவேற்பு இருக்கத்தான் செய்கிறது.

குணாதிசயங்கள் எப்படி
ஓய்வு நேரத்தில் இணையத்தில் உலவும் போது நமது குணாதிசயங்கள் எப்படித்தான் இருக்கு என தெரிந்து கொள்ள அனைவருக்கும் ஒரு ஆர்வம் இருக்கும். இதனால் இத்தகைய இல்யூஷன் படங்களுக்கும் நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் பகிரப்படுகிறது. ஒரு ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் நாம் முதலில் பார்த்தவுடன் நமக்கு என்ன தோன்றுகிறது என்பதை வைத்து நம்முடைய குணாதிசயங்கள் கணிக்கப்படுகிறது.

உங்கள் கேரக்டர் எப்படிப்பட்டது
அதாவது, ஆளுமைத்திறன், பலம் மற்றும் பலவீனங்கள் என்ன என்பது குறித்தும் சொல்லபப்டுகிறது. உங்களுக்கு நல்ல தலைமைப்பண்பு உண்டா, சுயநலம் மிக்கவரா ? என்பது முதல் கொண்டு சொல்லப்படுகிறது. 100 சதவீதம் இது சரியாக அமைந்து விடாது என்றாலும் ஜாலியாக இப்படி ஒரு பரிசோதனையில் ஈடுபடுவதை பலரும் விரும்புகின்றனர். சரி.. நாம் இன்று பார்க்க இருக்கும் இல்யூஷன் படத்தை வைத்து உங்கள் கேரக்டர் எப்படிப்பட்டது என்பதை சொல்கிறோம் வாங்க...

முதலில் பாம்பு தெரிந்ததா?
இங்கே கொடுக்கப்பட்டுள்ள படத்தை உற்று பாருங்கள்... 5 செக்கண்டுகள் டைம்.. சரி பார்த்து முடிந்துவிட்டீர்கள் என்றால் தொடர்ந்து படியுங்கள். இந்த படத்தில் பாம்பு உருவமும் சற்று ஆழ்ந்து பார்த்தால் கைகளில் பாம்பு போன்ற வர்ணம் பூசப்பட்டு இருப்பதையும் யூகிக்க முடியும். உங்களுக்கு முதலில் பாம்பு தெரிந்ததா? அல்லது கைகளில் தான் பாம்பு போல சித்தரிக்கப்பட்டுள்ளது என்பதை உணர்ந்தீர்களா? என்பதை வைத்துதான் உங்கள் குணாதிசயங்களை சொல்ல போகிறோம்.

உங்கள் கண்னுக்கு முதலில் பாம்பு தெரிந்தால்..
நீங்கள் சற்று உணர்ச்சி வசப்படக்கூடியவராக இருக்கக் கூடும். உங்கள் முடிவுகளில் நீங்கள் அசராத நம்பிக்கை கொண்டவர்களாக இருப்பீர்கள். புத்திசாலியாகவும் பிறரை கவரும் நபராகவும் இருப்பீர்கள். உங்களின் நகைச்சுவை உணர்வை சுற்றியுள்ளவர்கள் வெகுவாக ரசிப்பார்கள். ரிஸ்க்குகளை எடுக்க தயங்காத நபராக நீங்கள் இருக்கலாம். உங்கள் செயல்களுக்கும் வார்த்தைகளுக்கும் பெரிதாக ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இருக்காது.

உங்கள் கண்ணுக்கு முதலில் கைகள் தெரிந்தால்...
நீங்கள் எந்த ஒரு முடிவையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என எடுக்க மாட்டீர்கள். எந்த ஒரு முடிவுக்கு வரும் முன்னால் அதைப்பற்றிய தீர ஆய்வு செய்த பிறகே ஒரு முடிவுக்கு வருவீர்கள். முன் கூட்டியே திட்டம் போடாமல் எந்த ஒரு முடிவையும் பெரும்பாலும் எடுக்க மாட்டீர்கள். உள்ளுணர்வு என்ன சொல்கிறது என்பதை விட அறிவுப்பூர்வமாக யோசித்து எடுக்கும் முடிவையே சார்ந்து இருப்பீர்கள். அதேவேளையில், அதிகம் கவலைப்படும் நபராகவும் நீங்கள் இருக்கக்கூடும்.

தீவிரமாக கருத வேண்டாம்
இந்த குணாதிசயங்கள் அப்படியே அனைவருக்கும் பொருந்தாது. நபருக்கு நபர் மாறக்கூடும். எனவே இல்யூஷன் படங்களை வைத்து ஓரளவு மட்டுமே சரியாக கணிக்க முடியும் என்பதால் இதுபற்றி தீவிரமாக அலட்டிக்கொள்ள வேண்டியது இல்லை.
-
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
ஒரு சுறா கோபப்பட்டால் உங்களுக்கு இன்டர்நெட் கிடைக்காது.. ஹாட்ஸ்பாட் சென்னை தான் தெரியுமா -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications